சந்தோஷம்

சங்கீதம் 5:11
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக, நீர் அவர்களைக் காப்பாற்றுவீர், உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
1. கர்த்தரை நம்புகிற கூட்டத்திற்கு சந்தோஷம்
2 இராஜாக்கள் 19:10
10 நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே.
11 இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ? அசீரியா தேசத்தின் பிராதானியின் கேள்விக்கு தேவன் பதில் கொடுத்தார் 2 இராஜாக்கள் 19:35 35 அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான், அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.
2. கர்த்தரை நேசிக்கிற கூட்டத்திற்கு சந்தோஷம்
யோவான் 21:15
அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
(விட்டு சென்ற காரியத்தையும் இழந்ததையும் கர்த்தர் திரும்ப கொடுத்து சந்தோஷபடுத்தினார்)
Message by
Pr.J.A.Devakar . DD
(ODISHA MISSIONARY)
IMFM CHURCH
*Junagarh, Kalahandi , Odisha.
*9437328604*