பச்சைமரப் பணக்காரன்! வித்யா’வின் விண் பார்வை

Share this page with friends

“கொடிய பலவந்தனான ஒரு
துன்மார்க்கனைக் கண்டேன்,

அவன் தனக்கேற்ற நிலத்தில்
முளைத்திருக்கிற
பச்சைமரத்தைப் போல்
தழைத்தவனாயிருந்தான்”.
 

“ஆனாலும் அவன்
ஒழிந்துபோனான்:
பாருங்கள், அவன் இல்லை;
அவனைத் தேடினேன்,
அவன் காணப்படவில்லை”.
 
தாவீதுராஜா 37 வது
சங்கீதத்தை
இப்படி முடிக்கிறார்
 

இரண்டு விதமான
மக்கள் கூட்டம் உண்டு.

இவர்களுக்கு
சம்பவிப்பது என்ன?
 
முதலாவது
பவர்புல்லான
பச்சைமரப் பணக்காரன்


இரண்டாவது

நேர்மையான மனிதன்
என்று பெயர் பெற்ற
உத்தமன்


நீ உத்தமனை நோக்கி,
செம்மையானவனைப்
பார்த்திரு;
அந்த மனுஷனுடைய
முடிவு சமாதானம்

பச்சைமரப்
பணக்காரனுக்குப்
பவர்புல்லான பாதாளம்


உத்தமனுக்கு
உள்ளம் நிறைந்த
சமாதானம்


பச்சைமரப் பணக்காரர்கள்
உலகத்தில் ஆழமாக
வேர்கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் தங்களுக்கேற்ற
நிலத்தில் முளைத்திருக்கிற
பச்சைமரத்தைப் போல்
தழைத்திருக்கிறவர்களாய்
இருக்கிறார்கள்.

அவர்கள்
உறுதியாகவும்
உரமாகவும்
உயரமாகவும்

வளர்ந்துள்ளார்கள் 

திடீரென்று ஒருநாள் பலத்த
புயல்காற்று வீசியது
மலைகளில் உள்ள
மரங்களெல்லாம்
ஆட்டம்கண்டது.
 
இந்தப் பச்சைமரமானது
என்னதான் உறுதியாகவும்
உயரமாகவும்
வளர்ந்திருந்தாலும்
புயல்காற்றுக்கு
தாக்குப்பிடிக்க முடியாமல்

சடாரென்று
ஒடிந்து விழுந்தது.

 
காரணம்
இந்த மரத்தின் வேர்
ஆழமாகப் போகவில்லை.

 
ஒரு மரத்திற்கு வேர் என்பது
மிகவும் முக்கியமானது.
 
இதுதான் பச்சைமரப்
பணக்காரனின் முடிவு.

 
அவனது வேர் பகுதி
மிகவும் மேலோட்டமானதாக
இருந்துள்ளது.
ஆழமாகச்செல்லவில்லை.

வெளியே பசுமையாகவும்
உள்ளே அலங்கோலமாகவும்
இருந்துள்ளான்

ஐசுவரியவன் – லாசரு
உவமையில் காணப்படும்
ஐசுவரியவானைப்
போல பகட்டாக
இருந்துள்ளான்
பரிசுத்தமாக வாழவில்லை
பரிசுத்தரைக் அறியவுமில்லை
 
தாவீதுராஜா சொல்லுகிறார்;
இந்த உலகம் என்கிற
தங்களுக்கேற்ற பச்சையான
நிலத்தில் பச்சை மரத்தைப்
போல என்னதான் தழைத்து

உழைத்து செழித்து
வேர் விட்டு ஓஹோ என்று
வளர்ந்திருந்தாலும்
அவனுக்குப் பாதுகாப்பு இல்லை

இந்த உலகத்தில் எல்லாமே
தாற்காலிகமானதுதான்.
 
