தீட்டைத் தீட்டல்லவென்று தீர்ப்பெழுதியவர் இயேசுவே !

Share this page with friends

தீட்டு என்றால், அசுத்தம். குற்றமுள்ள காரியத்தை செய்வது.

மோசேயின் பிரமாணத்தில் மனுஷருக்கு உண்டாகக்கூடிய தீட்டைக்குறித்து விரிவாக கூறப்பட்டிருக்கிறது.

அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால், அவன் தீட்டும் குற்றமும் உள்ளவனாவான் (லேவி 5:2).

இறந்த மிருகத்தினாலும், குஷ்டரோகத்தினாலும், உதிரப்போக்கினாலும் இஸ்ரவேல் புத்திரர்கள் தீட்டுப்பட்டார்கள். புதிய ஏற்பாட்டுக்காலத்தில் இயேசுகிறிஸ்து மனுஷனை தீட்டுப்படுத்தும் காரியத்தை விரிவாக உபதேசித்திருக்கிறார். வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனஷனைத் தீட்டுப்படுத்தும் கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார் (மத் 15:11,17-20).

தேவன் சுத்தமாக்கினவைகளை மனுஷன் தீட்டாக எண்ணக்கூடாது! (அப் 10.15).
ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து
நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும் (ரோம 14:14). அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், (எபி 9:13).

தேவனுடைய கிருபையை இழந்துபோவது தீட்டென்று பவுல் கூறுகிறார்! ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர்முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப் போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள் (எபி 12:15,16).

தீட்டைத் தீட்டல்லவென்று தீர்ப்பெழுதியவர் இயேசுவே! ஆமென்!


Share this page with friends