Christian News in India, Christian News in Tamil Nadu

இயேசுவால் தான் உயர்ந்திருக்கிறேன் – தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பானுமதி

Share this page with friends

உச்சநீதிமன்ற நீதிபதியின் பணிக்கால நிறைவு தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பானுமதி அவர்கள் தனது பணிநிறைவில் “நான் இந்துவாக இருந்தாலும், இயேசுவின் நற்செய்தியை நம்புகிறேன். இயேசுவின் கிருபையால், நான் கல்வி கற்றேன், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தேன்.” என்று கூறிப்பிட்டு பேசியுள்ளார்.

தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பானுமதி அவர்கள் இன்று (19, ஜூலை 2020) ஒய்வு பெறுகிறார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற பார் தலைமை குழு தலைவர் சார்பில் கடந்த 17.07.2020 அன்று நீதிபதி பானுமதிக்கு பிரிவு விழா நடத்தினர். நீதிபதி பானுமதி தனது உரையை அனைவருக்கும் நன்றி தெரிவித்து தொடங்கினார். அவர் பேசியபோது, “தமிழகத்தில் ஒரு பின்தங்கிய மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் நான் பிறந்தேன். எனது 2 வயதில் எனது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது நாங்கள் இழப்பீடு கோரி மனுத் தாக்கல் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. எனது தாயார் மனுத் தாக்கல் செய்தார். நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், பல செயல்முறை சிக்கல்களாலும், போதிய உதவியின்மையாலும் எங்களால் இழப்பீட்டுத் தொகையை பெற முடியவில்லை. நீதிமன்றத்தின் தாமதத்தாலும், அதன் செயல்பாடுகளில் உள்ள வேகமின்மையாலும் நானும் எனது தாயாரும், இரண்டு சகோதரிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். கடைசி நாள் வரை எங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் மெய்சிலிர்க்கும் பல விஷயங்களை நினைப்பூட்டி பேசிய நீதிபதி பானுமதி “நான் இந்துவாக இருந்தாலும், இயேசுவின் நற்செய்தியை நம்புகிறேன். இயேசுவின் கிருபையால், நான் கல்வி கற்றேன், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தேன்.” என்று கூறினார்.

2014 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதியன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட அவர் உச்ச நீதிமன்றத்தின் ஆறாவது பெண் நீதிபதியாவார். தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி என்னும் பெருமையும் இவர்களையே சாரும்.

சுமார் முப்பது ஆண்டுகளாக நீதித்துறையில் பணியாற்றிய இவர் இந்தியாவின் மிக முக்கிய வழக்குகளை கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவம் ஒரு மதமல்ல. கிறிஸ்து ஒர மத ஸ்தாபகரும் அல்ல. மதங்களுக்கு அப்பாற்ப்பட்டு இயேசுவை ரூசிபார்த்த நீதி தேவதையை பாராட்டுகிறோம்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

வேலூர் அருகே ஊழியம் செய்தவர்களை சிறைபிடித்து அவர்கள் தலையில் விபூதி குங்குமம் பூசி அராஜகம் நடந்துள்ள...
அமித் ஷா மீது தடை: அமெரிக்க சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான ஆணையம்
ஹரியானாவில் மதமாற்ற தடை சட்டம்; மீறினால் 10 ஆண்டு சிறை
மதுரையில் மதவெறியாட்டம் ஆடியவர்களை அதிரடியாக அடக்கிய காவல்துறை
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிறிஸ்தவர்கள் சார்பில் சேகரிக்கப்பட்ட 1.50 கோடி நிதியை  தமிழக முத...
சந்தன மாலையிட்டு மக்கள் மரியாதை; இவங்களுக்கு செய்யுறதுல தப்பே இல்ல!
உலகையும் இந்தியாவையும் செப்பணிட்ட ஓர் செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு 261 வது பிறந்த நாள்
இயேசு கிறிஸ்து படம்: சமையலறையில் கிடைத்த 600 ஆண்டு பழைய ஓவியம்; 2200 கோடி ரூபாய்க்கு ஏலம்
எனக்கு அழகில்லை, திறமை இல்லை, பணம் இல்லை, வாகனம் இல்லை என்பவர்கள் இந்த வீடியோவை உற்றுப்பாருங்கள்
சாத்தான்குளம் வழக்கில் பைபிளை மேற்கோள்காட்டிய நீதிபதிகள்

Share this page with friends