இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?

இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?
எழுப்புதல் என்கிற வார்த்தை இன்று பெந்தேகோஸ்தே வட்டாரத்தில் மிகவும் பிரபலமாகி விட்டது. ஆனால் அதன் மெய்யான அர்த்தம் ஆதி நிலை திரும்புதல், முன் நிலை அடைதல், சரியான நிலை அடைதல், புது நிலை அடைதல், திரும்ப சரியாதல், முடங்கி போனதை திரும்ப தன் நிலை கொண்டு வருதல், மார்க்கம் திரும்புதல், மனம் சரியாதல் என்பதாகும். இவைகள் நடக்க ஒரு எழுச்சி தேவை! அந்த எழுச்சி ஆங்கீகரிக்கப் பட வேண்டும், பிறரால் அதிக அளவில் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும். போராட்டம், கத்தி, வாக்குவாதம் இன்றி எழும்பும் இந்த பரிசுத்த அறநெறி சமாதான எழுச்சி கண்டு அரசாங்கம் செய்வது அறியாமல் திகைக்க வேண்டும். எதிராளிகள் கூட கிறிஸ்துவின் அன்பினால் அர்ப்பணிக்க வேண்டும். சமுதாயம் வளர்ச்சிப் பெற வேண்டும். முடிவு தேவ மகிமை வெளிப்பட்டு கர்த்தரின் வார்த்தைகள் விருத்தி அடைய வேண்டும். சபையை குறித்த பயம் தேசத்தில் வர வேண்டும். தெய்வீக சாயலாகிய ஆதி சாயலுக்கு திரும்பி வர வேண்டும்.
எல்லாரும் எழுப்புதல் என்ற உடனே 20 ஆம் நூற்றாண்டில் நமது நினைவுக்கு வருவது 1904–1905 Welsh Revival, 1906 (Azusa Street Revival), 1930s (Balokole), 1970s (Jesus people), 1971 Bario Revival, 1909 Chile Revival, 1995 Brownsville revival or pansacola revival மற்றும் சீனா எழுப்புதல் என்று வகைப்படுத்தி படிக்கின்றோம். Yes எல்லா எழுப்புதலுக்கும் பொதுவான அடிப்படை காரணிகள் like ஜெபம், வசனம், பரிசுத்தம், ஆத்தும தாகம், பரிசுத்த ஆவியின் நிறைவு போன்றவைகள் சொல்லப் பட்டாலும் ஒவ்வொரு இடங்களில் நடந்த எழுப்புதல்கள் ஒவ்வொரு சூழலில் ஏற்பட்டவையாகும். எனவே இந்திய எழுப்புதல் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் கவனிக்க வேண்டும். எழுப்புதல் பெற்ற நாடுகளை குறித்து படிக்கின்ற நாம் பொதுவாக நம் நாட்டினை குறித்து வேதத்தோடு ஒப்பிட்டு பார்த்து படிப்பது இல்லை. நாம் எழுப்புதலின் பிரபலம், அதினால் உண்டாகும் வளர்ச்சி அவைகளின் அடிப்படையில் தான் பார்க்கிறோமே தவிர எழுப்புதல் எதார்த்தம் என்ன என்று வேதத்தின் அடிப்படையில் அறியாமல் போகின்றோம்.
வேதத்தில் எபேசு பட்டணத்தின் ஆத்மீக எழுச்சியை குறித்து படித்தால் இந்திய context இல் அது மிகவும் ஒத்து போகிறதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் எபேசு பட்டனமும் ஒரு ஆசியா கண்டத்தின் ஒரு பகுதி கிட்டத்தட்ட இந்தியாவின் context கொண்ட ஒரு பகுதி. (Act 19 ஆம் அதிகாரம்)
விக்கிரகங்கள் நிறைந்த பகுதி, அதுவும் பெண் தேவதைகளை வணங்கும் பகுதி ( தெமேத்திரு போன்றவர்கள் விக்கிரங்களை உருவாக்கி விற்கும் தொழில் செய்து வந்தனர்)
கிரேக்க தத்துவ ஞானிகள் நிறைந்த பகுதி. இந்தியாவிலும் Nyaya, Vaisheshika, Samkhya, Yoga, Mīmāṃsā and Vedanta, and five major heterodox (sramanic) schools—Jain, Buddhist, Ajivika, Ajñana, periyaarisam, and Charvaka.போன்ற தத்துவ சிந்தைகள் நிறைந்து காணப்படுகிறது.
கல்வி கூடங்கள் நிறைந்த பகுதி. பவுல் திறன் என்கிறவனின் பள்ளியில் தான் கூட்டம் நடத்துகிறார்.
மந்திர புஸ்தங்கள், ஏடுகள், காவியங்கள் போன்றவற்றை கையில் வைத்துக்கொண்டு மக்களை புரட்டுகின்ற மந்திர தந்திர வாதிகள் நிறைந்த இடம்.
இங்கிருந்து கிட்டத்தட்ட ஆசியா முழுவதும் சுவிசேஷம் அறிவிக்கப் பட்டு எபேசு ஒரு பெரிய சபையாக மாறினது. அது எப்படி என்று தொடர்ந்து கவனிப்போம்.
A. Observe. உற்றுப் பார்த்தல்/ உற்று நோக்குதல்
பவுல் எபேசு பட்டணத்தில் வருகிறார். அப்பல்லோ கொருந்து பட்டணத்தில் இருக்கிறார் அங்கு தான் அவர் திட்டமாக கிறிஸ்துவை குறித்து ஆக்கில்லா பிருஸ்கில்லா மூலம் போதிக்கப் படுகிறார். ஏனெனில் இந்த எபேசு சபை அப்பல்லோவால் ஸ்தாபிக்க பட்டது. பவுல் முதலில் observe செய்கின்றார். சில சீசரை கண்டுபிடிக்கிறார். கேள்வி கேட்கிறார். சபையின் நிலவரத்தை அறிகிறார். இந்திய சபைகளின் நிலவரத்தை அறியாமல் ஒருபோதும் எழுப்புதல் வராது
எபேசு சபையை வினவி/ கேள்வி கேட்டு அதன் நான்கு கோணல்களை கண்டுபிடிக்கிறார்.
1. சுவிசேஷ கோணல்: ஏனெனில் இவர்கள் கேட்டது யோவானின் சுவிசேஷம். யோவான் கிறிஸ்துவை அறிவித்தது போன்ற சுவிசேஷம் ஏனெனில் அப்பல்லோ யோவான் ஸ்நாபகனின் சீசன்.
2. ஞானஸ்தான கோணல்: இந்த எபேசு சபை யோவான் ஸ்நாபகன் கொடுத்த ஞானஸ்தானத்தை பெற்றவர்கள்.
3. ஆராதனை கோணல் பரிசுத்த ஆவி என்று ஒருவர் உண்டு என்று கேள்விப் படவே இல்லை. அவர் இல்லாமல் எப்படி ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க முடியும்.
4. ஊழியக் கோணல் வரங்களை குறித்து, கிறிஸ்துவின் சுவிசேஷம் குறித்து அறிவின்மை, சபையை எப்படி அடுத்தக் கட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற தரிசனம் இன்மை.
இதே கோணல்களை எபேசு சபையில் பவுல் உற்று நோக்கி வினவி கேள்விக் கேட்டு கண்டு பிடித்தது போன்று இந்திய சபைகளிலும் கண்டுப் பிடிக்க வேண்டும் அப்படி செய்ய வில்லை எனில் எழுப்புதல் என்பது சந்தேகமே!
இன்று இந்திய சபைகளின் நிலை! (சில உதாரணங்கள்)
சபையின் விசுவாசிகளின் எண்ணிக்கையை பெருக்குதல்.(இது தானாக நடக்க வேண்டியது).
