good Ideas for Pastor Church during Lockdown

போதகர்களுக்கான ஊரடங்கு கால ஆலோசனைகள்

Share this page with friends

இக்கட்டான இந்த நாட்களில் கர்த்தர் நம்மை ஊழியத்தில் ஏற்படுத்தி இருக்கிறார் என்பதில் நாம் மிகவும் பாக்கிய சாலிகள் தான். நம்மை யார் கவனிக்காமல் விட்டாலும் அழைத்தவர் உண்மை உள்ளவர். நம் தேவைகளை அவர் நிச்சயம் சந்திப்பார். யாரையும் சாராமல் கர்த்தரை சார்ந்து நிற்க கர்த்தர் இந்த நாட்களில் உதவி செய்வாராக! பொல்லாத இந்த நாட்களை சரியாக பயன்படுத்துங்கள். நாம் பிறருக்கு உதவியாக, ஆறுதலாக இருக்க, உற்சாக படுத்த, நம்பிக்கை ஏற்படுத்த தான் கர்த்தர் நம்மை ஊழியத்தில் ஏற்படுத்தி இருக்கிறார் என்கிற பக்குவம் வரட்டும்.

1) பிறர் மேல் பழிகளை போட்டு இவர்கள் இந்த பாவத்தை செய்ததினால் தான் corona வந்தது என்று யாரையும் குற்றம் சாட்டும் ஊழியம் செய்ய வேண்டாம். குற்றம் சாட்டுகிறவன் விழுந்து போனான். இது இவன் செய்த பாவமும் அல்ல அவன் பெற்றோர் செய்த பாவமும் அல்ல தேவநாம மகிமைக்காக தான் இவைகள் நடக்கிறது என்று தேவ நாம மகிமையை தேடுவோம்.

2) இதற்கு காரணம் தேடி கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆண்டவரிடம் பதில் எதிர்பார்க்காதிருங்கள். அவரிடம் கேள்வி கேட்பவன் யார்? யோபுவின் நண்பர்களை போல இது தான் காரணம் என்று வாதம் பண்ணி கடைசியில் நம் வாயை நாமே ஏன் பொத்தி கொள்ள வேண்டும். கடைசி வரை கர்த்தர் யோபுவுக்கு பதில் சொல்லவில்லை.

3) நான் அப்பவே சொன்னேன் கேட்டீங்களா? உங்களுக்கு இதும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று பந்தம் இல்லாதவர்கள் போல பேசாதிருங்கள். யாரையும் மிரட்டவோ பயமுறுத்துவதோ நமது ஊழியம் அல்ல. இப்போது நம்மையும் கொஞ்சம் நிதானித்து பார்ப்போம். நம்மை நாம் நிதானித்து கொண்டால் நாம் நியாயம் தீர்க்கப் பாடோம். நமது பெலவீனத்தை, குறைகளை, டென்சனை, பிரச்சினைகளை பிறரிடம் வெளிகாட்டாதிருங்கள்.

4) பரிசுத்த ஆவியை போல நான் கண்டிக்கிறேன் கேட்டால் கேளு என்றும் அவரை போல உணர்த்துகிரேன் என்று அவரது ரோலை கையில் எடுத்து கொள்ளாதிருங்கள். அவர் சர்வ வல்லவர் அவர் செய்ய வேண்டியதை அவரிடம் விட்டு விடுங்கள். நாம் அமர்ந்திருந்து கர்த்தர் நல்லவர் என்று அறிந்து கொள்வது நல்லது.

5) Online online என்று அதின் மேல் அதிக நாட்டம் கொண்டு ground level reality யை மறந்து விடாதீர்கள். தேவையின் அடிப்படையில் திரானியின் அடிப்படையில் செயல் படுங்கள். கடன் வாங்கி மக்களிடம் காணிக்கை கேட்டு வாங்கி அதில் முதலீடு செய்து நம்மை எதோ stars நிலைக்கு நாமே கொண்டு போய் விழுந்து விடாதிருப்போம். புகழும் வேண்டாமே! பெயரும் வேண்டாமே! என்று பாடியவர்கள் தான். இருக்கிரவைகள் போதும் என்றும் எண்ணுங்கள். புகழ் பிரபலம் மனதில் வைத்து like share வரும் என்று செய்தியோ பாடலோ perform செய்யாதிருங்கள். Public screen appearances க்கு கொடுக்கிற அதீத முக்கியத்துவம் field மக்களை விசுவாசிகளை விசாரிப்பது குறித்து அறிவு சார்ந்து முக்கியத்துவம் கொடுங்கள். நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

