பரலோக வாக்குத்தத்தங்களை சுதந்தரிப்பது எப்படி!

Share this page with friends

நம் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் பரலோகத்தின் சத்தியமான செயல்களையும், திட்டங்களையும் தந்து இருக்கிறார். அவைகளை அறிந்து கொண்டு, அவைகளை செய்து முடிக்கவே தேவன் நம்மில் விரும்புகிறார். அது தான் நம்மை குறித்து தேவ திட்டமாகும். இவைகளை எப்படி சுதந்தரிப்பது? தொடர்ந்து கவனிப்போம்.

A. கர்த்தருடைய ஜனமாக இருக்க வேண்டும்.

கர்த்தருடைய திட்டத்தை செயல்படுத்த முதலில் கர்த்தருடைய பிள்ளைகளாக இருக்க வேண்டும். அப்படியென்றால் புரஜாதி ராஜாக்கள் கர்த்தருடைய திட்டத்தை செயல்படுத்த கர்த்தரால் பயன்படுத்த பட்டனர் என்று வாசிக்க வில்லையா என்று கேட்கலாம்! நாம் இங்கு உலகத்தோடு முடியும் தேவ திட்டத்தை குறித்து பேசவில்லை. மாறாக இங்கேயும் தேவ திட்டம் செய்து பரலோக கானானையும் சுதந்தரிக்கும் தேவ திட்டத்தில் நிச்சயம் அவர்கள் கர்த்தருடைய ஜனமாக இருக்க வேண்டும். அப்படி பட்ட கர்த்தருடைய பிள்ளைகளுக்காக கர்த்தர் இந்த உலகில் சிலரை கொண்டு சில தேவ திட்டத்தை நிறைவேற்றி தரலாம் ஆனால் அது அந்த சிலரை பரிபூரண தேவ திட்டத்தில் கொண்டு வந்து பரலோகம் சேர்க்கும் என்று சொல்ல முடியாது. இஸ்ரவேல் ஜனம் அவரது சொந்த ஜனம் என்று அழைக்கப்பட்டனர் அதினால் தான் அவர்கள் கானான் தேசத்தை சுதர்ந்தரிக்க வாக்குப் பண்ண பட்டனர். கிறிஸ்துவை மாதிரியாக கொண்ட ஜனம் தான் தேவ திட்டத்தின் மையப்பகுதி. அந்த பிள்ளைகளாக என்ன செய்ய வேண்டும்?

# இயேசுவை சொந்த இரட்ச்சகராக ஏற்று கொண்டு இருதயத்தில் அவரே இரட்ச்சகர் என்று விசுவாசிக்க வேண்டும்.
# பாவ அறிக்கை செய்து, பாவ மன்னிப்பு பெற, கிறிஸ்துவின் நாமத்தில் மனம் திரும்பி, ஒப்புரவாகி, திருப்பி செலுத்த வேண்டியதை செலுத்தி, அவரது இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்க விட்டு கொடுக்க வேண்டும்.
# பிதா குமாரன் பரிசுத்த ஆவியினால் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற வேண்டும். அவரோடு கூட அடையாளப்படுத்த விட்டு கொடுக்க வேண்டும்.
# ஆவிக்குரிய சபையில் ஐக்கியம் ஆகி, ஜெபத்தில், அப்போஸ்தல உபதேசத்தில், கர்த்தருடைய பந்தியில், பரிசுத்தவான்கள் ஐக்கியதில் உறுதியாக இருக்க வேண்டும்.
# காத்திருந்து பரிசுத்தாவியின் வல்லமையை பெற்று, அவரில் நிறைந்த ஆவிக்குரிய அனுபவத்தை பெற வேண்டும்.
# சாட்ச்சியாக வாழ்ந்து, வரங்களில், கனியுள்ள பக்திவிருத்தியின்/ சுத்திகரிப்பின் வாழ்வில் வளர வேண்டும்.
# கிருபை மேல் கிருபை பெறவும், மகிமை மேல் மகிமை அடையவும் முற்றிலும் ஜெயம் பெற்று முடிவு பரியந்தம் நிலைத்து பாடுகளின் மத்தியிலும் வெற்றி உள்ள வாழ்க்கை வாழ வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட இந்த ஏழு process ஐ ஏற்று கொண்டு வாழ்பவர் தான் கர்த்தரின் ஜனம். இப்படிப்பட்டவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் வாக்குப்பண்ணப்பட்ட சுதந்திரங்கள் அநேகம் உண்டு. எனவே நமது வாக்குத்தங்கள் இம்மைக்கு உரியதாக மட்டும் அல்லாமல் மறுமைக்கும் உரியதாக இருக்க வேண்டும்.

