பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்

Share this page with friends

WCF DD (World Christian Fellowship Daily Devotions)

லூக்கா 1:52 ” பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.”

1) மரியாள் தன்னுடைய நிலையிலிருந்து பார்த்து சொல்லுகிறாள், அவள் ராஜாவினுடைய வம்சமும் இல்லை, நான் ஒன்றும் இல்லை, என்னை ஆண்டவர் எடுத்து உயர்த்துவதற்கு?, நான் இப்படிப்பட்ட ஒரு பாக்கியத்தை பெற்றேன், அவர் பலவான்களை / ஆசனங்களில் உள்ளவர்களை தெரிந்து கொள்ளாமல், தாழ்மையானவர்களை தெரிந்து கொண்டு அவர்களை உயர்த்துகிறார்.

2) ஆண்டவர் அவளை கொண்டு மகா பெரிய காரியத்தை செய்கிறார். 1 சாமுவேல் 2:7-8 – “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; “

3) ஒன்றுமில்லாதவர்களை கொண்டு ஆண்டவர் அற்புதமான காரியங்களை செய்கிறார்,

*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*

1) உபாகமம் 7:7-8 -“சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள். கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார்”.

2) ஆண்டவர் இப்படி செய்வதின் நோக்கம், நாம் ஆண்டவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை எடுத்து விடக்கூடாது என்பதற்காக.

3) நம் வாழ்க்கையில் ஒரு தகுதி பெறும் பொது, நாம் அந்த மேல் நம்பிக்கையை வைத்து விட கூடாது. மாம்சமான யாரும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார் என்பதை 1 கொரி 1:26-30 பவுல் விளக்கி காட்டுகிறார்.

4) உங்களையும் என்னையும் ஆண்டவர் தெரிந்து கொண்டதின் நோக்கம் தேவன் மகிமைபட வேண்டும். நீங்கள் மனத்தாழ்மையாய் இருந்து, ஆண்டவரிடம் ஒப்பு கொடுத்தீர்களானால், ஆண்டவர் உங்களை கொண்டும் பெரிய காரியங்களை செய்வார்.

*ஜெபம்*

வல்ல பிதாவே, இந்த அருமையான நல்ல நாளுக்காய் நன்றி, இந்த செய்தியை கேட்டு கொணடிருக்கிற சகோதர சகோதரிகள் யாரெல்லாம் நான் ஒன்றுமே இல்லை என்று இருக்கிறார்களோ, அவர்கள் தேவனுடைய கரத்தில் பெரிய தகுதி பெற்றவர்கள், அவர்களை கொண்டு தேவன் பெரிய காரியங்களை செய்ய முடியம் என்பதை உணர்ந்து கொண்டு, தங்களை உமக்கென்று ஒப்பு கொடுத்து வாழக் கூடிய கிருபையை எங்களுக்குத் தர வேண்டுமாறு இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தினாலே ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம், ஜீவனுள்ள நல்ல பிதாவே, ஆமென்.

*Luke 1:52* *”He has put down the mighty from their thrones, And exalted the lowly.”*

1) Mary said her point of view from her position, she has no dynasty of kings, I have nothing, for the Lord to take me up and provide this great blessing.

2) The Lord is doing a great thing with her. 1 Samuel 2: 7-8 – “The Lord makes poor and makes rich; He brings low and lifts up. He raises the poor from the dust And lifts the beggar from the ash heap, To set them among princes And make them inherit the throne of glory.”

3) The Lord does wonderful things with those who are nothing.

*How to apply this verse in our daily life :*

1) Deuteronomy 7: 7-8 – “The Lord did not set His love on you nor choose you because you were more in number than any other people, for you were the least of all peoples; but because the Lord loves you, and because He would keep the oath which He swore to your fathers, the Lord has brought you out with a mighty hand, and redeemed you from the house of bondage, from the hand of Pharaoh king of Egypt”.

2) The purpose of the Lord doing this is so that we do not take away the honor we owe to the Lord.

3) As we get some qualification in our lives, we should not put too much faith in that qualification. Paul explains in 1 Corinthians 1: 26-30 that no flesh should glory in His presence.

4) The purpose of the Lord knowing you and me is to glorify God. If you are humble and submit to the Lord, the Lord will do great things through you.

*Prayer*

Almighty Father, thank You for this wonderful day, brothers and sisters who have been listening to this message, with the understanding that they are nothing, they got great merit in God’s hand, help them to realize that God can do great things with them and give us the grace to live by submitting their lives for You. We bless and pray in the sweet name of Jesus Christ, living and good Father, Amen.


Share this page with friends