Powerful Lessons to Learn from the Life of Joseph

OT மற்றும் NT சத்தியங்களில் நாம் அல்லது எந்த எந்த காரியங்களில் பரிசுத்தம் தேவை என்பதை கவனிப்போம்.

Share this page with friends

Powerful Lessons to Learn from the Life of Joseph

நாம் ஆராதிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தமுள்ளவர் என்பது தான் கர்த்தரை குறித்த விசேஷமான விசயம்.

கர்த்தர் பரிசுத்தர் ஆகையால் நாமும் பரிசுத்தமாக இருக்க அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

அவரே பரிபூரண பலியாக, பரிசுத்த பலியாக நமக்காக அடிக்கபட்டு, அவரது பரிசுத்த இரத்தத்தால் நம்மை மீட்டுகொள்ள சொந்த இரத்தத்தை சிந்தினார்.

அந்த இரத்தத்தால் கழுவப்பட்டு இருக்கிறோம் என்றால் தான் நாம் சுத்தம் உள்ளவர்கள் என்று அறியப்படும். ஏனெனில் இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள் தான் தேவனை தரிசிப்பார்கள் என்று சத்திய வேதம் போதிக்கிறது.

பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் நமக்கு இந்த பரிசுத்த தேவனையே கற்று தருகிறது ஏனெனில் நமது இரட்ச்சகரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவும் அந்த வேத வாக்கியங்களில் சொல்லப்பட்ட நிறைவான கிறிஸ்துவாக இருக்கிறார்.

OT மற்றும் NT சத்தியங்களில் நாம் அல்லது எந்த எந்த காரியங்களில் பரிசுத்தம் தேவை என்பதை கவனிப்போம்.

1. நாட்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்*.

அதிலும் ஓய்வு நாட்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும். இரண்டு நாட்கள் வார்த்தின் முதல் நாள் மற்றும் கடைசி நாளான ஓய்வு நாள் பரிசுத்தமாக ஆசரிக்கப்பட வேண்டும். ஜூபிலி வருடம் பரிசுத்தமாக இருக்க வேண்டும். நாட்களை விசேசிக்கிறவன் கர்த்தருக்கென்று ஏற்படுத்தி அதை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும்.

2. நாம் குடியிருக்கும் பாளயம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

கர்த்தர் எதேன் தோட்டத்தை பரிசுத்தமாக தான் கொடுத்தார். பின்னர் தீட்டுபடாதபடி அதை காவல் வைத்தார். கானான் தேசம் பரிசுத்தமாக இருக்க பிரமானங்களை கர்த்தர் தமது பிள்ளைகளுக்கு கொடுத்தார். நாம் குடியிருக்கும் இடங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும் ஏனெனில் கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.

3. கர்த்தருடைய ஜனம் பரிசுத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதற்கு என்றே நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

நமது இருதயம், நமது சிந்தை, நமது சரீரம் பாவத்தால் தீட்டுப்படாமல் சுத்தமாக இருக்க வேண்டும் ஏனெனில் பரிசுத்தம் இல்லாத இடத்தில் வாசம் செய்ய மாட்டார்.

4. நமது ஆகாரம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

ஆகாரத்தால் நாம் தீட்டுப் பட கூடாது என்று கர்த்தர் விரும்புகிறார். எல்லாம் நமக்கு தகுதியாக இராது என்பதை அறிய விரும்புகிறார். கண்டதையும் புசித்து நமது பரிசுத்தத்தை கெடுக்க கூடாது. ஏனெனில் அவர் பரிசுத்தர்.

5. கர்த்தருடைய ஜனத்தின் உறவுகள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

கணவன் மனைவி உறவு, பெற்றோர் பிள்ளைகளின் உறவு, எதிற்பாலரோடு உள்ள உறவு, கர்த்தருக்கும் நமக்கும் உள்ள உறவு, சமுதாயத்தில் பிறரோடு உள்ள உறவு, அரசாங்கத்திற்கும் நமக்கும் உள்ள உறவு, ஊழியர்களுக்கும் விசுவாசிகளுக்கும் இடையே உள்ள உறவு, வேலை செய்யும் இடத்தில் உள்ள உறவு போன்ற உறவுகள் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பரிசுத்த ஆவியானவர் கொண்டு கர்த்தர் சத்தியங்களை எழுதி கொடுத்து இருக்கிறார்.

6. நாம் ஆராதிக்கும் இடம் அல்லது தேவ சமூகம் பரிசுத்தமுள்ளது

ஆசரிப்புக் கூடாரம், தேவனுடைய ஆலயம் , நாம் கூடி வரும் இடமும், நமது சபை மற்றும் கூடுகைகள் அனைத்தும் பரிசுத்த முள்ளவைகள். கர்த்தர் வரும் எந்த ஸ்தானமும், எந்த கூடி வரவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஆசிரியர்களுக்கு அல்லது ஊழியர்களுக்கு கர்த்தர் கொடுக்கும் அழைப்பு பரிசுத்தமானது.

