யோவான் ஸ்நானகனை காட்டிலும் பெரியவரா?

Share this page with friends

யோவான் ஸ்நானகனை காட்டிலும் பெரியவரா?

(Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்)

“ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்” (மத்தேயு 11:11) இது ஒரு ஆச்சரியமான வசனம். மோசே நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் பழைய உடன்படிக்கையின் வரிசையில் யோவான் ஸ்நானகன் மிகப் பெரியவர். அவருடைய மகத்துவத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சரிபார்க்கிறார். சிறு காற்றுகூட அவரை அசைக்க முடியாது, எப்போதும் சீராக இருப்பவர் யோவான். தீர்க்கதரிசி என்ற முறையில், அவர் கர்த்தருடைய வழியை ஆயத்தம் செய்ய அனுப்பப்பட்ட தூதன். அவர் இந்த பூமியில் பிறந்த அனைவரையும் விட சிறப்பு வாய்ந்தவர். ஆனாலும், அவரை புதிய நற்செய்தி ஒழுங்கிற்குள்ளோ அல்லது புதிய உடன்படிக்கையின் விசுவாசிகளுடனோ ஒப்பிட முடியாது. ஏனெனில் தேவனுடைய ராஜ்யத்தில் மிகக் குறைவானவர்கள் கூட யோவான் ஸ்நானகனை விட பெரியவர்களாக இருப்பார்களே.

இது யோவான் ஸ்நானகனின் தரவரிசை மற்றும் அந்தஸ்தைப் பற்றியது அல்ல. இது ஒரு விசுவாசிகள் தேவனுடைய முன்னிலையில் அவருடைய கிருபையால் நிற்பதைப் பற்றியும், விசுவாசிகளுக்கு ஒதுக்கப்பட்ட அருட்பணி அல்லது அழைப்பை பற்றியும் ஆகும்.

1) தீர்க்கதரிசியை காட்டிலும்:
யோவான் ஸநானகன் ஒரு சிறப்பு நோக்கத்திற்காக இருந்தார். அனைத்து விசுவாசிகளும் தீர்க்கத்தரிசிகளை காட்டிலும் ரெியவர்கள், சாட்சிகளாக இருக்கிறார்கள் (அப்போஸ்தலர் 1: 8). பரிசுத்த ஆவியின் உள்ளார்ந்த பிரசன்னம் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு ஒரு வரம். பழைய உடன்படிக்கை கால தீர்க்கதரிசிகளுக்கு உள்ளான தேவ பிரசன்னம் இல்லை, காலத்திற்கேற்ப அல்லது சூழ்நிலைக்கேற்ப தீர்க்கத்தத்தரிசியாக அபிஷேகம் செய்யப்பட்டார்கள்.

2) தூதர்:
பொதுவாக தீர்க்கத்தரிசி என்பவர் எச்சரிக்கை, கண்டனம் மற்றும் நியாயத்தீர்ப்பு போன்ற செய்திகளைக் கொடுப்பார்கள். ராஜ்யத்தின் விசுவாசிகள் ‘சமாதானம்’ மற்றும் தேவனின் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள். யோவான் மக்களை மனந்திரும்புதலுக்கும் தேவனோடு ஒப்புரவாகுதலுக்கும் அழைக்கிறார் (II கொரிந்தியர் 5:18).

3) வழியை ஆயததப்படுத்துங்கள்: ஆண்டவருடைய சீஷர்கள் அவரின் இரண்டாவது வருகைக்கான வழியைத் ஆயத்தம் பண்ண அழைக்கப்படுகிறார்கள். யோவான் ஸ்நானகனின் ஆயத்தம் என்பது ஆண்டவரின் முதல் வருகையான மாம்சமாகுதலுக்கும் மற்றும் உலகத்தை இரட்சிப்பிற்குமானதாகும். புதிய உடன்படிக்கை விசுவாசிகள் அவருடைய வருகைக்காக மக்களின் இதயங்களையும் மனதையும் ஆயத்தம் செய்ய அழைக்கப்படுகிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, பல விசுவாசிகள் தங்கள் நிலைப்பாட்டையும் அழைப்பையும் புரிந்து கொள்ளவில்லை, ஏனெனில் பல போதகர்கள் மற்றும் ஆசிரியர்கள் பறக்க முடியாத சிறகுகள் உடைந்த பறவைகளைப் போல அவர்களைக் குறைத்து மதிப்பிட்டு கொள்ளும்படியாக்கி விட்டார்கள்.

இந்த உலகில் எனது அழைப்பையும் அருட்பணியையும் நான் புரிந்து கொண்டேனா? சிந்திப்போமே.

ஜேஎன்மனோகரன்
உயிரூட்டும்மனவெளிச்சம்
யோவான்ஸ்நானகனிலும்_பெரியவர்
அழைப்பை_புரிந்துகொள்ளுதல்


Share this page with friends