வேதாகமத்தை வாசிப்பதின்மேலுள்ள ஆர்வமின்மையை மேற்கொள்வது எப்படி?

Share this page with friends

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி..” 2 கொரிந்தியர் 2:14

How to deal with apathy over bible reading ?
வேதாகமத்தை வாசிப்பதின்மேலுள்ள ஆர்வமின்மையை மேற்கொள்வது எப்படி?

“கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்”.
சங்கீதம் 1:2

கடந்த தியான செய்திகளில் இன்றைய சமுதாயம் ஏன் வேதத்தை வாசிப்பதற்கு ஆர்வம் காட்டுவது இல்லை என்பதை குறித்தும்,அது எவ்விதம் மேற்கொள்வது என்பதைக்குறித்தும் மேலும், வேதாகமத்தை வாசிப்பதின் மேன்மையைக்குறித்தும் நாம் தியானித்தோம்

ஆனால் இன்று வேதாகமத்தை ஆர்வத்துடன் வாசிக்க ஏதுவாக அதை எவ்விதம் வாசிப்பது அது எவ்விதம் தியானிப்பது என்ற தலைப்பின் கீழ் நாம் சில காரியங்களை கற்றுக்கொள்ளலாம்…

ஒரு வெளிநாடுக்கு சுற்றுலா பயணியாக போவதற்கு நம்கையில் டிக்கெட் இருப்பதினால் மட்டும் சந்தோஷம் வந்துவிடாது, நாம் சரியான நேரத்தில், சரியான விமானத்தில் ஏறி செல்லவேண்டிய இடத்திற்க்கு சென்று, பார்க்க வேண்டியதை பார்த்து ,நினைவில் வைத்துக்கொள்ள பல புகைப்படங்களை எடுத்தால் மட்டுமே
அது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் அதுபோலவே, வேதாகமத்தை கையில் வைத்திருப்பதினால் நாம் ஆசிர்வதிக்கப்பட முடியாது… அதை‌சரியாய் தினந்தோறும் வாசித்து, தியானித்து,நம் இருதயத்தில் பத்திரப்படுத்தி அதை வாழ்க்கையாக மற்றும் போதுதான் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்…

விசுவாசிகளில் அநேகர் பலமுறை வேதாகமத்தை வாசித்திருப்பார்கள் ஆனால் அதில் சில பேர் வசனத்தை தியானம் செய்வதே இல்லை…இன்னும் பல பேர் வேதாகமத்தை ஆராய்ச்சி செய்து படிப்பதே இல்லை….

வசனத்தை வாசிப்பது வேறு? தியானிப்பது வேறு? அதை ஆராய்ச்சி செய்வது வேறு?..

வேதாகம வசனத்தை வாசிப்பது எப்படி?

“இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைவாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில்எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம்சமீபமாயிருக்கிறது.” வெளிப்படுத்தின விசேஷம் 1:3


1. வேதத்தை வாசிக்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்குங்கள்
2. ஓய்வு நேரங்களில் வேதம் வாசிக்க அதிக நேரம் இடங்கள் (பயண நேரங்கள், காத்திருக்கும் நேரங்கள் ,விடுமுறை நாட்கள்)
3. அங்கும் இங்குமாக வாசிக்கக் கூடாது கிரமமாய் வாசியுங்கள் இடையில் எந்த பகுதியையும் விடாமல் ஆதியாகமத்தில் இருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையும் வாசியுங்கள்
4. ஒரு வருடத்திற்கு ஒருமுறை முழு வேதாகமத்தையும் படிக்க திட்டமிடுங்கள் ஒரு நாளைக்கு நான்கு அதிகாரங்கள் அல்லது நான்கு பக்கங்கள் வாசித்தால் வேதாகமம் முழுவதையும் ஒரு வருடத்தில் படித்து முடிக்க முடியும் நாலு பக்கங்கள் படிக்க 20 நிமிடங்களே தேவை 24 மணி நேரத்தில் 20 நிமிடமாவது வாசிக்க ஒதுக்குங்கள்
5. வசதிக்காக காலையில் புதிய ஏற்பாட்டில் இரண்டு அதிகாரங்களும், மாலையில் பழைய ஏற்பாட்டில் இரண்டு அதிகாரங்களும் வாசியுங்கள்
6. சில நாட்கள் வேதம் வாசிக்க தவறினாலும் சோர்ந்து போகாதிருங்கள் வாசிப்பதை விட்டுவிடாதீர்கள் விடுமுறை நாட்களில் அதை ஈடுக்கட்டி விடுங்கள்
7.ஒவ்வொரு முறையும் வேதத்தை வாசிப்பதற்கு முன் ஒன்று இரண்டு நிமிடங்கள் அமைதியாக ஜெபத்துடன் ஆயத்தப்பட வேண்டும்

வேதாகம வசனத்தை தியானிப்பது எப்படி?

வேதாகமத்தில் ஒரு அதிகாரத்தை தெரிந்து கொண்டு இரண்டு மூன்று முறை வாசியுங்கள்.வாசிக்கும்போது கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்து எழுதுங்கள் (அப்பொழுது நீங்கள் என்ன வாசித்தீர்கள் என்பது மனதில் தங்கும்)

1.யார் எழுதியது ? யாருக்கு எழுதியது?எப்போது எழுதப்பட்டது?எழுதப்பட்ட நோக்கத்தை கண்டுபிடி?

2.கீழ்கண்ட காரியத்தை உற்று கவனி:
• பாவத்தைக் குறிக்கும் வார்த்தைகள் ஏதாகிலும் உண்டா?
• வாக்குத்தத்தங்கள் ஏதாகிலும் உண்டா?
• நான் கீழ்ப்படிய வேண்டிய கட்டளைகள் ஏதாகிலும் உண்டா?

3.இந்த அதிகாரத்தில் தேவனைக்குறித்தோ, அல்லது நபர்களை குறித்தோ(பெயர் குறிப்பிட பட்டிருக்கலாம்,பெயர் குறிப்பிடாமலும் இருக்கலாம்) என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்து எழுது?

4.இந்த அதிகாரத்தில் முக்கிய வசனம்?முக்கிய வார்த்தை ?முக்கிய கருப்பொருளை கண்டுபிடி?திரும்ப திரும்ப வருகிற வார்த்தை என்ன எத்தனை முறை என்பதை எழுது?

5.வாசிக்கும் பகுதியில் கடின வார்த்தை அல்லது நமக்கு புரியாத வார்த்தைகள் ஏதாகிலும் உண்டா ?
(புரியாத கடினமான வார்த்தைகளை, வசனங்களை குறித்து வைத்து மூத்த விசுவாசிகளிடமோ,போதகரிடமோ கேட்கலாம்)

6.நான் வாசிக்கும் பகுதியில் எனக்கு பிடித்தமானது , என்னுடைய உள்ளத்தை தொட்ட அல்லது என்னோடு இடைப்பட்ட வசனம் எது?

7.நான் இந்த அதிகாரத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அல்லது எடுத்த தீர்மானம் என்ன?
இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டு பதிலை பெற்றுக் கொள்ளும்போது நாம் அதிகாரங்களை சரியாக தியானிக்கவும் அதை புரிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்…
(வீட்டுப்பாடம்:பிலேமோன் நிருபத்தில் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி தியானித்து பாருங்கள்)


பாஸ்டர்.டேவிட்
விசுவாச AG சபை, விஜயமங்கலம்,


Share this page with friends