B. தரிசனம் பெற்றவராக இருக்க வேண்டும். இல்லையெனில் தரிசனம் பெற்றவரின் கீழ் நடத்தப்பட வேண்டும்.

தரிசனம் பெற்ற மோசேயை கொண்டு தான் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்கு நடத்தி சென்றார். தரிசனம் இல்லாத இடத்தில் ஜனம் சீர்கெட்டு போகிறார்கள். தேவ தரிசனம் தான் நம்மை தேவ தோட்டத்தில் வழி நடத்தி, நாம் போக வேண்டிய வழியில் நம்மை நடத்துகிறது. ஒருவர் தேவ தரிசனத்தில் உள்ளார் என்பதை எப்படி அறிந்து கொள்வது?

# தெய்வீக சுபாவம் உடையவராக இருப்பார் ஏனெனில் தேவ தரிசனம் முதலில் அவரை சரி செய்யும். (மோசே சாந்தம் மற்றும் தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மை உள்ளவர், யோசுவா பணிவிடை ஆவி உள்ளவர்)
# மக்களை எந்த சூழலிலும், சமயத்திலும், நடத்தி செல்லும் பக்குவம் மற்றும் அதிகாரம் உள்ளவராக இருப்பார்.
# தேவ சமூகம் அவருக்கு மிகவும் பிரியமாக இருக்கும். அதினால், ஜனத்திற்கு தேவையான வார்த்தைகள் மற்றும் விடுதலை பெற்று தரும் நபராக இருப்பார்.
# தன்னை போன்று எல்லாரும் ஊழியம் செய்ய வேண்டும் என்று விரும்பி, கணத்தை கொடுத்து, வரங்களில் செயல்பட வைத்து தனக்கு பின் சரியான successor ஐ ஏற்படுத்தும் திராணி உள்ளவர். தன்னை கொண்டு இலக்கை அடைய முடியாவிட்டாலும் அந்த பொறுப்பை விட்டு கொடுக்கும் மனப்பக்குவம் உடையவராக இருப்பார். கிறிஸ்துவின் அதிகாரமும் வல்லமையின் வரங்களும் சீடர்களுக்கு அப்படி கொடுக்கப்பட்டதே.

C. கெஞ்சி ஜெபிப்பவராக இருக்க வேண்டும்.

எந்த காரியமானாலும் ஜெபிக்கும் நபரே தேவ திட்டத்தை நிறைவேற்ற முடியும். எந்த எந்த பிரச்சனைகளை மோசே, யோசுவா, நெகேமியா மற்றும் தானியேல் போன்றவர்கள் சந்தித்தார்களோ உடனே ஜெபிக்கும் பழக்கம் கொண்டு இருந்தார்கள். அதுதான் அவர்களை தேவ திட்டத்தில் நடத்தியது. மோசே முகம்குப்புற விழுந்து, பணிந்து வணங்கி ஜனங்களுக்காக பரிந்து பேசி பல முறை தப்புவித்து இருக்கிறார். ஆனால் அவரது தெரிந்து கொள்ளுதலுக்கு விரோதமாக ஜனம் எழும்பிய போது கர்த்தரே மோசேக்கு பரிந்து பேசி தமது வல்லமையை விளங்கவும் பண்ணினார்.

