The actions of evil spirits that corrupt man

யோபு ஒரு நல்ல கணவர் – குடும்பங்களுக்கான ஆலோசனை

Share this page with friends

சிறு தியானம்

(for family)

“தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” (யோபு 2:9)

யோபுவின் ஏற்ற துணையாம் அவனுடைய மனைவி, அவனைப் பார்த்து சொன்ன வார்த்தைதான் இது.

வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும், உன்னோடே இருப்பேன் என்று சொல்லித்தான் இருவரும் திருமண உடன்படிக்கை செய்திருக்க வேண்டும்.

ஆனால் தங்கள் வாழ்க்கையில் இவர்கள் சந்தித்த பெரும் போராட்ட புயல்தான், யோபுவின் மனைவியை இவ்வாறாக பேச வைத்து விட்டது.

சூழ்நிலைகள் ஒருபோதும் நம்மையும், நமது சுபாவங்களையும் பின்மாற்றத்திற்குள் கொண்டு செல்லக் கூடாது.

ஆனால் யோபு ஒரு நல்ல கணவனாக, தன் குடும்ப வாழ்வினைக் காப்பாற்றினான்..

கற்றுக் கொள்வோம்.

1.யோபுவின் அன்பில் மாற்றமில்லை.

துன்பத்திற்கு முன்பும், துன்பத்திற்கு பின்பும், வாழ்வின் இறுதிவரையிலும் யோபுவின் அன்பு தன் மனைவியின் மீது உண்மையுள்ளதாகவே காணப்பட்டது.

“கிறிஸ்துவும் தம்முடையவர்களிடத்தில், தமது மாறாத அன்பை முடிவுபரியந்தமும் காண்பித்தார்” (யோவா 13:1)

உங்கள் வாழ்க்கைத் துணையை கசந்துக் கொள்ளாதிருங்கள். (கொலோ 3:19)

அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும். (1கொரி13:4-8)

2.யோபு தன் மனைவியின் கடந்தகால சொற்களை அவளுக்கு நினைவுபடுத்தவில்லை.

தன் மனைவி தன்னைக் குறித்து சொன்ன “ஜீவனை விடும்” என்ற வார்த்தையை, திரும்பத் திரும்ப சொல்லி குற்றமனசாட்சி உள்ளவளாக அவளை மாற்றவில்லை. மாறாக, இறுதிவரை அவளோடுதான் வாழ்ந்தான், அவள் சுதந்தரமாய் உணரத்தக்க.

“கிறிஸ்துவும் நமது கடந்தகால பாவங்களை நினைவுகூறுவதில்லை” (எபி 8:12)

இரவும் பகலும் பிறர் மீது குற்றஞ் சுமத்தும் “சாத்தானின் சுபாவங்கள்” நம்மைவிட்டு ஒழிவதாக. (வெளி 12:10) இதன் விளைவாக, “மனம் திறந்து பேசுதல்” என்ற சுபாவம் குடும்பங்களில் மறைந்துபோன ஒன்றாய் மாறிவிட்டது.

3.யோபு இறுதிவரை தன் மனைவியை கைவிடவில்லை.

புது வாழ்வையும், நீடித்த ஆயுளையும் பெற்ற யோபு, புது வாழ்க்கை துணையை தேடவில்லை. மாறாக, இறுதிவரை தன் மனைவியை பராமரித்தான், பாதுகாத்தான்.

தங்கள் வாழ்வில் சில உயர்வுகளையோ, சில மேன்மைகளையோ பெற்றவுடன், தன் வாழ்க்கைத் துணையை அற்பமாகவும் கடினமாகவும் நடத்துவோர் இந்நாட்களில் ஏராளம் உண்டு.

“கிறிஸ்துவும் தமது சபையை மகிமையுள்ளதாய் மாற்றிடவும், சபையை போஷித்துக் காப்பற்றிடவும், தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்தார்” (எபே 5:27-29)

இவ்வாறாக நமது குடும்பங்கள் காணப்பட்டிருந்தால், எத்தனை விவாகரத்துகள் தடுக்கப்பட்டிருக்கும்…

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு….

Pr. Reegan Gomez
பாஸ்டர். ரீகன் கோமஸ்

மக்கள் அதிகம் வாசித்தவை:

வேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்
அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை
தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் Happyக்கு பதிலாக Merry Christmas என்று வாழ்த்துவதன் காரணம் என்ன?
கிறிஸ்துமஸ் வாழ்த்து: பெருந்தொற்றின் வலியைப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
காரைக்குடி அருகே மானகிரியில் தேவாலயம் முன்பாக கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்.
ஞாயிறு ஆராதனை நடத்த தமிழக அரசு அதிரடி அனுமதி; கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி
நாம் எங்கு உட்கார கூடாது?
சாம்பல் புதன் மற்றும் லெந்து நாட்கள் பற்றிய உண்மைகள் Ash Wednesday
உறவுகள் மேம்பட மிக முக்கிய குறிப்புகள் A to Z

Share this page with friends