இயேசுவின் ஆச்சரியமூட்டும் ஜெப நேரங்கள்

ஆகையால் இனிச் சம்பவிக்கிப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷக் குமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்போதும் ஜெபம்பண்ணி விழித் திருங்கள் என்றார் (லூக்கா 21 : 36)
இந்தக் குறிப்பில் இயேசுவின் ஜெபங்களைக் குறித்து லூக்கா
சுவிசேஷத்தில் அதிக மாகக் காணப்படுகிறது. இயேசுவின் வாழ்வில் அவர் ஜெபத்திற்காக அதிகநேரம் செயல்படுத் தினார். அவருடைய ஜெபத்தை நான்கு பிரிவுகளாக பிரித்து நாம் சிந்திக்கலாம். அவர் எப்படியெல்லாம், எப்போது ஜெபித்தார் என்பதை இந்தக் குறிப்பில் கவனிக்கலாம். இயேசுவின் ஜெபங்கள் நமக்கு முன்மாதிரி.
வேத பாடம் லூக்கா சுவிசேஷம். நான்கு பிரிவுகள்
இயேசுவின் வாழ்வில் முக்கியமான சூழ்நிலைகளில் ஜெபங்கள்
இயேசுவின் ஊழியத்தின் போது ஜெபங்கள்
இயேசுவின் அற்புதங்களின்போது ஜெபங்கள்
இயேசு மற்றவர்களுக்காக ஜெபித்தபோது ஜெபங்கள்.
இயேசுவின் வாழ்வில் முக்கியமான சூழ்நிலைகளில் ஜெபங்கள்.
- இயேசு ஞானஸ்நானத்தின் போது ஜெபித்த ஜெபம் (லூக்கா : 3 : 21)
- அப்போஸ்தலர்களை தேர்ந்தெடுக்கும்போது ஜெபித்த ஜெபம் (லூக்கா : 6 : 12 , 13)
- அவர் மேசியா என்று அறிக்கையிடும்போது ஜெபித்த ஜெபம் (லூக்கா 9 : 18)
- இயேசு மறுரூபமாகும் போது ஜெபித்த ஜெபம். (லூக்கா 9 : 29)
- இயேசு சிலுவைக்குமுன் கெத்செமனையில் ஜெபித்த ஜெபம் (லூக்கா : 22 : 39 , 40)
- இயேசு சிலுவையில் ஜெபித்த ஜெபம் (லூக்கா : 23 : 46)
இயேசுவின் ஊழியத்தின் போது ஜெபித்து ஜெபங்கள்.
- இயேசு யூதத்தலைவர்களுடன் விவாதத்திற்கு முன்னதாக ஜெபித்த ஜெபம் (லூக்கா : 5 : 16)
- ” கர்த்தர் கற்பித்த ஜெபத்தை ” அளிப்பதற்கு முன்னதாக ஜெபித்து ஜெபம் (லூக்கா : 11 : 1)
- ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தபின்பு ஜெபித்த ஜெபம் (மாற்கு : 6 : 46)
இயேசுவின் அற்புதங்களின்போது ஜெபித்து ஜெபங்கள்.
- திரளான கூட்டத்தை குணமாக்கியப்போது ஜெபித்த ஜெபம் (லூக்கா : 1 : 35)
- ஐயாயிரம்பேருக்கு உணவளிப்பதற்கு முன்பு ஜெபித்த ஜெபம் (லூக்கா : 6 : 41)
- செவிடும் ஊமையுமான ஒருவனைக் குணமாக்கினபோது ஜெபித்த ஜெபம் (லூக்கா :7 : 34)
- லாசுருவை மரணத்திலிருந்து எழுப்பும் போது ஜெபித்த ஜெபம். (யோவா : 11 : 41)
மற்றவர்களுக்காக இயேசு ஜெபித்த ஜெபங்கள்.
- பதினொருவருக்காக இயேசு ஜெபித்த ஜெபம் (லூக்கா : 17 : 6 — 19)
- சபை முழுவதற்கும் இயேசு ஜெபித்த ஜெபம் (லூக்கா : 17 : 20 — 26)
- இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களுக்காக இயேசு ஜெபித்த ஜெபம் (லூக்கா : 23 : 34)
- பேதுருவுக்காக இயேசு ஜெபித்த ஜெபம் (லூக்கா 22 : 32)
இயேசுவின் ஜெபங்களை நான்கு பிரிவாகப்பிரித்து அவர் யாருக்காக
எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெபித்தார் என்பதை நாம் தியானித்தோம். இயேசுவின் ஜெப வாழ்க்கை நமக்கு முன்மாதிரி. நாம் இயேசுவை பின்பற்ற வேண்டும். இயேசு ஜெப ஆவியையும் விண்ணப்பத்தின் ஆவியையும் உங்கள் மேல் ஊற்றுவாராக.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur