அந்த குருவிகளைவிட விஷேசித்த நம்மையும், வீட்டையும், பிள்ளைகளையும் காப்பாற்ற அவர் எத்தனை வல்லவர்!

அந்த குருவிகளைவிட விஷேசித்த நம்மையும், வீட்டையும், பிள்ளைகளையும் காப்பாற்ற அவர் எத்தனை வல்லவர்!

Share this page with friends

ஏசாயா 12:2 இந்த வசனத்தின் மூலமாக ஒரு குருவியும் அதன் குஞ்சுகளும் காக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு சம்பவம்.

இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கை யாயிருப்பேன்;
கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.ஒருமுறை அமெரிக்காவின் குறிப்பிட்ட மாநிலத்தில் ஒரு நகரத்திலிருந்து மற்றோர் நகரத்துக்கு தொலைபேசி கேபிள் பதிக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. சாலையின் ஒரு ஓரமாய் கால்வாய் போல குழி தோண்டிக்கொண்டு சென்றார்கள். அப்போது குழி செல்லும் பாதையில் ஒரு மரம் குறுக்கிடவே, மேலதிகாரி பணியாளர்களிடம் அம்மரத்தை வெட்டி வீழ்த்த உத்தரவிட்டார்

அம்மரத்தின் மேல் ஒரு குருவிக் கூடு இருப்பதைப் பார்த்த ஒரு பணியாளர், அதை அம்மேலதிகாரியிடம் தெரிவிக்க, அப்பணியாளரை மரத்தின் மேல் ஏறி் கூட்டைப் பரிசோதிக்கச் சொன்னார் மேலதிகாரி!
மேலே ஏறி கூட்டைப் பார்த்த பணியாளர், “ஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன” என்று மேலிருந்து குரல் கொடுக்க, மரத்தை வெட்ட வேண்டாம், நாம் மரத்தைத் தாண்டி குழி எடுப்பதைத் தொடரலாம், கடைசியாக மீண்டும் இப்பகுதிக்கு வரலாம் என்று சொல்லி, மீண்டும் மரத்துக்கு அப்பால் குழி எடுத்து அடுத்த நகர்வரை சென்றனர். பணி நிறைவடைந்த பின்னர், கிட்டத்தட்ட ஐந்து வாரங்களுக்குப்
பிறகு மீண்டும் அந்த மரத்தினருகே வந்து, அக்குருவிக்கூட்டை சோதித்துப் பார்த்த போது, முட்டைகள் பொறித்து, குஞ்சுகளும் வெளியேசென்று கூடு காலியாக இருந்தது. அந்தமேலதிகாரி, மரம் வெட்டப்படுவதை தடுத்தது எது என அறியும்படி, அக்கூட்டை அப்படியே கீழே எடுத்து வரச்சொன்னார்! பணியாளரும் எடுத்துவர, மேலதிகாரி கூட்டை சோதித்துப் பார்த்தார். குருவி தன் கூட்டை அநேக பொருட்களை வைத்து கட்டியிருந்தது. ஒரு மூலையில் சுருட்டி வைக்கப்பட்ட ஒரு காகிதப் பேப்பரும் இருந்தது. அதை விரித்துப் பார்த்த போது, அதில் ஒரு ஞாயிறு பள்ளி மாணவர் எழுதி வைத்திருந்த மனப்பாட வசனம்! (ஏசாயா 12:2)

இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கை யாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்பு மானவர். எங்கோ அந்த காகிதத்தைத் தூக்கிவந்து, அதையும் தன் கூட்டின் கட்டுமானப்பணியில் அந்தக் குருவி பயன்படுத்தியுள்ளது! இதைப் பார்த்த மேலதிகாரி, அக்குருவியின் கூட்டைக் கர்த்தரே பாதுகாத்தார் என்று விசுவாசித்து, கர்த்தரைத் துதித்தார்! ஒரே ஒரு வசனத்தை வைத்திருந்த குருவியின் கூட்டையும், அதன் குஞ்சுகளையும் அழியாமல் கர்த்தர் காப்பாரென்றால், அந்த குருவிகளைவிட விஷேசித்த நம்மையும், வீட்டையும், பிள்ளைகளையும் காப்பாற்ற அவர் எத்தனை வல்லவர்! நம் வீட்டில் முழு வேதாகமமும் உண்டே! குருவிக்கு விசுவாசம் இருந்திருக்காது! ஆனாலும் கர்த்தர் அவைகளைப் பிழைப்பூட்டுகிறார்! நமக்கோ இவ்வுலகிலும், கிறிஸ்து இயேசுவின் வருகையிலும் காப்பாற்றப்பட, மெய் விசுவாசமும், பரிசுத்த வாழ்வும் அவசியம்.


Share this page with friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *