டிஜிட்டல் மீடியா ‘முட்டாள்களை’ உருவாக்குகிறதா?

Share this page with friends

(டிசம்பர் 11, 2020)
(Rev. Dr. J. N. மனோகரனின் தின தியானம்)

சில நிபுணர்களின் கூற்றுப்படி மூளைக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன: அறிவாற்றல் மற்றும் உணர்வுபூர்வமானது. ஒரு நல்ல மூளை பயன்பாடு என்பது இரண்டு அம்சங்களிலும் சீரான பயன்பாட்டை அளிக்கும். ஒரு நபரின் சிந்தனை டிஜிட்டல் மீடியா மீது அதிகம் சார்ந்துள்ளது எனில் வேறு எதிலும் ஈடுபாடற்றவர்களாக இருப்பார்கள். அதுபோல் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவத்தை மூளை அளிக்குமென்றால் பல விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. அதனால் சிந்திக்கவும், நற்காரியங்களில் செயல்படுத்தவும் திறனற்றவர்களாகி விடுகிறார்கள். நன்மை தீமைகளை மதிப்பிடுவதற்கான திறன் அல்லது பல்வேறு விஷயங்களை செயலாக்குவது மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பது என திறமையற்றவர்களாகி விடுகிறார்கள். வருத்தம் என்னவெனில், டிஜிட்டல் மீடியாக்களுக்கு அடிமையாவதால் பலர் ‘முட்டாள்களாக’ மாறிவிடுகிறார்கள்.

1) முட்டாள்கள் செவிசாய்ப்பதில்லை
வருந்தத்தக்கது என்னவெனில், ‘நல்ல வார்த்தைகள்’ மூடர்களால் வெறுக்கப்படுகின்றன. அவர்களுக்கு கேட்கும் பழக்கமோ கீழ்ப்படிதலோ இல்லை. ஆம், “மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே: அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான்” (நீதிமொழிகள் 23:9).

2) முட்டாள்கள் மற்றவர்களின் கண்ணோட்டத்தை கண்டு கொள்வதில்லை
சுவிசேஷ செய்தி முத்துக்களைக் காட்டிலும் விலையேறப் பெற்றது, “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள், உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள், போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்” (மத்தேயு 7:6) என ஆண்டவராகிய இயேசு எச்சரிக்கிறார். பொய்கள், அரைகுறை உண்மைகள் மற்றும் தவறான செய்திகள் என குப்பைகளில் வளர்ந்து ஊறிப்போன பன்றிகள் ‘நற்செய்தியை’ வழங்குவோரைத் தாக்கக்கூடும். இது போன்றவர்கள் சத்தியம் அல்லது ஞானத்தின் மீது பசி தாகமற்றவர்கள்.

3) முட்டாள்களுக்கு புரிவதில்லை
ஞானத்தை நிராகரிக்கும் அல்லது வெறுக்கும் (நீதிமொழிகள் 1:22) நபர்களால் நல்ல கருத்துக்களையோ, ஆலோசனைகளையோ, யோசனைகளையோ எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. ஆகவே, அவர்கள் சத்தியமான வாரத்தைகளை நிராகரித்து விட்டு அழியக்கூடிய உருவங்களின் மீது மனதை பதிக்கிறார்கள். இவர்களைப் போன்றோர் மிகுந்த பெருமைக் கொண்டு ஞானத்தை நிராகரிப்பதால் சத்தியத்தை விளக்கி சொல்லவோ அல்லது பயன்படுத்தவோ முடிவதில்லை.

4) முட்டாள்கள் மதிமயக்கம் கொண்டவர்கள்
அவர்கள் தங்களை மேதாவிகள் என்றும், தங்களுக்கு தான் ‘எல்லாம் தெரியும்’ என்றும் நினைத்துக் கொள்வது மட்டுமன்றி, நல்ல விவேகமும் அறிவோடும் பேசுபவர்களோடு விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். “மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அதன் வாய் அடிகளை வரவழைக்கும். மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி” (நீதிமொழிகள் 18: 6, 7).

இன்றைய காலங்களில், தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களெல்லாம் முட்டாள்தனமாகவும், மூடர்களோடு விவாதிப்பதுபோல் தோன்றுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லையே.

நான் என் சிந்தனை திறனை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்துகிறேனா? என சிந்திப்போம்.

ஜேஎன்மனோகரன்
நுண்ணறிவு
டிஜிட்டல் மீடியா முட்டாள்களின் விவாதங்கள்.


Share this page with friends