கொரோனாவிலிருந்து உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துகொள்வது எப்படி?

Share this page with friends

காலை எழுந்தவுடன் இரவு தூங்கும் வரை நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். தேவன் நமக்கு ஞானத்தை தந்திருக்கிறார். முறையாக அறிந்து பழக்கப்படுத்திக்கொண்டால் இந்நாட்களில் உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துக்கொள்ளலாம்.

How to keep yourself healthy from corona?

1) காலை எழுந்ததும் பால் பாக்கெட்டை எடுத்து அதன் கவரை நன்றாக சுத்தம் செய்து கழுவிய பின்பே அதனை பயன்படுத்துங்கள்.

2) செய்தித்தாள்களை உடனே எடுத்து படிக்காமல் வெயிலில் காய வைத்த பிறகு வீட்டிற்கு வெளியே திண்ணையிலிருந்து படித்துவிட்டு, படித்து முடிந்ததும் சோப்பால் கை கழுவவும். செய்தித்தாள் படிக்கின்ற நேரங்களில் உங்கள் கைகளை வாயிலோ மூக்கிலோ, காதுகளிலும் வைக்க வேண்டாம். இடைப்பட்ட நேரங்களில் செய்தித்தாளைப் படிக்க வேண்டுமென்றால் படித்துவிட்டு சோப்பால் கைகளை கழுவவும்.

3) வெளியே காய்கறிகளையோ அல்லது மற்ற பொருட்களையோ வாங்கி வருகின்ற பொழுது சிறிது நேரம் வெயிலில் வைத்து விட்டு மஞ்சள் தூளால் கழுவி விட்டு பின்பு காய்கறிகளை பயன்படுத்தவும். நீங்கள் உங்கள் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்.

4) இந்த நாட்களில் வீட்டிற்கு ஒரு வாரத்திற்கு அல்லது ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை (அந்தந்த பொருட்களின் தன்மையைப் பொருத்து) வாங்கி வைப்பது நல்லது. தினமும் கடைக்கு சென்று வாங்குவதை தவிர்த்தால் தொற்று பரவுவதை தவிர்க்கலாம். சேவிங் பிளேடு, சேவிங் கிரீம் சோப், எண் ணெய் , மற்றும் மளிகை சாமான்கள் இவற்றை முன்னமே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. வாங்கியவுடன் மறக்காமல் சோப்பு போட்டு கை கழுவுவது அவசியம்.

5) நீங்கள் வெளியே செல்லுகின்ற பொழுது மற்றவர்கள் கொடுக்கின்ற பொருட்களை பயன்படுத்தாதீர்கள். உங்களுக்குத் தேவையான பேனா பேப்பர் பென்சில் போன்றவற்றை நீங்களே எடுத்துச் சென்று பயன்படுத்தவும்.

6) மற்றவர்களுடைய அலைபேசி களையோ அல்லது தொலைபேசிகளையோ பயன்படுத்தாதீர்கள்.

7) மற்றவர்கள் அமர்ந்த இருக்கைகளில் நீங்கள் அமராதீர்கள். ஒருவேளை உங்களுக்கு முன்பாக அமர்ந்தவர் கொரோனா நோயாளியாக இருக்கலாம்.

8) யாராவது தும்மினாலோ இருமினாலோ அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பி சென்று விடுங்கள். மனித நேயம் பார்த்து நீங்கள் அங்கேயே இருந்தால் ஒருவேளை நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்படலாம்

9) கடைகள் அல்லது கம்பெனி அல்லது ஆபிஸ் போன்ற இடங்களில் உள்ள கைப்பிடிகளையோ அல்லது சுவற்றையோ அல்லது சுவிட்சுகளையோ கதவின் தாழ்ப்பால்களையோ தொடவேண்டாம். தெரியாமல் தொட்டுவிட்டால் உடனே சோப்பால் கை கழுவுவது அவசியம்.

10) பேருந்தில் கை பிடிகளையோ அல்லது இருக்கையையோ உங்கள் கைகளால் தொட வேண்டாம். பேருந்தில் நடத்துனர் டிக்கெட் அல்லது மீதி பணத்தை கொடுக்கின்ற பொழுது அதனை கையால் வாங்காமல் ஒரு பையில் வாங்கிக் கொள்ளுங்கள். பேருந்தில் பயணம் செய்கிறபோது மற்றவர் அமர்ந்த இருக்கையில் அமராமல் நின்று கொண்டு பயணிப்பதே நலம்.

11) வெயிலுக்காக இளநீர் வாங்கி குடிக்கின்ற பொழுது அதை வெட்டுபவருடைய கைகள் இளநீரில் அல்லது வழுக்கையிலோ படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்களும் இளநீர் வாங்கி குடித்துவிட்டு சனிடைசரால் கைகளை கழுவிக் கொள்ளுங்கள்.

12) பிறர் தருகின்ற டீ யையோ காபி யையோ அவர்கள் கைப்பட்ட கப்பில் வாங்கி குடிக்க வேண்டாம். அப்படியே குடிக்க நேர்ந்தாலும் சோப்பு போட்டு கை கழுவுவது அவசியம். உங்களுக்கென தனியாக பிலேட் (plate) அண்ட் டம்ளர் வைத்திருப்பது நல்லது.

