home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home

புதிய 2021 ஆவது ஆண்டில்!

Share this page with friends

A. பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் இறங்கி கிரியை செய்ய இடம் கொடுப்போம்!

பிதாவை துதித்து, கிறிஸ்துவை மகிமைப்படுத்தி, வசனத்தில் உறுதிப்பட்டு ஜெபத்தில் காத்து இருப்போம். கிறிஸ்துவின் இரத்தத்தால், கிறிஸ்துவின் வசனம், கிறிஸ்துவின் ஆவி மற்றும் பாடுகளால் சுத்தம் மற்றும் பரிசுத்தம் ஆக விட்டு கொடுப்போம். பரிசுத்த ஆவியானவரை மட்டுப்படுத்தி, அவர் செயல்படும் இடத்தில் நாமே செயல்பட்டு அவருக்கு இடம் கொடுக்காததை உணர்ந்து மனம் திரும்புவோம்.பரிசுத்த ஆவியினால் உண்டாகும் எல்லா வரங்களும் கனிகளும் செயல்பட விட்டு கொடுப்போம். எல்லா வரங்களையும் கனிகளையும் உதாசீனப்படுத்தி ஒற்றை வரம் மற்றும் ஒற்றை கனியை மட்டும் மேன்மை படுத்தும் காரியத்தில் இருந்து விடுபட்டு பரிசுத்த ஆவியானவரின் முழு கட்டுப்பாட்டில் வந்தால் மற்ற வருடங்களில் இல்லாத பெருக்கத்தை அவர் கொண்டு வருவார் என்பதை நம்புவோம்.

ஏனெனில் அவரிடத்தில் ஏராளமான கிருபைகளும் கிருபா வரங்களும் இன்னும் இருக்கின்றன என்கிற அறிவுக்கு நேராக வருவோம். அப்போது புத்திக்கு எட்டாத தேவ கிரியை மற்றும் சமாதானம் வெளிப்படும்.

B. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டு சத்தியத்தில் சத்திய வசனம் என்ன கூறுகிறது, என்று சரியாக பகுத்து அவைகளின் படி வாழ ஒரு தீர்மானம் எடுப்போம்

ஏனெனில் சத்தியத்தில் வெறும் வக்குத்தங்கள் மட்டும் அல்ல, கட்டளைகள், கடிந்து கொள்ளுதல் சீர்படித்துதல், கிறிஸ்துவை போல மாறுதல் போன்ற எத்தனையோ கோணங்கள் உள்ளது .

வெறும் குறி வாக்குத்தங்களை மட்டும் சார்ந்து இராதப்படி சத்தியத்தை சத்தியமாக தியானித்து அவைகளின் படி ஆராந்து பார்ப்போம். வேதத்தை இன்றைய வாக்குத்தத்தம் மற்றும் ஊக்கமருந்தாக மட்டும் பாராமல் சத்தியத்தை சத்தியமாக பார்க்க ஆராய விட்டு கொடுப்போம்.

வேதத்தின் அடிப்படையில் நாம் எங்கே இருக்கிறோம் என்று தேடி பார்ப்போம் அப்போது சத்தியம் நம்மை விடுதலை ஆக்கும். எபேசு பட்டணத்தில் நடந்தது தானே இந்தியாவிலும் நடக்கும்.

C. நமக்கு நாமே திட்டம் வகுக்காதபடி, ஆண்டவரே நீர் என்ன செய்ய சித்தமாக இருக்கிறீர் என்று அவர் சத்தம் கேட்க கற்று கொள்வோம்.

ஆவியானவரால் வழி நடக்க கற்று கொள்வோம். அவர் சத்தம் கேட்டு அவர் சித்தம் செய்ய விட்டு கொடுப்போம். தோனல்கள் உதரல்கள் போன்றவற்றை கர்த்தர் சொன்னார் என்று வாய்க்கு வந்ததை சொல்லும் தகாத கற்பனைகளை விட்டு வெளியேறுவோம். தீர்க்கதரிசனங்கள் பலமுறை சோதிக்கபடட்டும். ஏனெனில் கர்த்தருடைய வார்த்தைகள் புடமிடப்பட்டு பரிசுத்தமாக்கபட்டவைகள் அவைகள் ஒருபோதும் வெறுமையாக திரும்புவதில்லை. ஆனால் தீர்க்கதரிசனங்களை அற்பமாகவும் எண்ணாமல் பாருங்கள்.

