கணவன் மனைவி இருவருக்குமே சம உரிமை – குடும்ப கதை

Share this page with friends

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்

இன்றைக்கு நாம் தியானத்திற்கான வேத பகுதி 3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன். அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். (1 கொரிந்தியர் 7:3)

இங்கு நாம் பார்க்கக்கூடிய காரியம் என்னவென்றால் புருஷன் தன் மனைவிக்கு செய்யக்கூடிய கடமைகள் அனைத்தையும் மனைவி தன் புருஷனுக்கு செய்யவேண்டும் இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால் கணவன் மனைவி இருவருக்குமே சம உரிமை உண்டு

ஒரு குறும்செய்தியில் பார்த்த ஒரு காரியத்தைச் சொல்லுகிறேன் என்னவென்றால் கணவனுக்கும் மனைவிக்கும் தகராறு .தகராறு பெரிதாகி ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர். ஒருநாள் கணவன் தொழில் வேளையாக அதிகாலை 5மணிக்கு புறப்படவேண்டியிருந்தது.

மனைவியிடம் சொல்ல தன்மானம் இடம் தரவில்லை. (ஆண்கள் என்றாலே அவர்களுக்கு தலையில் ஒரு கணம் போல )
அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒரு தாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடுவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான் காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7 மிகுந்த கோபத்தோடு மனைவியைப் பார்த்தான் ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான் .மனைவி அமைதியாக கணவனின் தலையணையயை காட்டினால். அதன் கீழ் ஒரு தாளில் மனைவி எழுதி வைத்திருந்தாள்( மணி 5 ஆகிவிட்டது எழுந்திருங்கள் ) என்று இந்த கதையில் தன்மானத்தை காப்பாற்ற வேண்டி சீட்டில் எழுதி வைத்த கணவன் .காலை தாமதமாக எழுந்தவுடன் கோபத்தில் தன்மானம் மறந்து ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என்று கேட்கிறான் .முதல் நாள் இரவு கொஞ்சம் தனது தன்மானத்தை மறந்து மனைவியிடம் கொஞ்சம் எழுப்பிவிட சொல்லியிருந்தாள் பயணம் தடைப்பட்டு இருக்காது….. இதே தவறைத்தான் நாம் பலரும் செய்துக்கொண்டிருக்கிறோம் முதலில் நாம் தன்மானத்தை எங்கே காட்ட வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் (ஏன் நாம் வேதத்தில் காட்டுவோம்,பரிசுத்ததில்,அன்பில்,நேர்மையில்,உண்மையில் காட்டுவோம் ) மனைவி என்பவள் உன்னில் ஒரு பாதி.உன் உயிரில் ஒரு பாதி. உன் உடம்பில் ஒரு பாதி. அப்படிபட்ட மனைவியிடம் கொஞ்சம் தன்மானம் மறக்க பழகுவோம் இது ஆண்களுக்கு மட்டுமில்லை பெண்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள் இதனால் பாதிக்கப்படுவது இருவரும் தான் ஆகையால் நாம் கருத்துடைய வார்த்தைக்கு கீழ்படிந்வர்களாக இருப்போம்.

எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியிடத்திலும் அன்புகூரக்கடவன். மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள். (எபேசியர் 5:33) கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக….. By :மோசஸ் சாரோன்ஜெப வீடு.

இணையத்தில் முதல் பதிவு எப்படி இருக்கிறது


Share this page with friends