தேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே!

Share this page with friends

இது ஏதோ பழைய ஏற்பாட்டு வசனம் என்று நினைத்து விடாதீர்கள்! இது எபிரேய நீருபம் 12 ஆம் அதிகாரம் 29 ஆவது வசனத்தில், பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தெய்வீக வல்லமைக்கு சரி நிகராக, ஏன்? இன்னும் அதிக வல்லமை கொண்ட அர்த்தத்தில் சொல்லப்பட்ட கிறிஸ்துவின் குணாதிசயம் நிறைந்த ஒரு வேத வசனமாக இருக்கிறது.

முந்தைய வசனத்தில் ஆராதனைக்கு ஒப்பிட்டு இந்த வசனம் தொடர்பு படுத்தி எழுதப்பட்டு உள்ளது. நான்கு விதமான சுபாவத்தொடு ஆராதிக்க வேண்டும் என்று கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட விசுவாசிகளுக்கு சொல்லப்படுகிறது.

ஒன்று, தேவ பயத்தோடு அவரை ஆராதிக்க வேண்டும்.
இரண்டு, பரிசுத்தம் அல்லது பயபக்தியோடு ஆராதிக்க வேண்டும்.
மூன்று, கர்த்தருக்கு பிரியமாக அவரது விருப்பத்தின் படி ஆராதிக்க வேண்டும்
நான்கு, கிருபையை பற்றி கொண்டு ஆராதிக்க வேண்டும்.

ஏனெனில் நமது தேவன் பட்ச்சிக்கும் அக்கினியாக இருக்கிறாரே! என்று தான் இதன் பொருள். அப்படியென்றால் கர்த்தர் தம்முடைய ஆராதனையில் மிகவும் கவனம் உடையவராக இருக்கிறார் என்று இந்த அவருடைய சுபாவம் நமக்கு வெளிப்படுத்துகிறது. அவர் கிருபை உள்ளவர் தான்!, அவர் அன்பு உள்ளவர் தான்!, அவர் இரக்கம் தயவு உள்ளவர் தான்! அதற்காக அவரது மற்ற சுபாவங்கள் இல்லையென்று ஆகிவிடாது. அவரது பரிசுத்த, நீதியின், பராக்கிரம வல்லமையின், மகத்துவ சுபாவங்கள் இன்னும் அதிக வல்லமையான நிலையில் இன்றும் கிரியை செய்கின்றது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவர் தனது ஒரு சுபாவத்தில் சரியாக இருந்து விட்டு இன்னொரு சுபாவத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கோட்டை விடுவதில்லை. ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாரதவராக இருக்கிறார்.

இந்த வசனத்தின் யதார்த்தம் புரிய வேண்டுமெனில் பழைய ஏற்பாட்டில் கிட்டத்தட்ட நான்கு இடங்களில் தமது ஆராதனை மற்றும் அதற்கு என்று தெரிந்து கொள்ளப்பட்ட வர்கள் விசயத்தில், தேவன் பட்ச்சிக்கும் அக்கினியாக தம்மை வெளிப்படுத்தி இருக்கிறார். அவற்றை புதிய ஏற்பாட்டு வெளிச்சத்தில் ஒப்பிட்டு தியானிக்க கர்த்தர் உதவி செய்வாராக!

A. அந்நிய அக்கினியை பலிப்பீடத்தில் கொண்டு வந்த நாதாப் அபியூப் விசயத்தில் தேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக தம்மை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பிதாவை, கிறிஸ்துவின் நாமத்தில் அவர் முன்னிலையில், பரிசுத்த ஆவியோடும், உண்மையோடும், முழு பெலத்தோடும், அவரில் அன்பு கூர்ந்து ஆராதிக்க வேண்டும். இதற்கு அப்பாற்பட்டு நமது விருப்பப்படி, இப்பிரபஞ்சத்தில் உள்ள முறைகளை உள்ளே புகுத்தி எந்த ஆராதனை செய்தாலும் அது புத்தியுள்ள ஆராதனை ஆகாது.

புத்தியுள்ள நான்கு வழிமுறைகளை ஆரோனின் வம்சத்தாருக்கு ஆர்தனைக்கு என்று கர்த்தர் கொடுத்தார்.