ஏன் ஞானஸ்தானம் என்கிற அறிவின்மை/ அபோஸ்தல உபதேசமின்மை.( பொதுவாக ஞானஸ்தானம் சுகம், வேலை, கல்யாணம், வாழ்வில் உயர்வு பெற ஒரு வழிகாட்டி போன்ற தோற்றம் உருவாக்கப் பட்டு இருக்கிறது. சரியான மனம்திரும்புதல், கிறிஸ்துவின் இரத்தத்தின் சுத்திகரிப்பு, மாறுபாடான சந்ததியை விட்டு விலகுதல் போன்ற மெய்யான நோக்கங்களின்மை
பரிசுத்த ஆவியினால் நடத்த தூண்டுவதை விட்டு ஒவ்வொருவருடைய method களை திணித்து கிறிஸ்துவை போல மாற்றுவதற்கு பதில் நம்மை போல மாற்றுதல்
சீசத்துவமின்மை. மிஷனரி ஊழியம் செய்ய தாகமின்மை. அப்படியே போனாலும் சொந்த மக்களோடு identify பண்ணும் தன்மை.
அவரவர் சபையின் நிலை அவரவருக்கு தான் தெரியும். எழுப்புதலின் தடைகள், எழுப்புதலின் சரியான காரணிகள் என்பது ஒவ்வொரு இடத்திற்கும் வித்தியாசம் உள்ளவை. அவற்றை அவரவர் அந்த அந்த சபையில், இடங்களில் உற்றுப் பார்த்து கண்டுப் பிடிக்க வேண்டும்.
B. Rectify/ கோணல்களை சரி செய்தல்
பவுல் சபையை வினவி கேள்வி கேட்டதோடு நிறுத்தி விடாமல் சரி செய்கின்றார். திரும்ப ஞானஸ்தானம் கொடுக்கிறார். ஜெபிக்கின்றார். கைகளை வைக்கின்றார். பரிசுத்த ஆவியானவர் அந்நிய பாசை அடையாளத்தோடு, தீர்க்கதரிசன வரத்தின் அடையாளத்தோடு பலமாக இறங்கினார். ஆராதனையில் அக்கினி இறங்கியது.
சரி செய்ய வேண்டியதை சரி செய்யாமல் எப்படி கத்தி கூப்பாடு போட்டாலும் எழுப்புதல் என்பது கானல் நீரே!
என் சபைதான் என் மாவட்டத்தில் பெரிய சபை, என் ஊரில் பெரிய சபை என்று காட்ட தவறான ஞானஸ்தானம் கொடுத்து இருந்தால், சரியான மனம் திரும்புதல் இன்றி சபை எண்ணிக்கையை, membership ஐ மட்டும் கருத்தில் கொண்டு செய்து இருந்தால் அவற்றை சரி செய்யவும்.
ஜனத்தை பரிசுத்த ஆவியில் நடத்தி சீடராக மாற்றி புறப்பட்டு போக உற்சாகம் செய்யாமல் நம் சபையின் வளர்ச்சியை மட்டும் நோக்கமாக இருந்து இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும்.
C. Discussion/Studying scriptures வேதவசனத்தை படித்தல்
கிட்டத்தட்ட 12 பேர் தான் அங்கு சரி செய்யப் பட்ட கூட்டத்தில் இருந்தார்கள். எழுப்புதலுக்கு நிறைய ஆட்கள் ஒன்றும் தேவை இல்லை. சரி செய்யப்பட்ட 12 பேர் போதும்.
எல்லா இடத்தில் நடந்தது போன்றும் இங்கும் சில எதிர்ப்புகள் வருகின்றது. அவர்கள் எதிர்ப்புக்களோடு போராட வில்லை மாறாக என்ன செய்தார்கள்!
எதிர்த்து கலகம் உண்டு பண்ணினவர்களை விட்டு, நிந்தித்தவர்களை விட்டு பிரிந்தார்கள். சாவல் விட்டு கொண்டு இருக்கவில்லை. ஒரு கை பார்ப்போம் என்று போராடி கொண்டு இருக்க வில்லை.
They changed their method. தைரியமாக பிரசங்கம் செய்தவர்கள், வசனம் படிக்க இடம் தேடினார்கள். திறனின் வித்தியாசாலையை கண்டுபிடித்தார்கள்.
