• Sunday 5 January, 2025 12:26 AM
  • Advertize
  • Aarudhal FM
பிறந்தது புத்தாண்டு! தஞ்சையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

பிறந்தது புத்தாண்டு! தஞ்சையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

  • by Admin
  • Tanjore
  • 20250101
  • 0
  • 38

நள்ளிரவு 12 மணிக்கு 2025-ம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. Hu

தஞ்சாவூர்: தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனை:

நள்ளிரவு 12 மணிக்கு 2025-ம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தஞ்சை மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக விளங்கும் தஞ்சை திருஇருதய ஆண்டவர் பேராலயத்தில் 2025-ம் ஆண்டின் புத்தாண்டு சிறப்பு வழிபாடு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. முன்னதாக உதவி பங்குத்தந்தை அமர்தீப்மைக்கேல் தலைமையில் பேராலய மேடையில் நன்றி வழிபாடு நடைபெற்றது. கடந்த ஆண்டில் பெற்ற நன்மைகளுக்கு நன்றி செலுத்தப்பட்டது.

நள்ளிரவு கூட்டுத் திருப்பலி:

தொடர்ந்து இரவு 11.45 மணிக்கு பேராலய பங்குத்தந்தை பிரபாகர் அடிகளார் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் வகையில் உன்னதங்களிலே கீதம் பாடல் பாடப்பட்டது. அனைத்து மக்களும் கரவொலி எழுப்பி புத்தாண்டை வரவேற்றனர். தொடர்ந்து இறை வார்த்தை வழிபாடு, மறையுறை, நற்கருணை வழிபாடு நடைபெற்றது.

புத்தாண்டு திருப்பலி முடிந்ததும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராலய பங்குத்தந்தை கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இறைமக்கள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு பேராலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நேற்று இரவு புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இரவு 11.15 மணிக்கு 2024-ம் ஆண்டு இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு 2025-ம் ஆண்டு புதிய ஆண்டில் கடவுளுடைய வழிநடத்துதலுக்காக சிறப்பு ஆராதனை நடந்தது. இந்த ஆராதனையை ஆயர் பெஞ்சமின் நடத்தி சிறப்பு செய்தி அளித்தார்.

ஆராதனை முடிந்ததும் அனைவருக்கும் கேக், தேநீர் வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சேகர குழு உறுப்பினர்கள், செய்து இருந்தனர். புத்தாண்டையொட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

வாழ்த்துகளை பரிமாறிய மக்கள்:

தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுருஆலயம், தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயம், குழந்தை ஏசு திருத்தலம், மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், வடக்கு வாசல் அருளானந்தர் ஆலயம், மானம்புச்சாவடி சூசையப்பர் ஆலயம், மாதாக்கோட்டை புனித லூர்து சகாய அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டு கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 2025-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். தஞ்சை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதியிலும் ஏராளமானோர் கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

Source & Credit

இந்த உள்ளடக்கம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களிலிருந்து பகிரப்பட்டுள்ளது.

Summary

English year 2025 was born at 12 midnight. Special prayers were offered in Christian temples in Tanjore district on the occasion of New Year.

Post Tags:

Happy New year 2025