பைபிளை அறிந்தால் தமிழனை அறியலாம் – ஆய்வு

தமிழனும் பைபிளும்
4000 ஆண்டுகளுக்கு முந்திய தொடக்க தமிழனின் வரலாறுதான் இதுவரை ஆய்வில் தெரிந்த வரலாறு. அதாவது லெமூரியா கண்ட (குமரிகண்ட) வரலாறு. இது அழிந்து விட்டது. தமிழ் செம்மொழியாக இதுவே காரணம். தனியாய் தமிழ் வளர்ந்தது. கலப்பில்லை. செம்மொழியாக முதன் முதலாக துணைபுரிந்தவர் ஜி.யு. போப். பின்னர் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதன் அவர்கள்.
டாக்டர். ராபர்ட் கால்டுவெல், வீரமாமுனிவர், வேதநாயகம் சாஸ்திரியார போன்ற கிறித்தவர்கள் தமிழுக்காக பெரும்பணி ஆற்றியிருக்கிறார்கள். மேலும் விரிவாய் அறிய….
http://www.tamilchristians.com/index.php?option=com_content&view=article&id=462:2010-08-05-18-28-14&catid=95:2009-04-03-08-40-24&Itemid=197&showall=1
முதலில் யூத மதம் (யாவே) பின் படிப்படியாக விக்ரக வழிபாடு, புத்த (கடவுள் இல்லாத) மதம், கிறித்தவம் (யாவேயான இயேசு கிறிஸ்து), இஸ்லாம் (அல்லா), ஜெயின்(கடவுள் இல்லை), இந்து மதம் (30 கோடி தேவர்கள்) என பிற மதங்கள் என வளர்ந்தன. பைபிளின்படி 4000 வருடங்கள் முன்பு பாபேல் கோபுரத்தை கட்டும்போது அவர்கள் பாஷையை கர்த்தர் தாறுமாறுயாக்கியதை அறிவீர்கள். பின்னர்தான் எல்லா மொழியினரும் பல்வேறு நாடுகளில் குடியேறி வாழ்ந்தனர். மொழிகள் உருவாயின, அவரவர் மொழிகளில் பேசி வாழ்ந்தனர். தமிழன் கடல் கடந்து வாணிகம் செய்தான். மொழியை வளர்த்தான். சாலமோன் ராஜா காலத்தில் மயிலிறகுகள் தமிழகத்திலிருந்து வாங்கப்பட்டது. தோகை என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து ஹீப்ருவில் வழங்கும் துகிஎன்ற சொல் (பொருள்: மயில்) வந்திருக்கக் கூடும் என்பர் அறிஞர்கள். மயில்தோகை, தேக்கு, ஊர் போன்ற சொற்கள் அம்மொழியில் வழங்குகின்றன. ஆப்ராம் வாழ்ந்த இடம் ஊர். பாபிலோனிய வணிகத்தொடர்பும் இருந்தது. பெரிய நகரம்.
ஒரே மொழி பூமியெங்கும் இருந்தது….
ஆதியாகமம் 11 : 1. பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது. (இதன் காலம் 4250 ஆண்டுகளுக்கு முன்பு)
மொழிகளை தாறுமாறாக்கினார் …. குழப்புதல் ….. மக்களை சிதறப்பண்ணினார்.
ஆதியாகமம் 11 : 9. பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
இந்த காலம் கி.மு. 2242 என்று குறிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாட்படி 4255 வருடங்களுக்கு முன்பு மொழிகளை குழப்பி எல்லோரையும் சிதறிப் பண்ணினார். ஆக தமிழ் மொழி முதல் மற்ற எல்லா மொழிகளும் எபிரேயம் உட்பட தேவனால் அருளப்பட்து 4255 வருடங்களுக்கு முன்புதான். தமிழ் மொழிக்கு தேவன் சிறப்பான அழகை கொடுத்தார். அது தமிழனால் வளர்க்கப்பட்டது. செம்மொழி சிறப்பை தேவனே தந்தார். நம் தேவன் இசைக்கும் மொழிக்கும் தேவன்! ! இதுவே உண்மை! !