  1. பலிகளை சந்து சந்தாக வெட்டி கட்டைகளில் அடுக்கி வைக்க வேண்டும். இது சரி செய்ய வேண்டியவைகளை அறிக்கை செய்து ஒப்புரவாக அழைக்கும் செயல்.
  2. பின்னர் இவைகளை தகனிக்க வேண்டும். இது பாவங்கள் நீங்கி நாம் பெற்ற பாவமன்னிப்பு நிச்சயத்தை குறிக்கிறது.
  3. ஆசாரியன் தனக்கு என்று சர்வாங்க தகணபலியிட்டு. இது பாவபரிகாரியாக இருக்கும் கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசம் நம்பிக்கையை குறிக்கிறது.
  4. தகன பலியின் மேல் தூபவர்க்கம் போட வேண்டும். இது விண்ணப்பம் மற்றும் தாழ்மையோடு கர்த்தரின் சமூகத்தில் வருவதை இது குறிக்கிறது. ஏனெனில் கருத்தோடு எலியா ஜெபித்த போதும், சாலோமன் கெஞ்சி விண்ணப்பம் பண்ணிய போதும் பலிபீடத்தில் அக்கினி இறங்கி பலியை பட்ச்சித்து போட்டது என்று வசனத்தில் பார்க்கிறோம். கெஞ்சி ஜெபிக்கும் விண்ணப்பம் இல்லாத ஆராதனை வெறுமை என்று அறிந்து கொள்ள வேண்டும்.

புத்தியுள்ள ஆராதனையில் நமது இருதயத்தை ஆராந்து பார்க்கும் இந்த சுயபரிசோதனை செயல் வெளிப்படும். தேவன் நமது சரீர அசைவுகளை விட உள்ள அசைவுகளை தான் அதிகமாக இந்த ஆவியோடும் உண்மையோடும் அவரில் அன்பு கூர்ந்து ஆராதிக்கும் ஆராதனையில் கர்த்தர் விரும்புகிறார். ஏனெனில் நமது தேவன் பரிசுத்தத்தில் சமரசம் செய்யாத பட்ச்சிக்கும் அக்கினியாக இருக்கிறார்.

கர்த்தருடைய விருப்பத்தை, கர்த்தருடைய ஆராதனையை அவருக்கு பிரியமாக அவர் வழிகளில் செய்யாமல் நமது மாம்ச ஆசைகளை நிறைவேற்ற தேவன் விரும்புகிறார் என்று கற்பனை பண்ணி எந்த உலக பழக்கங்கள், உலக முறைகள், உலக styles, modernity என்ற பெயரில் ஆராதனைக்கு உள்ளே நுழைத்தாலும் தேவன் அவைகளை பொறுத்து கொள்ள மாட்டார் ஏனெனில் நமது தேவன் பட்ச்சிக்கும் அக்கினியாக இருக்கிறாரே! ஏரோது எப்போது தேவ மகிமையை திருடினானோ அப்போதே தேவ தண்டனையை பெற்று தன் முடிவை பெற்று கொண்டான். எனவே பலவான்களின் புத்திரரே கர்த்தருக்கே மகிமையை செலுத்துங்கள்.

B. உடன்படிக்கை பெட்டிக்கு முன்னே மூன்று நாட்கள் பிரயாணம் செய்து சற்று இளைப்பார இடம் தேடுகையில் முறுமுறுத்து முறையிட்ட ஜனத்தின் நடுவில் தேவன் பட்சிக்கும் அக்கினியாக செயல்பட்டார்.

உடன்படிக்கை பெட்டி கர்த்தருடைய சமூகத்தின் வார்த்தையை வெளிப்படுத்துகிறது. கர்த்தருடைய வார்த்தை எப்போது நமக்கு முறுமுறுப்பை அல்லது முரையிடுதலை கொண்டு வருகிறதோ அப்போது தேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். வசனம் எங்கு எளிதாகிறதோ அங்கு நிர்விசாரம் பெருகும். எங்கு நிர்விஸாரம் பெறுகிறதோ அங்கு மீறுதல் வருகிறது.

எனவே சத்தியம் இல்லாத இடத்தில் அல்லது சத்தியத்திற்கு முன்பாக யார் முறுமுறுத்தாலும் அங்கு தேவன் பட்ச்சிக்கிற அக்ககினியாக செயல்படுகிறார். இந்த முறையிடுதல் பாளயத்திற்கு பின்னால் இருந்த ஜனத்தின் ஒரு பகுதியை கர்த்தரின் சமூகத்து அக்கினியை கொண்டு பட்ச்சித்து போட வைத்தது என்று வாசிக்கிறோம்.

சத்தியம் இல்லாத ஆராதனையும், சத்தியத்திற்கு விரோதமாக முறையீடு செய்து அதை நியாய படுத்தும் ஆராதனையும், அதை கைகொள்ளாமல் மாறுபாடான இருதயம் கொண்ட ஆராதனையும் தேவன் விரும்பாத ஆராதனை ஏனெனில் தேவன் அவரின் வசனத்திற்கு நடுங்கும் இருதயம் உள்ளவர்களை தான் நோக்கி பார்க்கிறார்.

