கன்னியாஸ்திரிகள் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம்

Share this page with friends

ரெயில் பயணத்தின்போது கன்னியாஸ்திரிளை துன்புறுத்தி பாதி வழியிலேயே இறக்கிவிட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 19 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களது பெண் உதவியாளர்கள் இருவர் மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபடுவதாக கூறி கூறி அவர்களை ரயிலில் இருந்து இறக்கி விட்டனர்.

ரெயிலில் நிஜாமுதீனில் இருந்து ஒடிசாவின் ரூர்கேலாவுக்கு  2 கன்னியாஸ்திரிகள் மற்றும் 2 கிறிஸ்தவ பெண்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ரெயிலில் மதமாற்றம் செய்ய முற்பட்டதாக சிலர் குற்றம்சாட்டி வார்த்தைகளினால் காயப்படுத்தியதோடு மட்டுமல்லாது முன்பின் தெரியாத இடத்தில் அதாவது ஜான்சி ரெயில் நிலையத்தில் இறக்கி அவமானப்படுத்தினர். பின்னர் சம்பவம் அறிந்து வந்த ரெயில்வே அதிகாரிகளின் விசாரணையில் அந்த கன்னியாஸ்திரிகள் மீது எந்த குற்றசாட்டும் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து ரயிலில் அவர்களை பாதுகாப்பாக ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தனர்.

மார்ச் 19 அன்று நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் இரண்டு பெண்கள்  துன்புறுத்தபட்டது “அதிர்ச்சியூட்டும்” செயல் என்று கூறி உள்ளார்.

“இது போன்ற சம்பவங்கள் தேசத்தின் உண்மையான முகத்தையும், பாரம்பரியத்தையும், சமத்துவத்தையும் சீர்குலைக்கின்றன. தனியொரு மனித சுதந்திரம் இது போன்ற சம்பவங்களால் பறிக்கப்படுகின்றன. அதனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வரின் கோரிக்கையை ஏற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா?

இந்தியாவின் மதிப்பை தன்னமற்ற அன்பினால் உலகறிய செய்த அன்னை தெரசா வாழ்ந்த இந்த நாட்டில் இன்று இதுபோன்று நடக்கும் கொடூர சம்பவங்கள் திருநாட்டையே தலைகுனிய வைக்கிறது.


Share this page with friends