ஈசாய் மகனுக்கு ஊசாய் மூலம் கிடைத்த உதவி!

Share this page with friends

உருவகப்படுத்திப்
பேசுவதில்
கைதேர்ந்தவர் ஊசாய்

(2 சாமுவேல் 17)

ஊசாயின் பேச்சுத்
திறமையை
வைத்து அப்சலோமை
தேவன் தோற்கடித்தார்

அகித்தோப்பேல்
இந்த விசைசொன்ன
ஆலோசனை நல்லதல்ல
என்று ஊசாய் தன்
ஓசையை எழுப்பினான்

குட்டிகளைப் பறிகொடுத்த
கரடியைப்போல
மனமெரிகிறவர்கள்
(வசனம் 8) என்று சொல்லி
தாவீதை கரடிக்கு அதிலும்
குட்டிகளைப் பறிகொடுத்த
கரடிக்கு ஒப்பனையாக
உருவகப்படுத்துகிறான்

உம் தகப்பன் யுத்த வீரன்
சிங்கத்தைப் போல
பாய்ந்து அடிக்கிறவர்

அவரோடிருக்கிறவர்கள்
பலசாலிகள் என்று
தாவீதை சிங்கத்திற்கு
ஒப்பனையாக
உருவகப்படுத்துகிறான்
(வசனம் 10)

அப்சலோமை
பெருமைப்படுத்திப்
பேசி ஒரு பெரிய சேனையை
வழிநடத்தி யுத்தத்திற்கு நீர்
முன் செல்லும்
அப்போது பனி பூமியின்மேல்
இறங்குவதுபோல அவர்மேல்
இறங்குவோம் என்று
ஆசை வார்த்தைகளைச்
சொல்லி கவிழ்த்துப் போட
திட்டம்போடுகிறான்.

(வசனம் 11)

தாவீது தனது பலசாலிகளை
உளவுத்துறை அதிகாரிகளை
போல எருசலேமில்
நிறுத்திவைத்து அப்சலோமின்
அசைவுகளை கண்காணித்து
துணிச்சலாக ராகாப் போலவே
யோனத்தானையும் அகிமாசையும்
கிணற்றின்மேல் பாயை விரித்து
மூடி பாதுகாத்த
அந்த வீட்டுக்காரியையும்
பாதுகாக்க ஏற்பாடு
செய்திருந்தான்.

தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது,
பர்சிலா பெரும் உதவிகளை
செய்து பராமரித்தான்.

மக்னாயீம் மக்கள் தேவனுடைய
பரிசாக தாவீதுக்கு
கிடைத்தார்கள்

ஆதியாகமம் 32:1,2 ல்
யாக்கோபு மக்னாயீமில்
தேவ தூதர்களைச்
சந்தித்தார்

ஆனால் அதே மக்னாயீமில்
தாவீதையும் அவனது
ஆட்களையும் சந்தித்தவர்கள்
தேவதூதர்களைப்
போல இறங்கிவந்து
ஆதரித்தார்கள்
பராமரித்தார்கள்
பாதுகாத்தார்கள்

வேதம் முழுவதிலும்
தாவீதைப் போன்ற பெரிய
தலைவர்களைப்
பாதுகாக்க பராமரிக்க
தேவன் ஏற்படுத்திக்
கொடுத்த மக்கள்
அநேகருடைய
பெயர்கள் மறக்கப்பட்டுப்
போனது.

அவர்கள் பேருக்காகவும்
புகழுக்காகவும் இப்படிச்
செய்யவில்லை

தேவன் தங்களுக்குச்
சொன்னதை செய்தார்கள்

எண்பத்தைந்து வயதையுடைய
பரிசிலாவும் அதுபோலத்தான்

அப்சலோம் யுத்தத்தில்
தோற்றுப் போவான்
என்பதை அறிந்த
அகித்தோப்பேல்
என்னும் ஆட்டுத்தோல்
போர்த்திய ஓநாய்
யூதாஸைப் போலவே
இருந்து யூதாஸைப் போலவே
நாண்டுகொண்டு செத்தான்
(மத்தேயு 27:1-5)

அகித்தோப்பேல் ராஜாவுக்கு
ஆலோசகராக இருந்தான்
அப்சலோமுக்கும்
ஆலோசனைக் கொடுத்தான்

ஆனால் தன்னுடைய
விஷயத்தில் ஞானமாய்
ஆலோசிக்காமல்
தலையிட்டு
தன் காலத்திற்குமுன்னே
காலாவதியாகிப்போனான்

இன்றைக்கு அநேகருக்கு
ஆலோசனை
கொடுக்கிறவர்களாய்
நாம் இருக்கலாம்

ஆனால் இக்கட்டான
நேரத்தில் ஞானமாய்
ஆலோசிக்காமல்
எந்தக் காரியத்திலும்
கால் வைத்துவிடக்கூடாது
WE MUST MIND OUR HEAD

மற்றவனுக்குப் போதிக்கிற நீ
உனக்குத்தானே
போதியாமலிருக்கலாமா? 

(ரோமர் 2 :21)

ஈசாய் மகன் தாவீதுக்கு 
அற்கியானாகிய
ஊசாய் என்ற மனிதனின்
உதவி மறக்கமுடியாத உதவி.


அகித்தோப்பேலின்
பைலையும்
அப்சலோமின் பைலையும்
குளோஸ் பண்ண
தாவீதுக்காக தேவன்
எழுப்பிய மனிதன்தான்
ஊசாய்
.

Rev. J. Israel Vidya Prakash B.Com., M.Div.,
Director – Literature Dept. tcnmedia.in
Radio Speaker – Aaruthal FM
NALLAASAAN – MALAYSIA -2021

மக்கள் அதிகம் வாசித்தவை:

தேர்தல் நேரத்தில் மீண்டும் தலைதூக்கிய சரக்கு பெட்டக துறைமுக பிரச்சினை - குமரியில் கிறிஸ்தவ ஆலயங்கள் ...
அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்
தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களேஎச்சரிக்கை
ஞானஸ்நானம் பெற்ற குடும்பங்கள்
கிறிஸ்தவ திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்: அமைச்சா் பி. மூா்த்தி
கிறிஸ்தவ வெளிச்சம்
பிரசங்க குறிப்பு - தேவனுக்கு உகந்த இருதயம்
கேரளாவில் 3,680 நத்தை தோடுகளில் உருவான கிறிஸ்துமஸ் ஸ்டார்
என்னை காண்பவரே என்ற தந்தை பெர்க்மான்ஸ் அவர்களது பாடல் ஔிபதிவின்போது இயக்குனர் கண்ட நெகிழ்ச்சி காட்சி...
பிறரது விழுகையில் சந்தோசம் வேண்டாம்

Share this page with friends