சகரியா செய்தது சரியா?

சகரியா செய்தது சரியா?
தனக்கொரு பிள்ளையைத் தரவில்லை
என்பதற்காக தேவ சேவையில் தளர்வு காட்டவில்லை
தேவ சந்நிதியில் ஆசாரிய ஊழியம்
செய்துவருகிற காலத்திலே
ஆசாரிய முறைமையின்படி, அவன்
தேவாலயத்திற்குள் பிரவேசித்து
தூபம் காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றான்
தளர்ந்து போகாமல் உண்மையாய்
ஊழியத்தில் செயல்படுங்கள்
எந்த நேரத்திலும் தேவ தூதன்
உங்கள் பக்கத்தில் வந்து நிற்கலாம்
ஜெப ஊழியம் தொடர்ந்தது
கர்த்தரிட்ட கற்பனைகள், நியமங்கள் அத்தனையும்
அப்படியே நிறைவேற்றப்பட்டது
குற்றமற்ற தம்பதிகளாய் தேவனுக்கு முன்பாக
நீதியுள்ளவர்களாய் இருந்தார்கள்
நீங்கள் நீதிபதி ஆகாவிட்டாலும்
குறைந்தபட்சம்
நீதியுள்ளவர்களாய் இருக்கவேண்டும்
என்பது நீதிபரரின் விருப்பம்
ஜெப தூபம் மேலே சென்றது
தேவ ஜனம் வெளியே நின்றது
தேவ தூதன் தூபபீடத்தின்
வலதுபக்கத்திலே நின்று
தரிசனமானான்
சகரியாவுக்கு நடுக்கம் பிடித்தது
திடீரென்று அவனது ஜெப வேளையில்
தேவ தூதன் வந்து நின்றவுடன்
படைத்தலைவனே பயந்துவிட்டான்
கொர்நேலியுவுக்கு அதுவே முதல் தரிசனம்
தள்ளாத வயதிலும் தள்ளாடவில்லை
ஜெபத்திற்கு பதில் வந்ததும் பயந்துபோய்,
விசுவாசிக்க முடியாமல்
சுவாசிக்க முடியாதவனைப் போலவும்
மூச்சுத்திணறல் உள்ளவனைப்
போலவும் தடுமாறினார்
தாத்தா என்று அழைக்கப்பட்டவருக்கு
அப்பா என்ற அந்தஸ்த்தைப்
பெறமுடியுமா என்பதில்
சந்தேகம் வந்துவிட்டது
அவிசுவாசம் ஒருவித அமைதியை உற்பத்தி செய்யும்
விசுவாசம் கண்களை திறக்கும்
குடும்பத்தில் அமைதி வேண்டும். ஆனால்
அவிசுவாசத்தினால் உண்டாகும் ஒருவித அமைதி வேண்டாம்
சகரியா தனது சுவாசப் பாதையை சரிவர
பார்த்துக்கொண்டார்
ஏனோ, விசுவாசப் பாதையில் தடுமாற்றம் கண்டார்
அவிசுவாச அறிக்கையை
வெளியே விட்ட உடனே
ஒன்பது மாத Lock Down,
அதாவது அவருக்கு மட்டும்
முழு நாவடங்கு உத்தரவை
தூதன் மூலம் தேவன் பிறப்பித்துவிட்டார்
சகரியாவும் எலிசபெத்தும்
நகமும் சதையும் போலிருந்தாலும்,
விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நின்றபோது,
பத்தாம் வகுப்பில் நான் பெயில் ஆனது போல
விசுவாசம் என்ற அந்த SUBJECT-ல்
சகரியா பெயில் ஆகிவிட்டார்
காரியங்கள் இப்படியிருக்க
சகரியாவுக்கு மட்டும் ஒன்பது மாதங்கள்
முழு ஊரடங்கு Sorry நாவடங்கு
உத்தரவை பிறப்பித்தது சரியா?
Right to Information Act, 2005-ன் படி
வெள்ளை அறிக்கை கேட்கக்கூடாது
விசுவாசம் என்ற பேச்சு வரும்போது
புருஷனென்றுமில்லை மனைவியென்றுமில்லை
தன் விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
சந்தேகப்பட்டால் ஊமையாகிப்போவான்
சகரியாவே, தூபம் காட்டும்போதும்
ஜெபிக்கும்போதும் துள்ளுகிறாய்
தூதன் பதிலைக்கொண்டு வந்தபோது ஏன் பதறுகிறாய்?
சகரியாவை எப்போதாவது கனவில் சந்தித்தால்
சகரியா நீ செய்தது சரியா?
என்று மட்டும் கேளுங்கள்
என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.
மீண்டும் அடுத்த பதிவில்
சந்திப்போம்.
பருகுங்கள் பகிருங்கள்
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14
என்னை எழுத வைத்த வேத பகுதிகள்:
லூக்கா 1- ம் அதிகாரம் | அப் 10-ம் அதிகாரம்
2 தீமோத்தேயு 3:8 | ஆபகூக் 2:4