அதே நேரத்தில்
நீங்கள்
ஆண்டவராகிய
இயேசுவுக்குள்
வேர்கொண்டவர்களாய்

இருப்பீர்களானால்
இந்த உலகத்திலும்
உங்களுக்கு
உன்னதமானவரின்
பாதுகாப்பு உண்டு
அதே வேளையில்
நித்திய ஜீவனும்
உங்களுக்கு வாக்குப்
பண்ணப்பட்டிருக்கிறது. 

 
உலகமெங்கிலும்
பரந்து விரிந்து
கொடிகட்டிப் பறக்கிற
NUMBER ONE
பச்சைமரப்
பணக்காரர்களைப்

பார்த்து பொறாமை
கொள்ள வேண்டாம்

இந்தப் பச்சைமரப் பணக்கார
கூட்டத்திற்கு என்ன நடக்கிறது
என்பதை பற்றியும் கவலைப்
படவேண்டாம்.
 
அவர்களுக்கு என்ன நடக்கும்?
அவர்களது முடிவு என்ன? என்பதை
தேவன் சங்கீதக்காரன் மூலமாக
எழுதிவைத்திருக்கிறார்
 
ஆனாலும் அவன்
ஒழிந்துபோனான்:
பாருங்கள், அவன் இல்லை;
அவனைத் தேடினேன்,
அவன் காணப்படவில்லை

 
உலகமும் அதின்
இச்சையும் ஒழிந்துபோம்;
தேவனுடைய சித்தத்தின்படி
செய்கிறவனோ
என்றென்றைக்கும்
நிலைத்திருப்பான்

 
ஒவ்வொரு நாளும்
ஆண்டவருக்குள் ஆழமாக
வேர்கொண்டு
உயரமாக
வளரவேண்டும் 

உத்தமனாக
உயர்ந்து நிற்கவேண்டும்.

 
ஆகையால்,
நீங்கள் கர்த்தராகிய
கிறிஸ்து இயேசுவை
ஏற்றுக்கொண்டபடியே,
அவருக்குள்
வேர்கொண்டவர்களாகவும்,
அவர்மேல்

கட்டப்பட்டவர்களாகவும்,
அவருக்குள்

நடந்துகொண்டு,
 
நீங்கள்

போதிக்கப்பட்டபடியே,
விசுவாசத்தில் உறுதிப்பட்டு,
ஸ்தோத்திரத்தோடே
அதிலே பெருகுவீர்களாக
“.
(கொலோ. 2: 6,7)

நல்லாசான்
ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
இயக்குனர்,
தமிழ் கிறிஸ்டியன் நெட்ஒர்க்
வானொலிச் செய்தியாளர்,
ஆறுதல் FM
91-77080 73718 – எண்னைத் தொட்டு
என்னுடன்
பேசலாம் (WhatsApp)

மக்கள் அதிகம் வாசித்தவை:

 • LOCKDOWN in நோவாவின் நாட்களில்
 • இயேசு கிறிஸ்துவின் அதிகாரங்கள் - ஈஸ்டர் பிரசங்க குறிப்புகள்
 • 2021 இல் பொருளாதாரத்தில் அசீர்வதிக்கபடுவது எப்படி?
 • அருள் மாரி எங்குமாக - பாடல் பிறந்த கதை
 • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்த கிறிஸ்தவ பிஷப்கள்…
 • கடவுள் இருப்பது உண்மையென்றால், ஒருவர் சிறுமியை கற்பழிக்கும் போது அதை ஏன் கடவுள் தடுத்து நிறுத்தவில்ல...
 • அரசியலில் நேர்மையாக இருக்க முடியுமா?
 • குணசாலியான பெண்ணும் பொறுப்புணர்வும்
 • கிறிஸ்தவம் வெள்ளைக்கார மதம் அல்ல - நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் முதல் நூற்றாண்டிலே கிறிஸ்தவம் இந்த...
 • குடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?

 • Share this page with friends

  Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

  Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662