அனுதினம் வசனத்தை படித்தார்கள். அனுதினம் பைபிள் study நடந்தது. சரியான Bible study மற்றும் devotional time இல்லாமல் எழுப்புதல் என்பது சாத்தியமாகாது. வேத வசனத்திறக்கு செவிக் கொடுக்காமல், அதற்கு கீழ்படியாமல், வசனத்திற்கு நடுங்காமல், அதை கைக்கொள்ளாமல் என்ன ஜெபித்து கொண்டு இருந்தாலும் பயன் இல்லை. (கிட்டத்தட்ட இரண்டு வருடம். அப்படி என்றால் சீசன் குறைந்தது இரண்டு வருடம் வசனம் இடைவெளி இன்றி தொடர்ந்து படிக்க வேண்டும்)
அதுமட்டும் அன்றி விக்கிரகங்கள் தவறு அவற்றில் கர்த்தர் பிரியமாக இருக்க மாட்டார், இயேசுவே கிறிஸ்து, நியாயத்தீர்ப்பு, நித்திய ஜீவன், தேவராஜ்யம் போன்றவற்றை குறித்து கிட்டதட்ட ஆசியா முழுவதும் கேட்க சத்தியத்தை அறிவித்தனர்.
வசனம் படித்தால், தியானித்தால் மட்டும் போதாது, சத்தியத்தை சத்தியமாக பேச வேண்டும். பிறர் காயப்பட கூடாது, motivate மட்டும் தான் பண்ணிவேன், உற்சாகம் தான் ஊட்டுவேன் என்றும், வாக்குத்தத்தம் தான் கொடுப்பேன் என்றும், நம்பிக்கை தான் ஊட்டுவேன் என்றும் வீறு கொண்டு மெய்யான சத்தியத்தை, கடிந்து கொள்ளுதலை, எச்சரிப்பை, சீர்திருத்தத்தை மறைத்தால் எழுப்புதல் என்பது சாத்தியமற்றது. இருதயம் குத்தப்பட்டு இருக்கிற இடத்தில் தான் மனம் திரும்புதல் உண்டாகி காயம் கட்டப்படும்.
அப்படி பட்ட இடத்தில் தானாக அற்புத அடையாளங்கள் நடக்கும். அதற்காக பெரிய உபவாசம் ஒன்றும் தேவை இல்லை ஏனெனில் சத்தியத்தை சத்தியமாக அறிவிக்கும் போது விடுதலை தானாக நடக்கும். சத்திய வசனத்தை அறிவிக்கும் போது நடக்கும் அற்புதமே மெய்யானது. அதுதான் எபேசுவில் நடந்தது. அதுதான் சரியான எழுப்புதல். அற்புதத்தை முன் நிறுத்தி சுவிசேஷம் அறிப்பது என்பது நிலைப்பது இல்லை. சத்திய சுவிசேஷத்தை/ வசனத்தை அறிவிக்கும் போது அதை உறுதி படித்த கர்த்தர் செய்யும் அற்புதமே வரங்களால் நடக்கும் அற்புதத்தை விட பெரியது.
