கொரோனா கிருமி பரவுவது எப்படி?

Share this page with friends

கொரோனா கிருமி பரவுவது எப்படி?

➡️ மூச்சு காற்று வழியாக:
கிருமி தொற்று உள்ளவர் முகக்கவசம் இல்லாமல் இருக்கும் போது அவர் விடும் மூச்சு காற்றில் இருக்கும் கிருமிகள் 1 மீட்டர் அருகில் இருப்பவரை தொற்றி கொள்கிறது

➡️ இருமல் தும்மல் வழியாக:
கிருமி தொற்று உள்ள ஒருவர் முகக்கவசம் அணியாமல் வாயை மூடாமல் இருமல் அல்லது தும்மல் விடும் போது கிருமிகள் 2 முதல் 3 மீட்டர் தூரம் அருகில் இருப்பவர்களை தொற்றுகிறது

➡️ எச்சில் வழியாக:
கிருமி தொற்று இருக்கும் ஒருவர் எச்சில் துப்பும் போது அதில் 3 மணி நேரம் வரை கிருமிகள் உயிருடன் இருக்கும். அந்த எச்சில் அருகில் செல்கிறவர்கள், அதை சுத்தம் செய்கிறவர்கள் ஆகியோருக்கு தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

➡️ சாப்பிட்ட பாத்திரம் வழியாக:
கிருமி தொற்று இருக்கும் ஒருவர் கையால் சாப்பிட்டு முடித்த பிறகு அந்த எச்சில் தட்டுகள் அல்லது மீதம் ஆன துப்பிய பொருள்கள் (கறிவேப்பிலை) ஆகியவற்றை 3 மணி நேரத்திற்குள் வெறும் கையால் சுத்தம் செய்கிறவர்களுக்கு கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

➡️ வியர்வை வழியாக:
கிருமி தொற்று இருக்கும் ஒருவர் முகத்தில் வடியும் வியர்வையை ஆள் காட்டி விரலால் வளித்து தெறிக்க விடும் போது 3 மணி நேரத்திற்குள் அந்த வியர்வை துளிகளுக்கு முக கவசம் இல்லாமல் அருகில் செல்கிறவர்களுக்கு கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

➡️ கைபிடிகள், கம்பிகள் வழியே:
கிருமி தொற்று இருக்கும் ஒருவர் பேருந்து , ரயிலின் கையில் வியர்வையுடன் கைபிடிகள் பிடிக்கும் போது 3 மணி நேரத்திற்குள் அதே இடத்தில் கை வைப்பவர்களுக்கு கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது

➡️ பேருந்தில்/ரயிலில் செல்லும் போது:
ஜன்னல்கள் இல்லாத பேருந்தில் ரயிலில் கிருமி தொற்று இருக்கும் ஒருவர் இருக்கும் போது அவர் விடும் மூச்சு காற்று , வியர்வை துளிகள் வேகமான காற்றில் அதிக தூரம் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. அதாவது ஓட்டுநர் அருகில் அமர்ந்து இருப்பவர் விடும் மூச்சு காற்று வேகமாக கடைசி இருக்கையில் அமர்ந்து இருப்பவரை கூட சென்று அடைய வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் பேருந்து, ரயிலில் பயணம் செய்கிறவர்களுக்கு முகக்கவசம் மிக முக்கியம்.

➡️ போனில் பேசுவதால்:
கிருமி தொற்று இருக்கும் ஒருவர் முகக்கவசத்தை கீழே இறக்கி விட்டு போனில் பேசும் போது அவர் வாயில் இருந்து வெளிப்படும் சிறிய நீர் திவலைகள் மூலம் கிருமிகள் பரவுகிறது. கிருமி தொற்று உள்ளவர் வேகமாக காற்று வீசும் இடங்களில் இருந்து போன் பேசினால் இன்னும் அதிக பேர் பாதிக்கபடுவார்கள்.

➡️ பணம், புத்தகம், காகிதம், உடை:
கிருமி தொற்று இருக்கும் ஒருவர் பயன்படுத்திய பணம், புத்தகம், பைகள், உடைகள் ஆகியவற்றை தொட்டு உடனே கை கழுவாமல் சாப்பிட சென்றால் கிருமி தொற்று பரவ அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

➡️ கை குலுக்குவதால்:
கிருமி தொற்று இருக்கும் ஒருவர் மற்றவரிடம் கை குலுங்கும் போதும், கட்டி பிடிக்கும் போதும் கிருமிகள் அடுத்தவர் கைக்கு வந்து விடும். சோப்பு போட்டு கை கழுவாமல் சாதாரணமாக நீரால் கைக்கழுவி விட்டு சாப்பிடும் போது கிருமி தொற்று பரவ நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

இதனால் நாம் சோப்பு போட்டு கை கழுவுவது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, 1 மீட்டர் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்கிறோம்.

தனித்திரு, விழித்திரு, வீட்டிலிரு

இல்லையென்றால் தெய்வத்திரு


Share this page with friends