நாம் நிர்மூலமாகாமல் இருப்பது கர்த்தரின் கிருபையே

Share this page with friends

நாம் நிர்மூலமாகாமல் இருப்பது கர்த்தரின் கிருபையே

இந்த நாட்களில் தனிப்பட்ட தெய்வீக உறவை வளர்த்து கொள்ள வேண்டும். பிறரது ஜெபத்தை அதிகமாக நம்பி, அண்ணன் 24 மணி நேரமும் நமக்காக ஜெபிப்பார், சகோதரன் ஜெபிப்பார், பாஸ்டர் ஜெபிப்பார், சபை ஜெபிக்கும் என்று எல்லாம் ஜெபம் கேட்கப் படும் என்று பிறரை சார்ந்து வாழ்ந்தது போதும்.

ஏனெனில் இப்படி பிறரை நம்பி நாம் நிர்விசாரமாக வாழும் போது, ஒரு கட்டத்தில் ஏன் சாமுவேல், தானியேல் மற்றும் மோசேக்கள் எழுப்பி ஜெபித்தால் கூட ஜெபம் கேட்க்கப்படாது என்று சத்தியம் போதிக்கிறது. எனவே நாம் இந்த கிருபையின் நாட்களில் கிருபையை பெற்று கொள்வோம். எப்படி?

A. கிறிஸ்து நமது பலவீனத்த்தில் பரிதவிக்கிறவர் அல்ல உதவி செய்கிறவர் என்று அறிந்து அவரது கிருபாசனத்தண்டையில் தைரியமாக கிட்டி சேருவோம்.

ஏனெனில் அவரே கிருபையின் ஊற்றாக இருக்கிறார். அவரே பாவம், சாபம், மாம்சம், உலகம், பகை, வியாதி, துரைத்தனங்கள், அதிகாரங்கள், பாதாளம் மற்றும் மரணத்தை வெற்றி சிறந்தவர். அவராலன்றி மீட்பு இல்லை. அவரை தொழுது கொள்ளுகிறவர்கள் ரட்ச்சிக்கப் படுவார்கள்.

B. அவரது இரத்தம் வசனத்தின் மேல் நம்பிக்கை வையுங்கள்.

அவரது இரத்தத்தால் தான் சுத்திகரிப்பு, பாதுகாப்பு இருக்கிறது. அவரது சத்தியம் தான் நம்மை விடுதலை ஆக்கிறது. பாவங்களை அறிக்கை செய்து அவரே பரிகாரி என்று இருதயத்தில் விசுவாசித்து நாவினால் அறிக்கை செய்து பாவத்தை விட்டு விடும் போது கிருபை தயவு இரக்கம் கிடைக்கும்.

C. கிறிஸ்துவில் அவரது கிருபையின் சத்துவத்தில் பெலப்பட வேண்டும்.

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்து, என் பெலவீனத்தில் கிறிஸ்துவின் கிருபை போதும் என்று கிறிஸ்துவையும் அவரது கிருபையையும் மேன்மை பாராட்டி வாழ்ந்த பவுலின் ரகசியத்தை அறிந்து கொண்டு, சிலுவையை பற்றி கொள்வோம். ஏனெனில் அங்கு தான் கிருபையின் ரகசியம் வெளிப்பட்டது. ஏனெனில் சிலுவையில் தான் கிறிஸ்து தன்னை தான் தாழ்த்தி வெருமையாக்கி எல்லா நாமத்திர்க்கு மேலான நாமத்தை பெற்றார்.

D. பிதாவின் மேலானவைகளை அவரது ராஜ்ஜியத்தை தேடுவோம்.

கிறிஸ்து பிதாவின் வலது பாரிசத்தில் நமக்காக பரிந்து பேசி கொண்டு இருக்கிறார். அங்கிருந்து நமக்காக கொடுக்கப் பட்ட பரிசுத்த ஆவியானவர் நமக்காக விண்ணப்பத்தில் உதவி செய்கின்றார். எனவே இந்த பரிந்து பேசுதலை மேன்மையாக கொண்டு அவரை நோக்கி பார்ப்போம். அவரே விசுவாசத்த்தை துவக்கிறவரும் முடிக்கிறவருமாக இருக்கிறார்.

மெய்யாகவே நாம் பாதுகாக்க படுவது அவரது கிருபையை. நமது எல்லா ஆசீர்வாதங்கள், ஆரோக்கியம், ஞானம், பாதுகாப்பு, சமாதானம், பரிசுத்தம், மீட்பு, பாவமன்னிப்பு, மோட்சம், இரட்ச்சிப்பு போன்ற எல்லாவற்றிக்கும் அடிப்படையே அந்த கிருபை தான். அந்த கிருபை இல்லாமல் வாழ முடியாதையா!

செலின்


Share this page with friends