வாழப்பாடி தேவாலயத்தில் புதுமையான கிறிஸ்துமஸ் குடில் அமைப்பு

Share this page with friends

வாழப்பாடி பத்தாம் பத்திநாதர் தேவாலய கிறிஸ்துமஸ் குடிலில் இடம்பெற்றுள்ள சென்னை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மற்றும் தஞ்சாவூர் இஸ்லாமிய இளைஞர்களின் ஒளிப்படங்கள்.

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பத்தாம் பத்திநாதர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குடிலில், தேசிய அளவில் மனிதநேயத்தோடு சேவையாற்றி வரும் நல்ல மனிதர்களைப் பாராட்டும் வகையில், புதிய தொழில்நுட்பத்தில் பல வண்ண ஒளிப்படக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மத வேறுபாடின்றி இக்குடிலை காண மத வேறுபாடின்றி மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலையைக் குடைந்து சாலை அமைத்த தசரத் மான்ஜி, நீர்த்தேக்கம் அமைத்த லாயுங்கி புய்யான் ஆகியோரது ஒளிப்படங்கள்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே, நூறாண்டு பழமையான பத்தாம் பத்திநாதர் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் தேவாலயம் அமைந்துள்ளது.

மின் விளக்குகளால் பிரகாசிக்கும் பத்தாம் பத்திநாதர் தேவாலயம்.

இந்த தேவாலயத்தின் பங்குத்தந்தையாக அ.சிங்கராயன், இரு ஆண்டாக கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில், புதுமையான கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வருகிறார்.

நிகழாண்டு பத்தாம் பத்திநாதர் கோவில் வளாகத்தில் மரியன்னை, குழந்தை இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் காட்சிகளுடன், புனிதபோப் ஆண்டவர் மற்றும் தேசிய அளவில் மனிதநேயத்தோடு சேவையாற்றி வரும் நல்ல மனிதர்களைப் பாராட்டும் வகையில், இவர்களை சித்தரிக்கும் ஒளிப்பட காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சென்னையில் மழை, வெள்ள விபத்தில் சிக்கிய மனநலம் பாதித்தவரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜஸ்வரி, தஞ்சாவூரில் கரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள், பீஹார் மாநிலத்தில் 22 ஆண்டுகளாக மலையைக் குடைந்து சாலை அமைத்த தசரத் மான்ஜி, 30 ஆண்டுகள் உழைத்து கால்வாய் அமைத்து மழைநீரை கிராமத்திற்கு கொண்டு வந்து நீர்தேக்கம் அமைத்த முதியவர் லாயுங்கி புய்யான் ஆகியோரது ஒளிப்படங்களும், இவர்களின் மனித நேயமிக்க சாதனைகள் பற்றிய குறிப்புகளும் இந்த குடில்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

கிறிஸ்துமஸ் குடிலிலுள்ள இயேசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் காட்சிகள்.

மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமாகத் திகழும் இக்குடில் குறித்து தகவலறிந்த வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மத வேறுபாடின்றி வந்து கண்டு களித்துச் செல்கின்றனர்.


Share this page with friends

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662