கடலூரில் கிறிஸ்தவ போதகரை சரமாரியாக தாக்கிய கவுன்சிலரின் கணவர்
கடலூர் முதுநகரில் கிறிஸ்தவ போதகரை தாக்கிய கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டாா்.
( கடலூர் முதுநகர், ஜனவரி 11 )

கடலூர் முதுநகர் வெலிங்டன் தெருவில் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பிலிப் ரிச்சர்ட்(வயது 43) என்பவர் போதகராக இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை அந்த ஆலயத்தின் வாசலில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை கொட்டினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிலிப் ரிச்சர்ட், இங்கு ஏன் குப்பைகளை கொட்டுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு துப்புரவு பணியாளர்கள் 42-வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் செந்தில்(52) தான், இங்கு குப்பையை கொட்ட சொன்னதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து மதபோதகர் பிலிப் ரிச்சர்ட் செல்போனில் செந்திலை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செந்தில், அந்த ஆலயத்துக்கு சென்று போதகர் பிலிப் ரிச்சர்டை ஆபாசமாக திட்டி, தாக்கினார். மேலும் ஆலயத்தை மூடி வழிபாடு நடத்த முடியாமல் செய்து விடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.
நன்றி.
டெய்லிதந்தி நியூஸ்
- கூண்டுக்குள்ளே இருந்தாலும்! வித்யா’வின் விண் பார்வை!
- குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லையா இது தான் காரணம்
- Online Dating Safety and How to Recognize Red Flags
- Online Dating Safety and How to Recognize Red Flags
- தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களேஎச்சரிக்கை