loving God

தேவன் உங்களுக்கு வெளிப்படுகிறாரா?

Share this page with friends

தேவன் உங்களுக்கு வெளிப்படுகிறாரா?

வெளிப்பாடு – (REVELATION) என்றால், தேவன்1 கொரி 2:10 தம்மைப்பற்றி ஜனங்களுக்கு வெளிப்படுத்துவது ஆகும். தேவன் தம்முடைய சுபாவம், இரட்சிப்பைக் குறித்த தமது திட்டம் ஆகியவற்றை மனுஷருக்கு பல விதங்களில் வெளிப்படுத்துகிறார்.

தேவன் ஆவியாக இருக்கிறார். அவர் பரிசுத்தமுள்ளவர். மனுஷருடைய கண்களினாலும், பாவமுள்ள மனதினாலும் தேவனை தரிசிக்க முடியாது. ஆனாலும் தேவன்
மனுக்குலத்தின்மீது கிருபையாக இருந்து மனுஷருக்கு தம்மைத்தாமே வெளிப்படுத்துகிறார்.

இயற்கையின் மூலமாகவும், மனுஷருடைய மனசாட்சியின் மூலமாகவும் தேவன் மனுஷருக்கு நன்மை, தீமையை வேறுபிரித்து காண்பிக்கிறார். தேவன் சர்வஞானம்
உள்ளவர். அவருடைய மகிமையை எல்லோருக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார் (சங் 19:1-6).

இயேசு கிறிஸ்து மூலமாக தேவன் தம்மை மனுஷருக்கு பரிபூரணமாக
வெளிப்படுத்தியிருக்கிறார். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்” (எபி 1:1-2)

“தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவா 1.18),

“அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ
அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?” (யோவா 14.9),

“நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை
ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து,
நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்” (யோவா 17:8).

“ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப்
பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே
கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்” (1பேது 3.18),

இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களை தெரிந்தெடுத்து தம்முடைய மரணத்தையும், தம்முடைய உயிர்த்தெழுதலையும் மனுஷருக்கு உபதேசம் பண்ண பயிற்சி கொடுத்தார்.

அவர்கள் தேவனுடைய சபையை ஸ்தாபித்து புதிய ஏற்பாட்டுப் புஸ்தகங்களை எழுதினார்கள். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கண்ணாரக்கண்ட அவர்களுடைய வார்த்தைகளை நாம் விசுவாசிக்கவேண்டும்.

“பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள்
உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்” (2பேது 3:2),

மேலும் பரிசுத்த வேதாகமத்தில் இருக்கிற ரகசியங்களை தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தேவன் தனித்தனியாகவும் வெளிப்படுத்துகிறார். அவருடைய வார்த்தைகளை வாசித்து தியானிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் அப்படிப்பட்ட பரலோக ரகசியங்களை வெளிப்படுத்துவார். அது எதற்கு என்றால் அந்த காரியங்களுக்கு நம்மை கீழ்ப்படியக் செய்து, நித்திய ஜீவனுக்கு நாம் ஆயத்தமாக வேண்டும் என்பதே…

தேவன் கனவுகள் வழியாக சில காரியங்களை வெளிப்படுத்தக் கூடும்.
தேவன் சிலருடைய பிரசங்கங்கள் வழியாக தம் சித்தத்தை வெளிப்படுத்தக் கூடும்.
நாம் திடீரென சந்திக்கும் சில செய்திகள் வழியாக நம்மிடத்தில் சில காரியங்களை தேவன் வெளிப்படுத்தக் கூடும்.
ஜெபிக்கும்போது வேத வசனத்தை தியானிக்கும் போது சில தரிசனங்கள் வழியாக சில காரியங்களை தேவன் வெளிப்படுத்தக் கூடும்.
ஆராதனை வேளையில் பாடல்கள் வழியாகவும் தேவன் தம் சித்தத்தை வெளிப்படுத்தக் கூடும்.

இதெல்லாம் நாம் தேவனிடத்தில் எந்த அளவுக்கு தொடர்பில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது. ஏனெனில், நாம் தேவனுடைய அசைவைக் கூட புரிந்து கொள்ளுகிற பிள்ளைகளாக இருந்தால், அவர் நமக்கு வெளிப்படுவதும், அவர் நம்மோடு பேசுவதையும், நாம் புரிந்து கொள்வது, வெகு இயல்பாக இருக்கும்… நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.


(1 கொரி 2:10) ஆமென்!

GRACE India Ministries


Share this page with friends