6) ஆடுகளின் நிலையை புரிந்து கொள்ளுங்கள். இன்று அநேக விசுவாசிகள் வேலை யில்லாமல் தங்கள் net card போட்டு நமது நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் இருப்பவர்கள் உண்டு. விசாரியுங்கள். நம்மிடம் வருமானம் இருப்பின் அதை இப்பொழுது விசுவாசிகளுக்கு பயன்படுத்துங்கள். தேவையில் உள்ளவர்கள நிறைய பேர் இருக்கலாம் அதை கவனியுஙகள். வாலிபர்கள் மொபைல் addict aaki கொண்டு இருக்கிறார்கள். இரவில் தவரான அழைப்பில் இருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். வீடுகளில் கருத்து வேருபாடுகள் வருகிறது. அதை உற்று நோக்குங்கள். விசுவாசிகளின் சமூக பொருளாதார மற்றும் உறவு சார்ந்த பிரச்சினைகளை லாக் down அரசாங்க உத்தரவுகளுக்கு உட்பட்டு நேரடியாகவோ அல்லது போன் மூலமாகவோ சரி செய்யுங்கள்.

7) பெரிய போதகர்கள் ஊழியர்கள் இந்த நேரத்தில் வந்து ஜெபம் பண்ணுங்கள் கர்த்தர் நடத்துவார் என்று உங்களுக்கு தொடர்பு இல்லாதது போல பொறுப்பற்றது போல நடந்து கொள்ளாதிருங்கள். உங்கள் பொக்கிஷங்கள் பரலோகத்தில் வர உங்கள் ஸ்தாபன மற்றும் சுதந்திர ஏழை போதகர்கள், மிஷனரிகள் மற்றும் உங்கள் விசுவாசிகளை போசிக்க முன் வாருங்கள். அநேக இடங்களில் ரகசியமாக ஆனேக போதகர்கள் உதவி செய்கிறார்கள். அவர்கள் பாக்கியவான்கள். பிசினித்தனம் வேண்டாம். நாம் கொடுக்கிறதுதினால் அவமானம் பட்டுயிருக்கலாம். கர்த்தர் பார்த்துக்கொள்வார். நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

8) நாமே காலத்தையும் நேரத்தையும் திட்டம் பண்ணாதபடி அவரச திட்டம் போடாதபடி அவருடைய கரத்தில் ஒப்பு கொடுத்து அவரது நேரத்திற்கு பொறுமையோடு காத்திருப்போம். காலங்கள் அவர் கரத்தில் இருக்கிறது. காலத்தை நிதானித்து செயல் படுவோம். காலத்தையும் நேரத்தையும் அறியும் அறிவை அவர் தருவாராகா! Let us not fix date and plan on behalf of God and people. Let him fix the date and determine what He wants to do.

9) இந்த நேரத்தில் தான் நமது விசுவாசம் சொதிக்கபடும். எலியாவின் விசுவாசத்தை விசுவாசிகளுக்கு போதித்து இருப்போம். அவர்களை போசிப்பவவர் நம்மையும் நடத்துவார் என்று விசுவாசியுங்கள். தேவைகளுக்கு மனிதனையோ விசுவாசிகளையோ சாரதிருங்கள். காணிக்கைகளை நம்பாதிறுங்கள். யூதாஸ் பணப்பை வைத்திருந்தாலும் பேதுருவின் துண்டில் மீனில் தான் இருந்தது கிறிஸ்துவின் வரிபணம் இருந்தது. அவர் நிச்சயம் நடத்துவார்.

10) கிறிஸ்துவின் வருகை அடையாளங்களை குறித்து அதிகம் பேசி விசுவாசிகளை பரிசுத்த மாக்குதல், ஆயத்தம் ஆக்கும் பணியை செய்யுங்கள். பயமூருத்தாதிருங்கள். நம்பிக்கை கொடுங்கள். ஆர்வத்தை துண்டுங்கள். சோம்பேறி விசுவாசிகள் எதாவது creative வேலைகளை தேடி கண்டுபிடிக்கப் உற்சாக படுத்துங்கள்.

11) எல்லாவற்றிலும் ஷோத்திரம் செய்யுங்கள். கர்த்தர் மேல் பாரத்தை வையுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து சிலரை ஆக்கினியின் வாயிலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள். சரியான நேரத்தில் ஆகாரம் புசித்து காத்து கொள்ளுங்கள். தேவைக்கு உபவாசம் இருங்கள். உங்கள் பகுதிக்கு watch Man aaka இருங்கள். உங்கள் குடும்பத்தில் நேரத்தை தேவைக்கு செல்வடுங்கள். பிள்ளைகளுக்கு நெருக்கடி காலங்களை எப்படி சந்திப்பது என்று கற்று கொடுங்கள். உங்கள் குடும்ப உறவு நோவாவின் பேழைக்குள் பாதுகாப்பாய் இருந்தது போல இருக்கட்டும்.

12) அவர் நாமம், அவரது இரத்தம், அவரது பரிசுத்த அழைப்பு மற்றும் அவரது வசனம் முத்திரையாக பெற்ற நாம் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாத படி அவரில் மறைந்து செயல்படுவோம். கர்த்தர் நல்லவர் என்று ருசி பார்க்க முடியும்.

செலின்


Share this page with friends