இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களை சேர்ந்த தலைமை மருத்துவருக்கு தமிழக ஆளுனர் விருது வழங்கி பாராட்டு

Share this page with friends

நெல்லை. 30, 7.2020.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அறங்காவலர் டாக்டர். அன்புராஜன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த மருத்துவர் விருதினை தமிழக ஆளுனர் வழங்கினார்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அரசு மற்றும் தனியார் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

கரோனா பெருந்தொற்றின் போது தன்னலம் கருதாது தியாக மனப்பான்மையோடு சிறப்பாக மக்களின் உயிரை காப்பாற்றுவதற்கு உதவியாக இருந்த அரசுத்துறை மருத்துவர்களும். தனியார் துறை மருத்துவர்களும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் 2021 ஆம் ஆண்டுக்கான விருதை வழங்கி கவுரவித்தது.

சென்னையில் நடத்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விருது வழங்கி கவுரவித்தார்.

இந்திய மருத்துவ கழகத்தை சேர்ந்த தனியார் மருத்துவர்கள் 5 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவர்களில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் அன்புராஜன் அவர்களும் ஒருவராவார்.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் அறங்காவலரும், திருநெல்வேலியில் அமைந்துள்ள பீஸ் அறக்கட்டளை மற்றும் பீஸ் கெல்த் சென்டர் மருத்துவமனையின் தலைமை மருத்துவராகவும் பணியாற்றுபவர் மருத்துவர். அன்புராஜன்.

கரோனா காலத்தில் தனியார் மருத்துவ சேவைகளை நெல்லை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைத்து செயல்படுத்தியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

சிறந்த மருத்துவர் என்னும் நிலையில் உயர்ந்து விருது பெற்ற கிறிஸ்தவ இயக்க மருத்துவரை தமிழ் கிறிஸ்தவ சமூகம் பாராட்டி வருகிறது.

On 29th July, Our Executive trustee of Jesus Redeems Ministries, Dr. Anburajan, has been awarded by “TAMILNADU MEDICAL COUNCIL AWARD 20-21” for his selfless exemplary services to the public during Covid 2019 Pandemic crisis, coordinated all the private hospitals in the southern districts of Tamilnadu as a nodel officer. Honorable His Excellency Governor of Tamilnadu Thiru Banwarilal Purohit was the chief guest of the function, who appreciated the Doctors and gave away the awards in the presence of TMC President Dr.

Senthil | awards | pandemic 2019 | tamilnadu medical council award | Anburajan Rajanayagam


Share this page with friends