ஓர் இனத்தின் தோற்றமும் வளர்ச்சியும் சமய வளர்ச்சியை ஒட்டியே இருக்கும் என்பது உலக நியதி. சமய வளர்ச்சியை ஆய்ந்தால் மிக்க நல்லது. இந்து , வைணவ, புத்த, கிருத்துவ, யூத மத, இஸ்லாம் மதங்களை ஆய்ந்தால் மனித தோற்றம் – பேசின மொழி – பூமி அழிவு – பிறமொழி மலர்வு என எல்லாவற்றையும் அறியலாம். அதை நீரூபிக்க சரித்திர அகழ்வாராய்ச்சி முடிவுகள் முக்கியம். எழுத்துகள் வடிவம் பெற வேண்டும். நாம் வடிவத்தைக் கொண்டுவர சமய ஆராய்ச்சிதான் துணை புரியும். சரித்திரப்பபதிவு வேண்டும். புராணம் – இதிகாசம் துணை செய்யாது. நாம் தமிழன் என்பதை யாரும் மாற்ற முடியாது., நல்ல – நேர்மையான உத்தமனான தமிழனாக வாழ்வோம். பைபிளை அறிந்தால் தமிழனை அறியலாம். ஆதியாகமம் முதல் 14 புத்தகங்களை படித்தால் உலகத்தை அறியலாம். மத்தேயு 22 அதிகாரத்தை படித்து தியானித்தால் முழு பைபிளையும் அறியலாம்.
தமிழனின் அறிவை நிரூபிக்க நிறைய சொல்லலாம். பூஜ்ஜியத்தை (சுழியம்) கண்டுபிடித்தவர்கள் ..வான ஆராய்ச்சி – விவசாய புதிய சிந்தனைகள் – அளவுகோல்கள் – தொழிற்நுட்பம் – கணினித்தறை – மென்பொருள் – என நீளும். . . . . … நிம்ரோத் கால நட்சத்திர ராசி – ஜோதிட – முறைகள் தவறான கணிப்புகள்- அதை பாபேல் கோபுரத்தில் குறித்திருந்தான். தான் உலகத்து ராஜாவாக விரும்பினான். கோபுரத்தை வானளவு உயர்த்தி தன்னை உயர்த்த நினைத்தான். சாத்தானை கடவுளாக உயர்த்தவே பாபேல் கோபுரம் கட்ட தொடங்கினான். அதனாலேயே கோபுரத்தை கட்டுவதை தேவன் நிறுத்தினார். இன்றைக்கு தீவிரவாத இஸ்லாமியர் அந்த பாபேல் கோபுரம் அமைந்த இடத்தை தகர்த்து உண்மையை உலகமறிய கூடாதபடி சிதைத்து சரித்திரத்தை அழிக்கிறார்கள்.
உ.தா: தமிழனின் தாகம் ….
http://thamizhaninthaagam.blogspot.in/2012/06/0.html?m=1
இன்றைய யுகத்தில் தமிழன் அத்தனையும் நல்லவிதமாக பயன்படுத்தி தமிழகத்தை மேன்படுத்துகிறானா? தாழ்த்துகிறானா? பெண்ணை பொன்னாய் பாதுகாத்த தமிழன் தவிக்கிறான். 6 வயதில் ஆபத்து- 16 வயதில் விபச்சாரம் – கிளப் – சூதாட்டம் – மது – போதை பழக்கம் – கிணற்றில் வீசப்படும் குழந்தைகள் – பெண்கள் – ஓரினச்சேர்க்கை – பாலியல் கொடுமை – கொலை – தற்கொலை – ஆபாச படங்கள் – பல கனவன்கள் – பல மனைவிகள் – வஞ்சகம் – சூது – போட்டி – பொறாமை – பதுக்கல் – பஞ்சம் – கலப்படம் – அதிக வட்டி – ஆணவம் – தற்பெருமை – சர்வாதிகாரம் – தற்புகழ்ச்சி – காட்டிக் கொடுத்தல் – ஏழை – பணக்காரன் – விதவையை வீழ்த்த நினைத்தல் – தீராத நோய் – பேரழிவுகள் – எளியவனை ஒதுக்குதல் – சாதீய முரண்பாடு – தவறான வழிநடத்தல்- ஆயதப்புரட்சி – போர்
…… இப்படி இவையெல்லாம் வீதிக்கு வீதி, நகரந்தோறும், நாடுகள்தோறும் நாடோறும் கண்ணாற காண்பவை. ஏன்??? அடிப்படை என்ன?
