தேர்தலுக்காக கிறிஸ்தவர்கள் எப்படி ஜெபிக்க வேண்டும்? முக்கிய குறிப்புகள்

Share this page with friends

தேர்தலில் கிறிஸ்தவர்கள் எப்படி ஜெபிக்க வேண்டும்?

வேதம் நாம் சமாதானமாக ஜீவனம் பண்ணும் படி ஆளுகை செய்கின்றவர்களுக்காக ஜெபிக்க சொல்கிறது. ஆளுகை செய்கின்றவர்கள் கூடுமானவரையில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கேட்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டு இருக்கிறது.

சுவிசேத்தை எதிர்த்த ஏரோது தண்டிக்கபட்டதையும் நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அதே நேரத்தில் சபை துன்பப்படுத்தப் பட விட்டு கொடுக்கப்பட்டு, சிரைச்சேதம், சிறைச்சாலை, அக்கினி, கொடுமையான தண்டனைகள், மற்றும் நாடுகடத்தல் போன்ற கொடூர உபத்திரவங்களுக்கு சபை விட்டு கொடுக்கப்பட்டு இருந்தாலும், பத்மு தீவில் யோவாணுக்கு கர்த்தர் தம்மை இன்னும் சர்வ வலிமையுள்ளவராகவும், சர்வ அதிகாரம் படைத்தவராகவும் தம்மை வெளிப்படுத்தி அநேக ரகசியங்களை கர்த்தர் வெளிப்படுத்தி கொடுத்தார்.

இன்னும் இந்த உபத்திரவ காலத்தில் இயேசு கிறிஸ்து தமது வலிமையை இழந்து போனார் என்கிற கண்ணோட்டத்தில் இருந்த எபிரேய விசுவாசிகளுக்கு கிறிஸ்து யார் என்பதை புரிய வைக்கவே எபிரேய நீருபமும் எழுதப்பட்டது. எனவே இன்னும் கர்த்தர் தான் ராஜரீகம் பண்ணுகிறார் என்பதை புரிந்து விசுவாசித்து ஜெபிக்கும் ஜெபத்தை கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

ஆனாலும் தேர்தலுக்காக ஜெபிக்கும் சூழல் ஒருபோதும் அன்றைய வேதாகம சபைக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை, ஆனால் நாம் இன்று ஜெபிகின்ற ஒரு சூழலுக்கு தள்ளப் பட்டு இருக்கிறோம்.

எனவே நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று தொடர்ந்து கவனிப்போம்.

1) ஒருபோதும் நமது ஜெபம் மனிதபயத்தின், மனித கணிப்பின், மனித கண்ணோட்டத்தின் மற்றும் மனித சிந்தையின் அடிப்படையில் இராத படி, தேவ கண்ணோட்டம், தேவனுடைய இருதய விருப்பம், மற்றும் கர்த்தர் யார் என்பதின் அறிவின் விசுவாசத்தின் அடிப்படையில் ஜெபம் ஏரேடுக்கப்பட வேண்டும்.

2) தேவனுடைய ஆளுகை, தேவனுடைய ராஜியம், தேவனுடைய அதிகாரம், தேவனுடைய மகிமை மற்றும் அவரது வல்லமை வெளிப்பட ஜெபிக்க வேண்டும்.

3) கர்த்தருடைய ஞானம் மற்றும் கர்த்தருடைய பகுத்தறிவு ஜனத்தின் மத்தியில் வெளிப்பட ஜெபிக்க வேண்டும். தேவனுடைய கோணத்தில் சிந்தித்து கர்த்தர் பட்சத்தில் நின்று ஒட்டு போட ஜனங்களில் கர்த்தர் கிரியை செய்ய ஜெபிக்க வேண்டும்.

4) சாத்தானின் கிரியைகளாகிய வஞ்சனை, சாத்தானின் கட்டுப்பாடு, ஏமாற்றுதல், தந்திரங்கள் மற்றும் தேர்தல் தில்லுமுல்லு, கோல் மால்கள், குறுக்கு வழிகள், பொய் வழிகள், மிரட்டுதல்கள் அழிக்கப்பட ஜெபிக்க வேண்டும்.

5) நாம் யாரும் இந்த நாட்களில் அரசியல்வாதிகளால் சோதனையில் விழுந்து விடாதபடி, சபை கர்த்தரின் சரீரமாக நிலைத்து நின்று தேவ சித்தம் செய்ய, யாரையும் சார்ந்து நிர்காதபடி கர்த்தரை மட்டும் சார்ந்து நிற்க விசுவாசத்தில் உறுதியாக நிற்க ஜெபிக்க வேண்டும்.

6) சுவிசேஷ பிரபலியம் மற்றும் ஆத்தும அறுவடை, பக்திவிருத்தி மற்றும் தெய்வீக காரியங்கள் தடைபடாமல் இருக்க, தேவ சித்தம் தொடர்ந்து நடைபெற, தேவராஜ்யம் எந்த சூழ்நிலைகளிலும் பரவ ஜெபிக்க வேண்டும்.

7) கடைசியாக கர்த்தர் மகிமைப்படவும், அவர் தான் ஆளுகை செய்கிறவர் என்பதையும், அவருக்கே சகல கணமும் மகிமையும் செல்லவும், அவரே தெய்வம், நாம் அவர் ஜனங்கள் என்பதை தேசத்தில் கர்த்தர் வெளிபடுத்த ஒருமனதின் ஆவியை தர ஜெபிக்க வேண்டும்.

கர்த்தர் தாமே தந்து கிருபையையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துவாராக! ஏனெனில் கர்த்தத்துவம் அவர் தோளில் இருக்கிறது.

செலின்


Share this page with friends