உள்ளத்தில் நல்ல உள்ளம் | Good thoughts about Good Life

Share this page with friends

1) ஒருவர் சொன்ன உண்மையை முதலாவது பார், அதனை சொன்னது யார் என்பதை பின்னர் பார்..  

2)  ஒரு கருத்தை சொன்னது பிரபலமானவரா என்பதை அல்ல, அவர் சொன்ன கருத்து பிரோஜனமானதா என்பதை முதலாவது பார்..  

3) ஒருவர் நல்ல கருத்தை எத்தனை முறை சொன்னார் என்பதை அல்ல,  அவர் சொன்னதை நீ எத்தனை முறை பின்பற்றினாய் என்பதைப்பார்..  

4) ஒருவர் சொன்ன நல்ல கருத்தை சொன்னவரே பின்பற்றாவிட்டாலும் பரவாயில்லை, அது நல்ல கருத்து என்றால் நீ அதை அவசியம் பின்பற்று..  

5) ஒருவர் சொன்ன கருத்துகளில் ஒரு சில காரியங்கள் சரியில்லை என்பதற்காக அவர் சொன்ன எல்லாவற்றையும் சரியில்லாதது என்று ஒதுக்கி விடாதே..

6) ஒரு நல்ல கருத்தை சொன்னது நண்பனா எதிரியா என்று பாராதே, அவர் சொன்னது உனக்கு நலமா நலமற்றதா என்பதை மட்டும் பார்..  

7) ஒருவர் சொன்ன கருத்து உன் கருத்தோடு ஒத்துப்போகிறதா என்று அல்ல, அது உண்மையோடு ஒத்துப் போகிறதா என்று பார்..

8) ஒருவரை உனக்குப் பிடிக்காவிட்டால் அவர் சொல்வது வேத வாக்காகவே இருந்தாலும் உனக்கு அது சாத்தான் வேதம் ஓதுவது போலவே இருக்கும். அதனால் நீ தான் நல்ல பலனை இழக்கின்றாய்..

9) நல்லதை சொன்னவரை பாராட்ட விட்டால் அவருக்கு கஷ்டம் ஒன்றும் இல்லை, ஆனால் நீ தான் நல்லதை பாராட்டும் நற்பண்பை நஷ்டபடுத்தியுள்ளாய்.  

10) நண்பனின் நல்ல கருத்தை உரத்த சத்தத்தோடு பாராட்டு, விரோதியின் நல்ல கருத்தை உள்ளத்திற்குள்ளாவது பாராட்டு..  

11) நல்லவர்கள் சொன்னதை எல்லாம் பாராட்டுவதற்கு அவர்கள் மரிக்கும் வரை காத்திராதே, மரித்த பின் கூறி பயனேதுமில்லையே..  

12) உன்னுடைய கருத்தை சொல்லும் முன்பு பலமுறை யோசி, பிறர் கருத்தை கேட்ட பின்பு சில முறையாகிலும் யோசி..  

ஐீவநீரோடை இதழ் (ஏப்ரல், மே, ஜூன் 2020)

இந்த குறிப்புகள் உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால், கீழேயுள்ள சமூக வலை தளங்களின் பட்டன்களை அழுத்தி பகிரவும்.


Share this page with friends