கைவிடாத தேவன்

Share this page with friends

சங்கீதம் 37:28
கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை, அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள், துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.

1. அவரை நம்பினவர்ளை(விசுவாசிக்கிறவர்களை) அவர் கைவிட மாட்டார்

ஆதியாகமம் 28:15
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

2. அவருடைய வேலையை (ஊழியம்) செய்கிறவர்களை அவர் கைவிடமாட்டார்

1 நாளாகமம் 28:20
தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி, நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு, தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார், கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.

3. அவரை தேடுகிறவர்களை அவர் கைவிடமாட்டார்

சங்கீதம் 9:10
கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை, ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.


Pr.J.A.Devakar . DD


Share this page with friends