இறுமாப்புக்கு ஒரு ஆப்பு வித்யா’வின் பதிவு

Share this page with friends

நீங்கள் எப்படி?

கடைசி நாட்கள்,

கூடவே இந்த வருடத்தின்
கடைசி நாட்கள்

கொடிய காலங்கள்

மனித உள்ளங்களில்
துர்குணங்கள்
தூரியாடிக்கொண்டிருப்பது
சாதாரணம்.

இதற்கு ஒரு ஆப்பு
வைக்கவில்லையென்றால்
அந்த மனிதனின்
கடைசி நிலை எப்படி இருக்கும்
என்று தெரியுமா?

அறுக்கின்ற மரத்துண்டின்
ஆப்பை அகற்றிய
குரங்குக் கதையைக்
கேட்டதுண்டா?

அப்படித்தான்
அகப்பட்டுக்கொள்ள நேரிடும்

 இதைத்தான்,
“ஆப்பதனை அசைத்து விட்ட
குரங்கு போல”
என்று மக்கள் கூறுவார்கள்.

அகந்தை, ஆணவம்,
பெருமை, கர்வம், மேட்டிமை
இவையெல்லாம் ஒன்று சேர்ந்து
மனதின் அடியில்
உறைந்து கிடக்கும்
துர்குணத்திற்குப் பெயர்தான்
இறுமாப்பு

இப்படிப்பட்ட குணம் யாருக்கு
இருக்கவேண்டும்?
துன்மார்க்கருக்கு.

சங்கீதம் 73:8 சொல்லுகிறது;
அவர்கள் இறுமாப்பாய்ப்
பேசுவார்களாம்.

வீம்புக்காரருடைய கழுத்து
இறுமாப்புள்ள கழுத்தாம்

(சங்கீதம் 75:5)

ஒரு மனிதனின் இதயத்தில்
இறுமாப்பு வளர்ந்து பெருகிவிட்டால்
சீக்கிரத்தில் அவன் அழிவைச் சம்பாதிக்கப்
போகிறான் என்று அர்த்தமாம்
( நீதி 18:12)

புறஜாதிகளுக்கு அதிகாரியாய்
எண்ணப்பட்டவர்களுக்கல்லவா
இப்படிப்பட்ட சிந்தை
இருப்பதற்கு வாய்ப்பு  இருக்கிறது. 

ஆவிக்குரிய வட்டாரத்திலும்
இக்குணம் ஆளுகை செய்கிறதே


ஆண்டவர் இயேசு  சொல்லுகிறாரே
உங்களுக்குள்ளே அப்படி
இருக்கலாகாது
என்று, ( மாற்கு 10:42, 43 )

இதை யாருக்குச் சொல்லுகிறார்?
தம்முடைய சீஷர்களுக்குத்தானே
இந்தப் போதனை!

நீங்களும் இயேசுவின் சீஷர்கள்
என்றுதானே சொல்லிக்கொள்ளுகிறீர்கள்
இந்தப் போதனை உங்களுக்கு வேண்டாமா?

இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால்
இதுவும் ஒருவகை இறுமாப்புதானே

மனுக்குலத்திற்கு அறிவு எவ்வளவு அவசியம்
என்பதை விவிலியம் விரிவாகச் சொல்லியிருக்கிறது

ஆனால், அதையே ஒரு மனிதன் பெரிதாக
நினைப்பானானால்
அவனுக்குள் இறுமாப்பு
வந்துவிடுமே
. (1 கொரி . 8:1)

எவ்வளவு ஜாக்கிரதையாய்
வாழவேண்டியிருக்கிறது?