D. கிறிஸ்துவையும், அவர் சிலுவை, அவரது மரணம், அவரது இரத்தம், மற்றும் அவரது உயிர்த்தெளுதல் மற்றும் அவரது ராஜ்ஜியம் போன்றவற்றை பிரசங்கத்தில் கூட்டி கொள்வோம்.

சிலுவையின் வாழ்வில் தான் நாம் கடந்து செல்ல வேண்டும் பாடுகளின் உபதேசம் என்கிற ஆரோக்கியமான வார்த்தைகளை தொடர்ந்து அறிவிறுத்துவோம். ஏனெனில் இவைகள் தான் நம்மை இரட்ச்சிக்கும். இப்படிபட்ட வழிகளில் தான் கிருபை, விசுவாசம், நம்பிக்கை, பாவமன்னிப்பு, பரிசுத்தம், சீசத்துவம் மற்றும் தேவ கிரியை etc செயல்படும் என்று ஆணித்தரமாக வலியுறுத்துவோம்.

E. அங்கே அற்புதம், அவரை கொண்டு அற்புதம் என்று யாரையும் தேடி நாடி போகாதபடி சபைக்குள் கூட அப்படி பட்ட ஊழியங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வோம்.

சபை தான் கிறிஸ்துவின் சரீரம் என்றும் உணர்ந்து சபைக்குள் எல்லா ஊழியங்களையும் உற்சாகப்படுத்தி சபையை பக்திவிருத்தி அடைய செய்வோம். ஏனெனில் சபையை சேர்த்து கொள்ள தான் அவர் சீக்கிரம் வருகிறார். சபையை விலக்கி ஒரு குறிப்பிட்ட ஊழியத்தை மட்டும் மேன்மைபடுத்தி, ஒரு குறிப்பிட்ட ஊழியரை மட்டும் சார்ந்து நின்றதை, பிரபல்யத்தை விரும்பி சபையை விட்டு கொடுத்ததை உணர்ந்து மனந்திரும்பி சபையை ஆயத்தம் ஆக்கி, மணவாளனாகிய கிறிஸ்துவை சந்திக்க ஆயத்தம் ஆக உறுதி எடுத்தல்.

F. தேசத்தில் என்ன நடக்கும், தேசத்தில் யார் ஆட்சி, நாளைக்கு என்ன நடக்கும் நாளைக்கு என்ன கிடைக்கும் என்கிற கோணத்தில் இருந்து வெளியே வருவோம்.

தேசத்தை எப்படி சுவிசேஷத்தை கொண்டு நிறைக்க முடியும் என்று சிந்திப்போம். இயேசு கிறிஸ்து சிங்காசனத்தில் வீற்று இருந்து, சபைக்கு தலையாக இருக்கிறார் என்பதை அறிந்து அவரின் ஆளுகை அதிகாரம் மற்றும் வல்லமையை நம்பி முன்னேறுவோம். அவரை நம்புகிற மனுசன் எவனும் வெட்கபடுவத்தில்லை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதில் அசையா நம்பிக்கை கொள்வோம்.

G. மொத்தத்தில் நிலையற்ற இந்த உலகத்தில் விசுவாசிகளை சார்ந்து இருக்க செய்யாத படி வரப்போகிற நித்திய ராஜியத்திற்கு என்று பாடுபடுவோம், உழைப்போம்.

அவர் சித்தம் செய்து அவர் ராஜியம் வரட்டும் என்று காத்திருந்து ஒருவரை ஒருவர் மன்னித்து தாங்கி செயல்படுவோம். ஏனெனில் ராஜியம் கனம் மகிமை எல்லாம் அவருடையது. அடுத்த தலைமுறையை உருவாக்கி தேவராஜ்யம் கட்டுவோம். கிறிஸ்துவின் ராஜ்யம் மற்றும் அவரது வருகையில் இருக்கும் நம்பிக்கை, நித்தியஜீவன் போன்றவற்றில் நோக்கம் கொள்வோம்.

கர்த்தர் இன்னும் அவரது ராஜ்யத்தின் வல்லமையால் நம்மை இந்த கடைசி நிமிடத்தில் நிரப்பி அவரது திட்டத்தை மறுபடியும் நம்மை கொண்டு நிறைவேற்றுவராக ஏனெனில் அவர் இன்னும் நம்மை கொண்டு செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளம் உண்டு. அவைகளை காண்போம் தரிசிப்போம் அவரது மகிமை வல்லமை மற்றும் சாயல் நம்மில், சபையில், தேசத்தில் விழங்கட்டும். அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

செலின்.


Share this page with friends