ஞானமுள்ள இருதயம் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்?

Share this page with friends

ஞானமுள்ள இருதயம்

1.ஞான இருதயமுள்ளவார்கள் கர்த்தரின் கட்டளைகளையெல்லாம் செய்வார்கள்

யாத்திராகமம் 35:10. உங்களில் ஞான இருதயமுள்ள அவைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.

2.ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள்

யாத்திராகமம் 36:8. வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லி பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.

3. ஞான இருதயமுள்ளவர்கள் ஆயத்தம்பண்ணி கொடுப்பார்கள்

யாத்திராகமம் 35:25. ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள்.

4. ஞானமுள்ள இருதயம் காலத்தை அறியும்

பிரசங்கி 8:5. கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான், ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.

Pr.J.A.Devakar . DD
(ODISHA MISSIONARY)


Share this page with friends