எல்லாரையும் கர்த்தர் அழைத்து இருந்தாலும் ஆரோனை போல இந்த கனமான ஊழியத்திர்க்கு கர்த்தர் அழைத்து இருந்தால், அந்த ஆழைப்பு, அந்த அழைப்பில் செய்யும் ஊழியம், அந்த அழைப்பில் உள்ள ஊழியர்கள் யாவரையும் கர்த்தர் பரிசுத்தப்படுத்துகிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கர்த்தர் பரிசுத்தம் உள்ளவர். அவரது ஊழியர்கள், ஊழியமும் அவரால் பரிசுத்தமாக மாற்ற படுகிறது. பரிசுத்தமாக இருக்கவே அழைக்க பட்டு இருக்கிறோம்.

8. நாம் கர்த்தருக்கு என்று செலுத்தும் காணிக்கைகள் மற்றும் பலிகள் பரிசுத்தமானவைகள்.

நமது ஆராதனைகள், நமது தசமபாகம், நமது முதற்பலன்கள், தலையீற்றுகள், பொருத்தனைகள் மற்றும் நேர்ச்சை கொடுக்கும் அத்தனை காணிக்கைகள் மற்றும் பலிகள் பரிசுத்தமானவைகள்.

9. நாம் அவரவருக்கு என்று நியமிக்கப்பட சபை மற்றும் அதை சார்ந்த ஊழியர்களுக்கு மற்றும் ஊழியங்களுக்கு கொடுக்கும் காணிக்கைகள் அனைத்தும் பரிசுத்தமானவைகள்

ஆசாரியனுக்கு சேரும் அத்தனை பலிபொருட்களும், அபிசேகம் தைலம், பரிசுத்த வஸ்திரம், தூபவர்க்கம், போன்ற அவரவர் ஊழியனை சார்ந்து, கர்த்தர் அவரவருக்கு என்று நியமிக்கப்பட்ட ஊழியத்தை ஊழியரை சார்ந்து எவற்றை எல்லாம் காணிக்கையாக கொடுக்கிறோமோ அத்தனையும் பரிசுத்தமானதே!

10. கடைசியாக நாம் சொல்லும் ஆணை, கொடுக்கும் உறுதிமொழி, போடும் ஒப்ப்பந்தம் போன்றவைகள் பரிசுத்தமானவைகள்

சொல் தாவறாமல் இருந்தால் அவன் பூரண புருசன் என்றும் ஆணையிட்டதில் நாம் தவற கூடாது ஏனெனில் கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.

வேதத்தில் உள்ள மகா பரிசுத்தமானவைகள் ஏழு! அவைகள்

  1. ஆசரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலம்
  2. பலிபீடம்
  3. எல்லாவிதமான பலிகள், உதாரணமாக சர்வாங்க தகன பலி, பாவ நிவாரண பலி, குற்ற நிவாரண பலி etc.
  4. கொகாத்தியரின் பணி மகா பரிசுத்தமுள்ளது. பரிசுத்தமானவைகளை சுமக்கும் பணி. ஆனால் அதற்கு உள் தலையிடகூடாது.
  5. கிறிஸ்து மகா பரிசுத்தமானவர்.
  6. நமது விசுவாசம் மகா பரிசுத்தமானது
  7. தேவன் வீற்று இருக்கும் சீயோன் மகா பரிசுத்த முள்ளது ஏனெனில் அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்.

எனவே இந்த பரிசுத்தம் உள்ள தெய்வத்தை அறிய கர்த்தர் பாக்கியம் கிருபை தந்தார் என்றால் நாம் தான் விசேசமானவர்கள் மற்றும் பாக்கியவான்கள். அவரிடம் வந்தால் பரிசுத்தம், அவரை பற்றி கேட்டால் பரிசுத்தம், அவரது இரத்தத்தை விசுவாசித்தால் பரிசுத்தம், அவரது தொடுதலை உணர்ந்தால் பரிசுத்தம், அவரது சிலுவையை சுமந்தால் பரிசுத்தம், அவரது கட்டளைக்கு கீழ்படிந்தால் பரிசுத்தம், அவரது மகிமையை கண்டால் பரிசுத்தம் ஏனெனில் நாம் ஆராதிக்கும் கர்த்தர் பரிசுத்தர். நாமும் பரிசுத்தமாக இருப்போம். சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர் பரிசுத்தர். ஆமென்.

செலின்


Share this page with friends