பஞ்சாப் முதலமைச்சர் ஞானஸ்நானம் பெறுவதாக பரவும் வீடியோ உண்மையா?

Share this page with friends

பரவிய செய்தி

மாண்புமிகு பஞ்சாப் முதலமைச்சர் அவர்கள், ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் காட்சி எனக் கூறி ஒரு வீடியோ காட்சி ஒன்று சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவின் உண்மை நிலை என்ன என்பதனை நாம் ஆராயலாம்.

Thanks: youturn.in/factcheck

விளக்கம்

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் புதிய முதல்வராக நியமிக்கப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக மதம் மாறியதாக 1 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் இடம்பெற்றுள்ள நபரின் உருவம் தற்போதைய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியுடன் வேறுபட்டு உள்ளதை பார்க்கலாம்.

கிறிஸ்தவர்கள் பலரும் சூழ்ந்து இருக்க டர்பன் அணிந்த ஒருவர் தண்ணீரில் இருக்கும் பாதிரியாரின் அருகே செல்கையில், 30வது நொடியில் சிம்ரன்ஜித் சிங் என்பவர் சாமுவேல் என பாதிரியார் ஞானஸ்தானம் பெறுபவரின் பெயரை தெளிவாய் உச்சரிப்பதை கேட்க முடிகிறது.

சரண்ஜித் சிங் பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்ற போது தலித் சீக்கியர் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல் முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என செய்தியிகளில் வெளியாகியது. அவர் சீக்கிய மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக எந்த தகவல்களும் இல்லை.

முடிவு : 

நம் தேடலில், பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக பரப்பப்படும் வீடியோ தவறானது. அதில் இருப்பது சரண்ஜித் சிங் அல்ல என அறிய முடிகிறது.

சமூக வளைதளங்களில் பரவும் எல்லா வீடியோக்களையும் உண்மை என நம்பிவிடாதிருங்கள். நம்பகத்தன்மையற்ற வீடியோக்களை ஒருவருக்கும் பகிராதிருங்கள். இது தேவையற்ற சலசலப்பையும், எதிர் விமர்சனங்களையும் உருவாக்கும்.

நம்பகமான இந்த செய்தியினை உங்கள் நண்பர்களிடம் கொண்டு போய் சேர்க்க பிரயாசப்படுங்கள்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

யாருடைய காதில் பிரச்சனை இருக்கிறது? சிறுகதை
பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல என்பதை உள்நாட்டு யுத்தம் புலப்படுத்துகிறது: இலங்கை திருச்சபை
வழக்கறிஞராக தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்ற முதல் வழக்கறிஞ்ஞருக்கு பாராட...
இலங்கையில் பணியாற்றிவந்த அமெரிக்க மிஷனெரி தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் இலங்கைக்கு வந்த ...
உங்கள் சபையிலுள்ள பரிசேயர்களை அடையாளம் காண்பது எப்படி?
Trust God - Christian Quotes
எதை தரித்துக் கொள்ள வேண்டும்
கர்த்தர் உனக்கு கேடகமாய் இருப்பார்
நில்! கவனி! செல்! பரலோக பிரயாணிகளின் கனிவான கவனத்திற்கு
முதியோருக்கு (Senior citizen) செய்ய வேண்டியது

Share this page with friends