ஸ்டிரா’ பயன்படுத்த பாதிரியார் கோர்ட்டை அணுகினார்: சிறை நிர்வாகிகள் இரக்கத்தை இழந்துவிட்டார்களா?
ஸ்டிரா’ பயன்படுத்த பாதிரியார் கோர்ட்டை அணுகினார்: சிறைத்துறை நிர்வாகிகள் இரக்கத்தை இழந்துவிட்டார்களா? ப.சிதம்பரம் கேள்வி

சென்னை, 08/11/2020
ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமை களுக்காக போராடிய பாதிரியார் ஸ்டேன் சுவாமி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது நீதிமன்ற, காவலில் உள்ளார். நீதிமன்ற காவலில் உள்ள அவருக்கு உறிஞ்சுகுழாய் (ஸ்டிரா) பயன்படுத்த அனு மதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது
பாதிரியார் ஸ்டேன் சுவாமி தண்ணீர் அல்லது வேறு திரவ ஆகாரங்களை உட்கொள்வதற்கு உறிஞ்சுகுழாய் பயன்படுத் துவதற்கான அனுமதிக்காக, கோர்ட்டை நாடியிருப்பது வருத் தம் அளிக்கிறது. வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கு உறிஞ்சுகுழாய் வழங்க முடியாத அளவுக்கு சிறைச்சாலைகள் இயக்குனர் ஜெனரல் மற்றும் சிறைத்துறை நிர்வாகிகள் மனித இரக்கத்தை இழந்துவிட்டார்களா?
இந்த மனுவுக்கு பதில் அளிக்க தேசிய புலனாய்வு முகமை 20 நாட்கள் அவகாசம் கேட்பது ஏன் உறிஞ்சுகுழாய் மற்றும் மனிதர்களால் அதன் பயன்பாடு குறித்து ஆராய்ச்சி செய்வதற்கு தேசிய புலனாய்வு முகமை குழு அமைக்கப்போகிறதா? நீதிமன்ற காவலில் உள்ள நபர்களை, அவர்கள் குற்றவாளிகள் என கருதும் ஒரு நாடு மனித உரிமைகளை குப்பைக்குழிக்குள் தள்ளுகிறது.