சுகம் பெற்று வீடு திரும்பிய பிரபல ஊழியர்

Share this page with friends

பிரபல ஊழியர் ஐசக் ஜோ தற்போது எப்படியிருக்கிறார்? நேரடி விளக்கம் – சென்னையை சேர்ந்த பாஸ்டர்.ஜசக் ஐாே அவரது உடல் நிலை தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வந்தது.

அவருக்காக உலகம் முழுவதும் ஜெபங்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வியாதியிலிருந்து சுகம் பெற்று வீடு திரும்பிய அவர் தனது முகநூல் பக்கத்தில் தன்னிலை விளக்கத்தை அளித்துள்ளார்.

இசை பள்ளி வேலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் கவனகுறைவுடன் ஈடுபட்டதே இதற்கு காரணம் என்றும், நம் மீது தவறு இருப்பினும் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தேவன் பரிபூரண சுகத்தை கொடுத்துள்ளார். எனக்காக ஜெபித் அனைவருக்கும் நன்றி. நீங்கள் பாதுகாப்போடு இருங்கள் என்று அக்காணொளியில் பேசியுள்ளார்.

தொடர்ந்து பாஸ்டர்.ஜசக் ஜாே அவர்களுக்காகவும் குடும்பத்திற்காவும் ஜெபிக்க மறக்கவேண்டாம்.

யாரேனும் ஊழியர்களோ சபை விசுவாச பிள்ளைகளோ இப்படிப்பட்ட வியாதியினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தால் அவர்களும் சீக்கிரத்தில் பரிபூரண சுகம்பெற ஜெபித்து கொள்ளுங்கள்.


Share this page with friends