இறுமாப்பு அடைந்து பிசாசு அடைந்த
ஆக்கினையிலே விழாதபடிக்கு
நூதன  சீஷனாய் இருக்கக்கூடாது
(1 தீமோ.3:6)

அதனால்தான் பரிசுத்தப் பவுல்
மீண்டும் சொல்லுகிறார்

இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய
பேச்சை அல்ல, பெலத்தையே
அறிந்துகொள்ளுவேன்
(1 கொரி. 4:19)

எவர் மீதும் அன்பாய் இருக்கிறவர்கள்
எவர் மீதும் இறுமாப்பாய்
இருக்கமாட்டார்கள்

.(1 கொரி 13:4)

வீணாய் இறுமாப்புக்கொள்ளுகிற
மாம்ச சிந்தை வளர்ந்தால் (கொலோ.2:19)
என்ன நடக்கும் தெரியுமா?

வாக்குவாதம் என்னும் நோய்
பற்றிக்கொள்ளுமாம்
ஆரோக்கியமான வசனங்கள் அவனிடம்
இருக்காதாம்
(1 தீமோ.6:4)

ஐசுவரியவான்களுக்கு உண்டாகிற
நோய் எது தெரியுமா?

இறுமாப்பான சிந்தை.

இது உள்ளத்திலே வளர்ந்து
உயிரைப் பறிக்கும்
(1 தீமோ. 6:17)

இது இவ்வுலக
மருத்துவர்களால் கண்டுபிடிக்க
முடியாது

எந்த வகை ஸ்கேன் எடுத்தாலும்
எந்திரக் கண்களுக்கும் தெரியாது

பாம்புகளைப் பார்க்காத,
அதைக்குறித்து கேள்விப்படாத மனிதர்
யாரும் உலகில் இருக்கமுடியாது
அந்த அளவுக்கு அது பேமஸ்!.

தமிழ் இலக்கியத்தில் இவ்வகைப்
பாம்பு இருப்பதாகக் கேள்விப்பட்டேன்
பாலைவனத்தில் அவை அபூர்வமாக
காணப்படுமாம்

பாம்புகளில் விஷம் இல்லாதது,
நச்சுக் குறைந்தது, அதிக விஷமுள்ளது
என்று பலவகை உண்டு

ஆனால், இந்த வகைப் பாம்பு எப்படி தெரியுமா?
தன் கண்களால் சின்னச் சின்ன ஜீவராசிகளை
உற்றுப்பார்த்தால் போதும்
அந்த ஜீவராசிகள் உடனே செத்துவிடும்.

அதன் விஷம் அதன் கண்களின் கூர்மையான
பார்வையில் வெளிப்படுகிறது
என்ன பயங்கரம் பார்த்தீர்களா?

ஆனால், அதையும் மிஞ்சுவது
இறுமாப்புள்ளவர்களின் பார்வை!


அவர்கள் யாரைப் பார்க்கிறார்களோ
அவர்கள் உள்ளம் செத்துவிடும்.


வாய் இறுமாப்பானவைகளை
பேசவேண்டாம்

நாம் நம்முடைய சுதந்திரத்தை
இறுமாப்பாய் ஆளுகிறவர்களாய் அல்ல
மந்தைக்கு மாதிரிகளாய்
காணப்படுகிறவர்கள்
(1 பேதுரு 5:3)

இந்தப் போதனைகளெல்லாம் யாருக்காக
பைபிளில் போதிக்கப்பட்டிருக்கிறது?

சபைக்கு வெளியில் இருக்கும்
உலகத்தாருக்காகவா? அல்ல.

சத்தியம் பேசும் சத்திய மார்க்கத்தாராகிய
சபையாருக்காகத்தான்


எழுதுகிற என்னை நொந்துகொள்ளாமல்
வாசிக்கிற வேத வசனங்களை கைக்கொள்ளுங்கள்

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

கர்த்தாவே, என் இருதயம்
இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள்
மேட்டிமையுள்ளவைகளுமல்ல;
பெரிய காரியங்களிலும்,
எனக்கு மிஞ்சின கருமங்களிலும்
நான் தலையிடுகிறதுமில்லை.
(சங்கீதம் 131:1,2)

எழுதியவர் :
பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (1939-2021)
+++++++++++++ +++++++++++++++

தொகுப்பு :
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்


Share this page with friends