இயேசுவே நமது ஜீவன்

Share this page with friends

..நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். யோவா : 10 : 10

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினடத் தில் வரான். யோவா : 14 : 6

என்றென்றும் எந்நாளும் எப்போதும் இயேசுவே நமது ஜீவனாய் விளங்குவார். அவர் நமக்கு அருளும் ஜீவனால் அனைத்து நன்மைகளையும் கிருபைகளையும் பெற்று வாழ முடியும். ” ஜீவன்” என்ற சொல்லிற்குள் அநேக ஆசீர்வாதங்கள் அடங்கி யிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் எப்படிப் பட்ட ஜீவன் என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். ” ஜீவன் ” என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி நாம் சிந்திக்கலாம்.

 1. இயேசுவின் ஜீவன் அது நித்திய ஜீவன் யோவா : 3 : 16
  1 யோ : 5 : 12 , 2 : 25
 2. இயேசுவின் ஜீவன் புதிதான ஜீவன் ரோமர் : 6 : 4. இயேசு வால் ஒரு மனிதனுக்கு ஏற்படும் மாற்றம் தான் புதிதான ஜீவன்.
 3. இயேசுவின் ஜீவன் ஆவிக்குரிய சிந்தை
  யோடுள்ள ஜீவன்
  ரோமர் : 8 : 6
 4. இயேசுவின் ஜீவன் கர்த்தருடைய ஜீவன் 2 இராஜா : 5 : 14 — 16 கர்த்தருடைய ஜீவன் நமது உத்தம குணத் தை விளக்குவதாகும் நாம் கர்த்தருடைய ஜீவனைப் பெற்று வாழ்வோம்.
 5. இயேசுவின் ஜீவன் ஜீவவார்த்தையாகிய ஜீவன். 1 யோவா : 1 : 1 , 2 ஜீவவார்த்தையாகிய ஜீவன் யார் ? அவர்தான் இயேசு. அந்த ஜீவனைப்பெற்று அவருடைய சாயலாக வாழ்வோம்
 6. இயேசுவின் ஜீவன் பரிபூரண ஜீவன் யோவா : 10 : 8 — 10 இந்த பரிபூரண ஜீவனுக்குள் எல்லா விதமான ஆசீர்வா தாங்களும் அடங்கும் இயேசு எல்லோருக்கும் பரிபூரண ஜீவானாயிருப்பார்.

இயேசு நமக்கு ஜீவனை தந்து அந்த ஜீவன் பரிபூரணப்படும்படி நமக்காக வெளிப்பட்டார் இயேசுவின் ஜீவன் நித்திய ஜீவன், புதிய ஜீவன், ஆவிக்குரிய சிந்தையோடுள்ள ஜீவன், கர்த்தருடைய ஜீவன் , ஜீவ வார்த்தையாகிய ஜீவன் , பரிபூரண ஜீவனையும்
தந்தருளுவார். இயேசவுக்கே துதி கணம் மகிமை அவருக்கே செலுத்துவோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends