தேவன் கட்டுகிறார்

Share this page with friends

1.நிர்மூலமானவைகளை கட்டுகிறார்

எசேக்கியேல் 36:36 to 38
கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்து கொள்வார்கள், கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.

2.கட்டுண்டவர்களை விடுவித்து அவர்களை கட்டுவிக்கிறார்

எரேமியா 33:7,8
நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து, 8 அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்.

3. தமக்கு பிரியாமனதை கட்டி எழுப்பி அதை பராமரிக்கிறார்
ஏசாயா 5:1,2
1 இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன், என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.
2 அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார், அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.

4.பாழாய்கிடக்கிறவைகளைக் கட்டியெழுப்புகிறார்

ஆமோஸ் 9:14
என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன். அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.

15 அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன். நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப் படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

Message by
Pr.J.A.Devakar . DD
(ODISHA MISSIONARY)
IMFM CHURCH
*Junagarh, Kalahandi , Odisha.
*9437328604*
imfm Radio (on playstore)
www.imfm.in


Share this page with friends