கர்த்தர் ஒருபோதும் தனது ஆராதனையை பெறுவதற்கு தம் வார்த்தையை மீறி செயல்பட அனுமதிப்பது இல்லை. ஏனெனில் அவர் பொய் சொல்ல மனிதரல்லவே! முகசுதிக்காக தமது வார்த்தையை விட்டு கொடுக்கும் மனிதர்கள் போன்று அவரது வார்த்தையை மீறி நமது flattery வார்த்தையால் மற்றும் கை நழினத்தால் உண்டாகும் ஆராதனையை அவர் விரும்புவார் என்று எடுத்து கொள்வது எத்தனை அபத்தம் என்பதை புரிந்து கொண்டால் அது தான் உண்மையுள்ள ஆராதனை ஏனெனில் நமது தேவன் பட்ச்சிக்கும் அக்கினியாக இருக்கிறாரே!

C. பிரபலமானவர்களை சேர்த்து கொண்டு கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட கர்த்தருடைய ஊழியர்களை எதிர்த்து நின்று மிஞ்சி போன கோராகு புத்திரர் நிமித்தம் அவர் பட்ச்சிக்கும் அக்கினியாக வெளிப்பட்டார்.

ஆராதனை நடத்துவதற்கும், சபையை நடத்துவதற்கும் கர்த்தர் தன்னால் தம்மோடு தங்கள் சொந்த வேலைகளை/வலைகளை விட்டு தம்மால் தெரிந்து கொண்ட சபைக்கு முன்னால் நின்று, நடுவில் நின்று சபையை வழிநடத்த ஏற்படுத்த பட்டவர்களுக்கு விரோதமாக நின்று எங்களுக்கு எல்லாம் தெரியும், நாங்களும் வசனம் படித்து இருக்கிறோம் என்று எதிர்த்து நின்றாலும் அது தேவனை எதிர்த்து தான் நிற்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய ஏற்பாட்டில் கர்த்தர் தமது ஊழியர்களை அக்கினி ஜுவாலை ஆக பயன்படுத்துகிறார் என்று எழுத பட்டு உள்ளது. அக்கினிமயமானவரின் வலது கையில் அவர்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சபையின் ஊழியர் எப்படிபட்டவராக இருந்தாலும் அவரை அப்படியே கிறிஸ்துவில் ஏற்று கொண்டு அவரை விசேஷமாக கருத வேண்டும். இன்று அநேக விசுவாசிகள் தங்கள் சபைகளில், உலகத்தில் பிரபலமடைந்தவர்கள் என்று கருதப்படுகிற கூட்டத்தினரிடம் சேர்ந்து நின்று சபை ஊழியர்களை அற்பமாக எண்ணி கவிழ்க்க பார்க்கிறார்கள். கவனம் தேவை. யாரெல்லாம் தங்கள் சபையின் ஊழியர்களை விசேஷமாக கருதி செயல்படுகிறார்களோ அவர்கள் தான் மெய்யாகவே ஆசீர்வதிக்க பட்டவர்கள்.

இன்னொரு கூட்டத்தினர் பிரபல ஊழியர்களோடு தங்களை அடையாள படுத்தி காண்பிக்க தங்கள் ஊழியர்களுக்கு வரங்கள் இல்லை, கிருபை இல்லை என்றும் அற்பமாக எண்ணுவார்கள். பிரபலமான ராஜாக்களை அழித்தவரை துதியுங்கள் என்று எழுதப்பட்டு உள்ளது. கிறிஸ்துவே ஆராதனையில் பிரபலம் ஆக வேண்டும். ஆராதனையை முன்னிட்டு பிரபலம் ஆக நினைத்தால் அதோ கதி தான். கீர்த்தி புகழ் தானாக வர வேண்டும். அதை செயற்கையாக உருவாக்க கூடாது. கிறிஸ்து பிரபலம் ஆக வேண்டும். சுவிசேஷம் பிரபலம் ஆக வேண்டும். பிரபலம் ஆனவர்களை அல்ல உண்மை உள்ளவர்களை சேர்த்துக்கொள்ள கர்த்தர் வருகிறார். இன்றைக்கு எங்களை எங்கள் சபை போதகர்கள் பயன்படுத்த வில்லை என்று சொல்லி, சபை திறமையை மட்டும் வெளிப்படுத்தும் ஒரு இடம் என்று நினைத்து அந்த கோணத்தில் மட்டும் பார்க்கிறார்கள். நம்மை பயன்படுத்துகிறவர் கர்த்தர். தேவ சுபாவம் தான் நம்மை பயன்படுத்த கர்த்தர் விரும்பும் ஒரே தகுதி ஏனெனில் அதின் அடிப்படையில் தான் தேவ தெரிந்து எடுப்பு செயல்படும். எனவே அடங்கி இருங்கள் அவர் ஏற்ற காலத்தில் உயர்த்துவார். அவசரப்படாதிருங்கள்.