D. ஜனத்திற்கு தேவையான கர்த்தருடைய பரலோக வார்த்தைகளை கொடுப்பவராக இருக்க வேண்டும்.

மோசேயும் யோசுவாவும் ஜனத்திர்க்கு ஏற்ற, அவர்கள் வாழ்வியல், குடும்பம், சமுதாயம், உறவு, ஐக்கியம், சட்டம், நீதி, நியாயம், ஆசாரித்துவம் போன்ற எல்லா நிலைகளிலும் தேவனிடத்தில் இருந்து அக்கினியிலும், அசரீதி நிலைகளிலும் பிரமாணத்தை பெற்று கொடுத்தனர். கர்த்தர் சத்தம் கேட்காமல் அவர் சித்தம் செய்ய முடியாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் அந்த சமயத்திற்கு ஏற்ற வார்த்தையின் படி பேதிரு வலையை போட வில்லை எனில் வலைகிழிய மீன் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும். தனக்கு ஏற்ற, தன் ஜனத்திற்க்கு ஏற்ற வார்த்தையை பெறாதவர் ஒருபோதும் பரலோக வாக்குதத்தங்களை பெற்று கொள்ள முடியாது. He will have His words. கர்த்தருடைய வார்த்தையை கூட்டாமல் அப்படியே நம்பி, கலகம் செய்யாமல் கீழ்படியும் நபரே வாக்குதத்தங்களை சுதந்தரிப்பார்.

E. விசேஷித்த ஆவி உடையவராக இருக்க வேண்டும்.

இந்த விசேசித்த ஆவியாகிய பரிசுத்த ஆவி, ஞானத்தின் ஆவி, உணர்வின் ஆவி, பரிசுத்தமாக நம்மை வாழ வைக்கும் ஆவி, வரங்களில் நடத்தும் ஆவி, அறிவின் ஆவி மற்றும் பெலத்தின் ஆவியாகிய இந்த ஆவி இல்லாதவர்கள் ஒருபோதும் பரலோக திட்டத்தை அடைய முடியாது. மதியீனம் களைய, தீர்மானம் எடுக்க, பரிசுத்தப்படுத்த, வசனத்தை உணர்த்த, உறுதியான நம்பிக்கை பெற, உண்மை மற்றும் உத்தமாக நடக்க இந்த ஆவியானவர் தான் உதவி செய்கின்றார். இவர் இல்லாமல் தேவ திட்டம் என்பது ஒரு கானல் நீர் தான். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவை விசுவாசிக்கும் எல்லாருக்கும் வாக்குப்பண்ணப்பட்டவர் தான்.

F. விசுவாசமும், தைரியமும் உள்ளவரும், பயம் இல்லாதவருமாக இருக்க வேண்டும்.

எந்த சூழலில் தைரியமாக நின்று, பின்வாங்கி போகாமல், உறுதியாக கர்த்தரை சார்ந்து, அவரை விசுவாசித்து நம்பிக்கையை வெளிப்படுத்தும் நபராக இருக்க வேண்டும். மந்தையை விட்டு ஒடுகிறவர்கள், பயப்படுகிறவர்கள் தேவ திட்டத்தை நிறைவேற்ற முடியாது. தன் பேச்சு விடயத்தில் விசுவாசியாத மற்றும் எப்போதும் தன் கையில் இருந்த தடியையே நம்பி இருந்த மோசே கானானுக்கு போக அதுவே தடையாக மாரினது.

G. சுய நீதியை சாராமல் கிருபையை என்றும் சார்ந்து இருக்கும் நபராக இருக்க வேண்டும்.

தனது சுய பெலம், சுய நம்பிக்கை, மனித நம்பிக்கை, பண நம்பிக்கை, மாஸ் நம்பிக்கை இல்லாமல் எப்போதும் கர்வம் அடையாமல், வெற்றியில் கர்வம் இல்லாமல், தாழ்மையோடு நடக்கும் நபரே அவரது கிருபையின் வாரிசு ஆவார். ஒருவர் தேவ கிருபையை அதிகமாக சார்ந்து நிற்கிறார் என்றால் அவரே தேவனால் ஸ்தாபிக்க படுவார். அப்படிப்பட்டவர் தான் அவரது திட்டத்தில் செயல்பட முடியும். அந்த கிருபையில் தான் தேவ மகிமை, மீட்பு, தேவ வரங்கள் மற்றும் தேவ வல்லமை செயல்படும். கர்த்தரிலும், அவரது கிருபையிலும், அவரது சத்துவத்திலும், அவரது வல்லமையிலும் சார்ந்து நின்றால் அவரே தேவ திட்டத்தின் காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.

கர்த்தர் கிருபையும், சமாதானமும் கூட இருப்பதாக!

செலின்


Share this page with friends