தலை சிக்கியது! தலை தப்பியது!! வித்யா’வின் பதிவு  

Share this page with friends


நெருக்கடி நேரத்தில்
மக்கள் தப்பி ஓட
பல வழிகளை
தெரிவு செய்கிறார்கள்
 
அப்படித் தப்பி ஓடும்போது
சிலரைச் சந்திப்பதை
அவர்களால் தவிர்க்க முடியாது

தாவீது ராஜாவும்
அவனுடைய ஆட்களும்
சந்தித்த நபர்களைப்
பாருங்கள் (2  சாமுவேல் 16)
 
முதலாவது :
பொய்யர் (LIAR)
இந்த குழுவினரின்
தலைவன் சீபா.
இவன் ஒரு சந்தர்ப்பவாதி
மற்றும் காரியக்காரன்
 
ஒரே நேரத்தில் தாவீதிடமும்
நன்மைகளை வாங்கிவிடுவான்
அதேநேரத்தில்
மேவிபோசேத்திடமும்
ஆதாயத்தைப் பெற்றுவிடுவான்

நாமும்கூட சீபா’க்களை
அதாவது சந்தர்ப்பவாதிகளை,
அல்லது காரியக்காரர்களை
சந்திக்க நேரிடும்.
ஞானமாய் நடந்துகொள்ள
வேண்டும்

இரண்டாவது
 குழுவினர்  
குற்றம்சாட்டுகிற குழுவினர்

இந்தக் குழுவின் CEO
சீமேயி!

இவன் சவுல் ராஜாவின்
உறவுக்காரன்

சவுலின் ராஜ்யபாரம்
விலகினதற்கும்
ராஜாவின் குடும்பச்
சரிவுக்கும்
தாவீதே காரணம் என்று
நினைத்துக்கொண்டு

தாவீதை தூற்றும்படி
ராஜா என்றும் பாராமல்
தூஷிக்கும்படி கல்லுகளை
எடுத்துக்கொண்டு
மண்ணைவாரி
தூற்றிக்கொண்டு
தாவீதுகூடவே
நடந்துவந்தவன்.

வாய்க்கு வந்தபடி தாவீதை
பழித்துப் பேசினவன்
இந்த சீமேயி என்பவன்.

அவன் வாழ்நாள்
நீடிக்கவில்லை
 
இவனை தாவீது ராஜா
ஒரு பொருட்டாகவே
எடுத்துக்கொள்ளவில்லை.

அதை அப்படியே
ஆண்டவரிடம் சாட்டிவிட்டான்.
 
சீமேயி போன்றவர்களைச்
சந்திக்கும்போது
ஊமையர்களைப் போல
இருந்துவிடுவது நல்லது.

பெத்துவேல் சொன்னதுபோல
நலம் பொலம் பேசாதிருப்பது
அதைவிட நல்லது.

அமைதி காப்பதே சிறந்த
மாறுத்தரம்
(1 பேதுரு 2:18-25)

மூன்றாவது குழுவினரில்
முக்கியமானவன்
அபிசாய்!

இவன் பழிவாங்கத்
துடிப்பவன்
(AVENGER)
 
எதற்கெடுத்தாலும்
உடனடியாக யுத்தத்தை
START பண்ணுகிறவன்
அபிசாய் (1 சாமுவேல் 26:1-11)
 
ஆனால் தாவீது ராஜாவின்
அணுகுமுறை முற்றிலும்
வித்தியாசமானது.

இதுவே இன்றைய
நாட்களிலும்
சிறந்த அணுகுமுறையாக
இருக்கட்டும்.

ஆண்டவர் இயேசுவின்
அணுகுமுறை இதுவே
(லூக்கா 22:47 -53)
 
நான்காவது நபர்
அகித்தோப்பேல்
(TRAITOR) துரோகி 

தாவீது ராஜாவுக்கு சிறந்த
ஆலோசகராக இருந்தவன்.
 
உளவுத்துறை உயர்
அதிகாரி போல இருந்தவன்
 
ஆனால் தாவீதை விட்டுவிட்டு
சந்தர்ப்பவாதியாக மாறி
அப்சலோமை பற்றிக்
கொண்டவன் 
 
இந்தக் கூட்டத்தில் இவன்தான்
யூதாஸ் (சங்கீதம் 55:12-14)

அவனது முடிவும் யூதாஸ் போல
கயிற்றில்தான் முடிந்தது.

 
தாவீது இந்தப் பிரச்சனை தீர
ஜெபித்தான் (2 சாமுவேல் 15:31)
 
தேவனை நம்பினான்
தன்னுடைய பிரச்சனையில்
தன்னுடைய தளபதிகள் அல்ல
தேவனே தலையிட விரும்பினான்
 
அதுபோல் தேவனே
தலையிட்டார்

 
அப்சலோமின் தலை
கர்வாலி  மரத்தில் சிக்கியது

வழியிலே மாண்டுபோனான்
(Psalm 2:12)
 
தாவீது ராஜாவின் தலை
தப்பியது


அவனது ராஜ்யபாரம் நிலைத்தது
மகிமையாய் அவனது வாழ்க்கை
முடிந்தது (1 நாளாகாமம் 29:28) 
 
நம்முடைய பிரச்சனையில்
தேவன் தலையிட்டால்
காரியங்கள் மாறுதலாய்
முடியும்.

Rev. J. Israel Vidya Prakash B.Com., M.Div.,
Director of Literature tcnmedia.in
Radio Speaker Aaruthal FM
Recipient of NALLAASAAN International Award
Malaysia – 2021

மக்கள் அதிகம் வாசித்தவை:

 • கிறிஸ்துமஸ் தினத்தின்போது சர்ச்சில் இரவு வழிபாட்டுக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டும்: போலீஸ் கமிஷனர் மக...
 • Anna at the Temple!
 • ஆராதனையின் ஆசிர்வாதங்கள்
 • சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 • தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர்
 • மோவாப்புவும் மொபைலும் ஒரு சிறந்த கருத்தொற்றுமை : பிரசங்க குறிப்புகள்
 • New Testament teaching on giving can be summarized with seven P principles!
 • நான் கடன் வாங்குவது சரியா ? தவறா ?
 • சபைகள் நடத்தும் பாஸ்டர்கள் கவனத்திற்கு ஒரு முக்கிய தகவல்.
 • இந்த கரங்கள் எனக்குரியதும் அல்ல!என்னுடையதும் அல்ல!எனக்கு சொந்தமானதும் அல்ல!யாருக்குறியதுதெரியமா?

 • Share this page with friends

  Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

  Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662