D. எலியா ஜெபித்த பொழுது வானத்தில் இருந்து அக்கினி புறப்பட்டு அகசியாவின் தளபதிகளை படுசித்து போட்டது.

தான் கட்டிலில் இருந்து விழுந்த போது, தான் பிழைப்பேனா? என்று பாகலிடம் கேட்க அனுப்பப்பட்ட ராஜாவின் ஆட்களுக்கு எதிர்கொண்டு போன எலியா, ராஜா கட்டிலில் தானே மரித்து போவான் என்று சொன்னதின் நிமித்தம் எலியாவை கொன்று போட ராஜாவாகிய அகசியவால் அனுப்பப்பட்ட தளபதிகள் தான் இவர்கள்.

பிரமாணத்தை மீறி செயல்படுவதும் அன்றி, அதை உணர்த்தின தீர்க்கதரிசி எலியாவையே கொல்ல பார்த்த இந்த ராஜாவை போன்று தான், சத்தியத்தை சத்தியமாக எடுத்து உரைக்கும் ஊழியர்களுக்கு விரோதமாக செயல்பட்டு அவர்களை செயல்படாமல் தடுத்தால் நாம் பிளைப்போம் என்கிற நப்பாசை நம்மை விட்டு மாரட்டும். அவர் தனது ஊழியர்களை தாங்கி நடத்தி அவர்கள் வார்த்தையின் படி செய்கிறவர் என்பதை அறிந்து கொண்டால் அதுவே கர்த்தருக்கு உகந்த செயல்.

பாவத்தை சரிசெய்யாமல், பாவத்தை உணர்த்தும் போது கோபித்து விட்டு, அதிகார பலத்தில் எது செய்தாலும் அது நிலைப்பதில்லை. முடிவில் அவன் தளபதிகளின் அழிவோடு ராஜாவும் மரித்து போனான்.

எலியாவின் கருத்தான ஜெபம் வானத்தில் இருந்து அக்கினியை கொண்டு வந்து கர்த்தரே தேவன் என்பதையும் வெளிப்படுத்தியது. அதே போல தன்னை காக்கவும் அது உதவியது. அப்போஸ்தலனாகிய பேதிரு பரிசுத்த ஆவியினால் தொடப்பட்ட நாவு கொண்டு சுவிசேஷம் அறிவித்த போது 3000 பேர் இரச்சிக்கப்பட்டது எத்தனை உண்மையோ அதே போல தான் பரிசுத்த ஆவிக்கு முன்பாக பொய் சொன்ன அனனியா சப்பீராலும் அதே பரிசுத்த ஆவியினால் தொடப்பட்ட பேதிருவின் நாவினால் தொடப்பட்டார்கள். எனவே உங்களை நடத்துகிறவர்கள் அதை துக்கத்தோடு அல்ல மனநிறைவோடு செய்ய விட்டு கொடுத்தால், நாத்தன் தீர்க்கன் தன் தவறை உணர்த்தின போது உணர்ந்த தாவீது போன்று செயல்பட்டால் அதுவே கர்த்தருக்கு பிரியம். தாவீதின் வாழ்விலும் ஒருபோதும் அவர் அபிசேசகம் செய்யப்பட்டவர் மேல் தன் கையை போட வில்லை.

எனவே அதிக ஜாக்கிரதையாக இந்த கடைசி காலத்தில் ஆராதனை, சபை, கர்த்தருடைய வசனம், ஊழியம் மற்றும் ஊழியர்கள் விடயத்தில் செயல்படுவோம். கர்த்தருக்கு பயப்படுவோம். பரிசுத்தம் கொள்வோம், கிருபையை பற்றி கொள்வோம், அவருக்கு பிரியமானபடி அவர் விருப்பப்படி, அவர் ஏற்படுத்தின இடத்தில், அவரது வசனத்தின் படி ஆராதித்து அந்த அசைவில்லாத ராஜ்யத்தை பெறுவோம். ஏனெனில் அவர் இன்னொரு தரம் இந்த வானத்தை அசைப்பார். அவர் இன்றும் பட்ச்சிக்கும் அக்கினியானவர் தான். ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாரதவரே!

செலின்


Share this page with friends