தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க அரசாணை வெளியீடு

Share this page with friends

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

19, நவம்பர் 2021

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. விரைவில் கொரொனா அலை பரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பொது இடங்கள், மார்க்கெட், தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு பொதுச் சுகாதார திட்டத்தில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

குறிப்பு: இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிளக அரசு வலியுறுத்தியுள்ளது. மீறும்பட்சத்தில் அரசு சார்பில் நடவடிக்கையெடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே நமது ஊழியர்களும், போதகர்களும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். மேலும் சபை விசுவாசிகளையும் ஊக்கப்படுத்துங்கள். நம்மையும் நம் சமூகத்தையும் காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணை விரைவில் எப்பொழுது வேண்டுமானாலும் நடைமுறைக்கு வரலாம்.

இந்த செய்தியை உங்கள் நல விரும்பிகளுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி

நன்றி: டி.சி.என் மீடியா செய்தி பிரிவு

மக்கள் அதிகம் வாசித்தவை:

 • தேவன் பயன்படுத்திய பாத்திரம்
 • நாம் சுவிசேஷம் பிரசங்கிக்கவேண்டும்
 • இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் என்ற பாடல் எழுதப்பட்ட பின்னணியம் தெரிஞ்சா கண்ணீீர அடக்க முடியாது
 • PLAY பண்ணின பிலேயாம்! வித்யா'வின் பதிவு
 • பெந்தேகோஸ்தே திருநாளில் அதிர்ச்சி செய்தி!
 • தரிசன தலைவர்கள் சிலரின் ஜெப நேரங்கள்
 • தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தோ்தலை பேராயர் ரத்து செய்தது செல்லாது: திருச்சபை
 • ஞானஸ்தானத்தை பிரதிபலிக்கும் பழைய ஏற்பாடு சம்பவங்கள்
 • ஊரடங்கு நாட்களில் கிறிஸ்தவ போதகர் மற்றும் விசுவாசிகளின் கனிவான கவனத்திற்கு
 • இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் பணியாற்றிய சகோ. அப்பாத்துரை அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்...

 • Share this page with friends

  Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

  Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662