குடும்பத்தில் வாழ்வில் தீர்மானம் / தீர்மானங்கள் எடுப்பது எப்படி?

Share this page with friends

தைரியமாய் தீர்மானமெடுங்கள்

உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது. யாத்திராகமம் 8:10

ஆவிக்குரிய விஷயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு இன்று நம்மில் பலர் பயப்படுகிறார்கள். விசுவாசத்தோடு ஒரு அடி எடுத்து வைத்து, தேவன் சொன்னதை நான் செய்யப் போகிறேன் என்று அறிக்கை செய்து, செயல்படுவதற்கு அநேகர் தயங்குகிறார்கள்.

பலருக்குள் காணப்படுகிற பயம் என்ன என்று தெரியுமா? நான் தோற்றுப் போனால், என்ன ஆகும்? பலர், தோல்வியைக் குறித்து மிகவும் பயப்படுகிறார்கள். ஒரு தீர்மானத்தை எடுக்க முடியாமல், பல வாரங்கள், அவர்கள் போராடிக் கொண்டிருப்பார்கள்.

_நீங்களும் இந்த நிலையில் இருக்கிறீர்களா? ஆம் என்றால், ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய வல்லமையினால் நீங்கள் அதை நிறைவேற்றி முடிக்கப் போவதில்லை. அந்தச் சூழலில், தேவன் நுழைந்து செயல்படும்படி நாம் இடம் கொடுக்க வேண்டும். அதுதான் நம் தீர்மானம்.

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று தீர்மானித்து, அதற்கு முழுமையாய் உங்களை அர்ப்பணிப்பீர்கள் என்றால், தேவன் உங்கள் பட்சம் நின்று, அதை வெற்றிசிறக்கச் செய்வார்!

நீங்கள் தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தைக் கற்றுக் கொண்டு, அதன் மீது கவனம் செலுத்துவீர்கள் என்றால், அது உங்கள் வாழ்க்கையில் புரட்சிகரமான ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.

தேவனுடைய வார்த்தை ஒன்றைச் சொல்கிறது என்றால், அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், ஆச்சரியமான வல்லமையும் அதற்கு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தீர்மானிக்க வேண்டிய விசேஷமான உரிமையையும், வல்லமையையும் தேவன் நம் கரங்களில் தந்திருக்கிறார். உங்கள் நித்தியத்தை எங்கே செலவிடப் போகிறீர்கள் என்று தீர்மானிக்க வேண்டிய உரிமை உங்களுக்கு இருக்கிறது.

கர்த்தராகிய இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்று தீர்மானிக்க வேண்டிய உரிமை உங்களுக்கு இருக்கிறது.

நீங்கள் அவரை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால், தேவன் உங்கள் பட்சத்தில் நின்று, உங்களைப் பெலப்படுத்துவார்.

உங்களுக்காக தேவனால் எதையும் செய்ய முடியும். ஆனால் நீங்கள் தான், தீர்மானமெடுக்க வேண்டும். அவர் தம் நாமத்தையும், அதன் வல்லமையையும் நமக்குத் தந்திருக்கிறார்.

இயேசுவின் இரத்தத்தினால் பல்வேறு நன்மைகள் நமக்கு உண்டாகும்படி, அவர் அதை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அவர் தேவனுடைய ராஜ்யத்தை நமக்குத் தந்திருக்கிறார். அதன் பங்காளர்களாய் அவர் நம்மை மாற்றியிருக்கிறார் (கொலோசெயர் 1:12).

ஆனால் இந்த நன்மைகளெல்லாம் தானாகவே நமக்குக் கிடைத்து விடும்படி, அவர் ஏற்படுத்தி வைக்கவில்லை. அவற்றைப் பெற்றுக் கொள்ளும்படி, நாம் தான், தீர்மானிக்க வேண்டும்.

நீங்கள் அந்தத் தீர்மானத்தை எடுக்கும்போது, அவர் தம் வல்லமையினால் உங்களைத் தாங்குகிறார். அவர் உங்களைப் பெலப்படுத்தி, உங்களுக்கு உதவி செய்கிறார்.

மறுபடியும் பிறக்கும்படி நீங்கள் தீர்மானிக்கும்போது, எந்தப் பிசாசும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தீர்மானம் எடுப்பதுதான்.

இப்பொழுதே தீர்மானியுங்கள். உங்கள் தீர்மானத்தை அறிவியுங்கள். உங்கள் வார்த்தைகளின்படியே உங்களுக்கு நடப்பதாக.

புதிய தீர்மானம் ஒன்றை எடுக்கும்படி, தேவன் உங்களை நடத்துகிறாரா? விசுவாசத்தோடு அடி எடுத்து வைத்து, செழிப்பை நோக்கி அல்லது சுகத்தை அடையும்படி அல்லது ஊழியத்தில் புதியதாய் ஒன்றைச் செய்யும்படி, தேவன் உங்களை வழி நடத்துகிறாரா?

தயங்காமல், அவருக்குக் கீழ்ப்படிந்து செல்லுங்கள். பயம் உங்களை பின் வாங்கச் செய்யும்படி இடம் கொடுக்காதீர்கள்.

நன்றி ஜெபம்:

அன்பின் பரலோகப் பிதாவே, விசுவாசத்தோடு ஒரு அடி தைரியமாய் எடுத்து வைத்து, செயல்படும்படி எனக்குக் கிருபை தாரும். தயக்கங்களை என் வாழ்க்கையிலிருந்து அகற்றும். இரட்சகராகிய கிறிஸ்துவை நோக்கி, உற்சாகமாய் உமக்காக ஓடும்படி என்னைப் பெலப்படுத்தும். உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்.

இயேசுவே ஆண்டவர்! வெற்றி உங்களுடையதே!


Share this page with friends