அன்பு இல்லை – ஆண்டவனிடம் பயம் இல்லை – ஆண்டவனை முழுமனதாய் நேசிப்பது இல்லை. சத்தியம் இல்லை. பாவம் என அறிந்தும் அறியாது இருக்கிறார்கள். தெரிந்தும்
திரில்லுக்காகவும் ஜாலிக்காகவும் வாழ்கின்றனர். இருந்தும் நான் நல்லவன்? ? மற்றவர்களைப்பற்றி நான் ஏன் நினைக்க வேண்டும் என்று 80% பேர் நினைக்கின்றனர்.
கடவுள் ஒருவரைத்தவிர நல்லவர் யாருமில்லை. நாம் படைத்தவர் பேச்சை கேட்காமல் நாம் படைத்தவற்றை கேட்டு வருகிறோம்.
அடிப்படை தவறினால் பூமியே தலை சுற்றி விழும். அதனால் அதை வானிலே தொங்கவிட்டு நம்மை விஞ்ஞானியாக்கியுள்ளார். நான் சொல்வது வேதத்தின் மூலம்தான். நம்ம DNA ஆண்டவரின் அடிப்படை விதி. இறைவனைத்தேடும் சக்தி அதில் உள்ளது. படிக்காதவனும் அறியலாம். அண்டசராசரங்களை படைத்த கடவுள் ஏன் நம்மீது இவ்வளவு அன்பு வைத்துள்ளார்? தன் சாயலாக நம்மை படைத்ததாலே நம்மை நல்லவனாக பார்க்க விரும்புகிறார். அவர் படைத்த முதல் மனிதனே அவர் கட்டளையை விட்டு சாத்தானின் பேச்சிற்க்கு சாய்ந்து விட்டான். அவனுக்கும் வாழ வழிகாட்டினார். இயேசு கிறிஸ்துவை இரட்சகராய் அனுப்பினார்.
அவர் பார்வைக்கு நாம் அழகானவர்கள். நம் தப்பை சரி பண்ண விரும்புகிறார். அதனால் மனந்திரும்ப சொல்லுகிறார். மன்னிக்கிறார். மெய்தேவனை அறிய வழியை அறிவோம். உலகை மாற்றுவோம். இன்பத்திலும் துன்பத்திலும் மகிழ்ச்சியாய் இருப்போம். மனந்திரும்பிய வாழ்க்கை உடையவனுக்கு மரணம் இல்லை. மண்ணில் சரீரம் சாகும். ஆத்மா – ஆவியுடன் ஆண்டவர் நமக்கு தந்துள்ள வான் வீட்டிலே இதே உருவத்துடன் வாழ்வோம். இதுதான் கர்த்தர் எனக்கு அருளிய பாடம். கடவுளை உணர்ந்ததால்- என்னிடம் பேசுவதால் தைரியமாக சொல்லுகிறேன். இதுதான் இரட்சிப்பு. சத்தியத்தை ஏற்றுக்கொள்தல். சத்தியத்தை நம் உடையாக அணிய வேண்டும். இல்லை, நான் இப்படி வாழும் வாழ்க்கை சரியானது என்றால் எனக்கு உங்களைப்பார்த்து கண்ணீர்தான் வரும்.
எல்லா தவறுகளும் இன்று ஒன்று சேர்ந்து கடைசி காலமாக மாறி வருகிறது. இதற்க்கு ஓரு நியாயதீர்ப்பை ஆண்டவர் நியமித்திருக்கிறார். மனந்திரும்ப காலத்தை தந்திருக்கிறார். தயைவு செய்து மனந்திரும்புங்கள். இந்த உலக முடிவுக்கு முன் கர்த்தரால் பாதுகாக்கப்படுவீர்கள், அழைக்கப்பபடுவீர்கள்.
ஆம் இயேசு கிறிஸ்து இரண்டாவதாக இந்த உலகிற்க்கு வருகிறார். இப்போது வருவது சுவிசேசத்தை அறிவிக்க அல்ல. இந்த உலகை ஆயிரம் வருடம் அரசாளப் போகிறார். இதுவரை உலகம் கண்டிராத அதிசய ஆனந்த ஆட்சியை காணப்போகிறீர்கள். இயேசு இராஜாவின் ஆட்சியை!!