13) முடிதிருத்தம் செய்ய செல்லுகின்ற பொழுது முடி திருத்துபவர் புதிய பிளேட் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முடிந்தால் மற்றவர்கள் மேல் போர்தப்பட்ட துணியை உங்கள் மேல் போர்த்தாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உடனே சோப்பு போட்டு குளிப்பது மிகவும் அவசியம்.

14) வண்டிகளுக்கு பெட்ரோல் போட்ட பிறகு பில்களையோ பணத்தையோ கையில் வாங்க வேண்டாம். அதற்கென ஒரு பை வைத்திருங்கள். அந்த பையில் வாங்கிக் கொள்ளுங்கள்.

15) ஷேவிங் போன்றவற்றை நீங்களே செய்து கொள்ளவும்.

16) உங்கள் சாவிகளை நீங்களே பயன்படுத்துங்கள். வேறு யாரிடமும் கொடுக்க வேண்டாம். மற்றவர்கள் பயன்படுத்த சாவிகளையும் நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.

17) காலில் செருப்பு இல்லாமல் வெளியே செல்லக்கூடாது.

18) லிஃப்டில் செல்வதை தவிர்க்கவும். படிகளைப் பயன்படுத்தவும்

19) முக கவசம் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள்.

20) முக கவசம் மூக்கையும், வாயையும் முழுமையாக மூடியபடி அணியவும்.

21) வெளியில் இருந்தோ கடையில் இருந்தோ உணவு வாங்கி உண்பதை தவிர்த்துவிடுங்கள்.

22) நீங்கள் நுழையும் கடைகளில் முக கவசம் இல்லாமல் யாரேனும் இருந்தால் அவர்களை அணிய சொல்லுங்கள். மறுத்தால் அந்த கடையிலிருந்து உடனே சென்று விடுங்கள். கடைக்காரர்கள் முக கவசம் அணியவில்லை என்றல் அங்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள்.

23) பில்லிங் இடத்தில கூட்டம் போடாதீர்கள். ஒருவரின் பின் ஒருவர் சமூக இடைவெளி விட்டு நில்லுங்கள்.

24) முக கவசம் அணிய சொல்வதற்கோ , சமூக இடைவெளி பின்பற்ற சொல்வதற்கோ கூச்சப்படாதீர்கள். உங்கள் நண்பனாக இருந்தாலும், உறவினரும் ஆக இருந்தாலும் சரி, தயங்க வேண்டாம்.

25) எவருடனும் கை குலுக்குவதை தவிருங்கள்.

26) கைப்பையிலோ , வண்டியிலோ sanitizer பாட்டில் வைத்து அடிக்கடி கைகளை சுத்தபடித்திக் கொள்ளுங்கள்.

27) தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள். பெரிய விழாக்களையும் திருமண நிகழ்ச்சிகளையும் தவிர்ப்பது அவசியம்.

28) முதியோர்கள் குழந்தைகள் வீட்டில் இருந்தால், வெளியே செல்பவர்கள் அவர்களுடன் நெருக்கமாக பழகுவதை சில வாரங்களுக்கு தவிர்த்துவிடுங்கள்.

29) வீட்டுக்கு திரும்பி வந்தவுடன் எந்தப் பொருளையும் சுவரையோ கதவையோ கைப்பிடிகளையோ சுவிட்சுகளையோ கை வைக்காமல் துணிகளை அகற்றி தலை உட்பட முழுமையாக குளியுங்கள். கழற்றிய துணிகளை மறுநாள் காலை வரை தொடாதீர்கள்.

30) கைகளை சனிடைசர் வைத்து கழுவிய பிறகு கண்டிப்பாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

31) வாரத்திற்கு குறைந்தது மூன்று முறை கபசுர குடிநீரை அருந்தலாம்.

32) உங்கள் உணவில் அதிகமாக பூண்டு இஞ்சி, எலுமிச்சை, முருங்கைக்கீரை மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.

33) அன்னாசிப்பழம் ஆரஞ்சு பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.

34) பொது இடங்களில் (திருமண வீடு, துக்க வீடு) வைபவங்களில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். உங்கள் வீட்டில் ஏதேனும் வைபவங்கள் நடத்தும் போது பார்சல் உணவுகளை வழங்கி விடுங்கள்.

35) உங்கள் வீட்டிற்கு அருகே யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தும் மறைக்க விரும்புகிறார் என்றால் நீங்களே உங்கள் ஊரிலுள்ள சுகாதார மையத்திற்கு தெரியப்படுத்திவிடுங்கள்.

36) இந்த நோய் குறித்த மன தெளிவும் விளிப்புணர்வையும் உங்கள் மனதில் அதிகப்படுத்த வேண்டுமே தவிர மன பயத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

இவற்றையெல்லாம் செய்வது சாத்தியமா? கொஞ்சம் ஓவரா இருக்கே.. என்று நீங்கள் சொல்லாம். வேறு என்ன செய்வது? சாத்தியமில்லையென்றாலும் சமூக நலன் கருதி, உங்கள் நலன் கருதி நீங்கள் கடைபிடித்தால் கொரோனா ஒருபோதும் உங்களை அண்டாது. இந்த பதிவு பயனுள்ளதாக நீங்கள் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Share this page with friends