D. Encountering challenges/ சாவல்களை சந்தித்தல்/ எதிர் நோக்குதல்
சாவல்கள் இல்லாமல் எழுப்புதல் இல்லை. தியாகம் இல்லாமல் ஜெயம் இல்லை. ஆனால் நாம் ஜெபிக்கும் எழுப்புதலில் பரிசுத்த ஆவி நம் மூலம் ஊற்றபட்டு, நாம் பயன்படுத்தப் பட வேண்டும், மெகா சபை, பிரபலியம் மற்றும் கனம் போன்றவை தான் பிரதான நோக்கமாக இருக்கிறது. ஆனால் அன்றைய எழுப்புதல் முழுவதும் மனிதனால் திட்டமிடப்படாத, கணிக்க முடியாத, மனிதனால் எதிர்பார்க்க முடியாத அனுபவம். எல்லாம் ஆவியானவரின் புதிய புதிய அனுபவங்கள். அதற்கு தேவை சவால்களை கடின சூழலை சந்திக்கும் மனப்பக்குவம். கிறிஸ்து மகிமைப்பட புறப்பட்டு போகும் தன்மை, அவமானம் சகிக்க விட்டு கொடுத்தல், பாடு பட அனுமதித்தல் போன்ற சுபாங்களில் தான் இந்த கிறிஸ்துவின் எண்ணத்தின் எழுப்புதல் வெளிப்படும். நிந்தை அவமானம் சகித்து சத்தியத்தை சமரசம் செய்யாமல் உள்ளதை உள்ளபடி சத்தியமாக உரைத்து கிறிஸ்துவின் சிலுவை சுமக்க தயாராகும் போது எழுப்புதல் தானாக நடக்கும். பாடுபட, அவமானப்பட விருப்பம் இல்லாமல் எத்தனை ஜெபித்தாலும், தேவ சமூகத்தை சுமக்கிரோம் என்றாலும் எழுப்புதல் தாமதமே! தான தர்மம் செய்து, பய பக்தியாக வாழ்ந்த கொர்நெல்யுவின் வீட்டில் தான் தூதன் வந்தார். அதுவும் சுவிசேஷம் அதே தூதனை கொண்டு அறுவிக்கமால், தனது ஆட்களோடு தன்னை அடையாளப் படுத்தி கொண்டு இருந்த பேதிருவை கொண்டு தான் பேச வைத்தார். இங்கு பேதிருவின் தான் விரும்பாத இடத்திற்கு போக விட்டுக் கொடுத்த மனப்பக்குவம் தான் அந்த புரஜாதியான் வீட்டில் அதிகாரிகள் மத்தியில் எழுப்புதலை கொண்டு வந்தது.
இங்கு பவுல் பெற்ற எதிர் சாவால்கள்/ வல்லமைகள்
மந்திரவாதிகள்: முடிவில் துண்டை காணோம் என்று ஓடுகிறார்கள். மந்திரவாதிகளை எதிர்க்கும் அபிசேகம் தான் இந்தியாவில் வெளிப்பட வேண்டும்.
தத்துவஞானிகள் முடிவில் கிரேக்கர்கள் பயப்படுகிறார்கள்.
மாயவித்தைகாரகள்: முடிவில் மந்திர தந்திர புரட்டு புஸ்தகத்தை போட்டு தீயிட்டு எரிக்கிரார்கள்.
தெமேத்திரியு தொழில் பாதிப்பு அடைந்த போன்ற வியாபாரிகள். முடிவில் கர்த்தர் அவர்கள் கையில் இருந்து தப்ப நல்ல ஆதரவை கர்த்தர் எழுப்பி கொடுத்து கூட்டத்தை கலைத்தார். நல்ல எழுப்புதலில் சிலருடைய தொழில் பாதிப்பு நிச்சயம் உண்டாகும். சில பாவ தொழில்கள் நஸ்டமடையும். சில நெருக்கடிகளை எழுப்புதல் கொண்டு வரும். அவற்றை சந்திக்க தைரியம் நம்பிக்கை வேண்டும்.
இந்த எழுப்புதலில் நடந்தது என்ன?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வசனத்தை ஆசியா முழுவதும் கேட்டார்கள். பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது. தெய்வீக சாயலில் திரும்பி வர கிறிஸ்துவை குறித்த பிதாவின் திட்டத்தை வேத வாக்கியங்களில் உள்ள சத்தியத்தின் படி கேள்விப் பட்டனர்
வசனத்தை உறுதிப்படுத்த அற்புத அடையாளங்கள் நடந்தது, மந்திரவாதிகள் எதிர்க்க முடியவில்லை, மந்திர புஸ்தகங்கள் எரிக்கப் பட்டது. அநேகர் விடுதலை பெற்றனர்.
விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.
புறஜாதிகள் சபையை குறித்து கலக்கம் அடைந்து பயந்தனர்.
இப்படிப்பட்ட எழுப்புதல் தான் நமது வாஞ்சை எனில் அது நிச்சயம் நடக்கும். மேற்குறிப்பிட்ட நிலைகளில் நம்மை பரிசோதனை செய்வோம். எழுப்புதல் பெறுவோம். இந்தியா கிறிஸ்துவின் வல்லமையை பெறட்டும். கிறிஸ்துவின் மெய்யான சாயலுக்கு திரும்பட்டும்
செலின்