பிரபல கிறிஸ்வத பாடல்களை இயற்றி பாடிய சுவி. K. S. வில்சன் தேவ ராஜ்யத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்

உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது, சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க, சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே, பரம அழைப்பின் பந்தைய பொருளுக்காய், அனாதி ஸ்சிநேகத்தால் என்னை நேசித்தீரையா, எனக்கொரு நேசர் உண்டு போன்ற பல கிறிஸ்தவ பிரபல பாடல்களை இயற்றியவர் சென்னையை சேர்ந்த சுவிஷேசகர் கே.எஸ் வில்சன்.
இவர் சில வாரங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து சில நாட்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
சுவி கே.எஸ். வில்சன் இன்று (மே 4) அதிகாலை 3 மணியளவில் தேவனுடன் இருக்கச் சென்றிருக்கிறார். இந்த கொரோனா சூழ்நிலை காரணமாக அவருக்கு சென்னையில் ஒரு படுக்கை கூட கிடைக்கவில்லை. ஆம்புலன்சிலேயே அவர் காலமானார். மருத்துவமனைகள் இல்லை, சென்னையில் ஆக்ஸிஜன் ஆதரவு படுக்கைகளில் இடம் கிடைக்கவில்லை..
தேவனின் ஒரு தாழ்மையான மனிதர், அனைவரிடமும் அன்பும் பரிவும் நிறைந்தவர். அவரது உடல்நிலை அவரது ஓட்டத்தினை தடுக்க முடியவில்லை. கடுமையான சரீர பலவீனங்களிடையே தன் கடைசி மூச்சு வரை தேவனுடைய ஊழியம் செய்து தன் ஓட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்.
என் ஆசையெல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம்தான் நான் பார்க்கனுமே என்று பாடியவர்; நம்மைப் பாடவைத்தவர், இன்று இயேசுவை முகமுகமாகக் காணச் சென்றுவிட்டார்.
அவர்கள் மறைந்தாலும் கர்த்தர் அவருக்கு கொடுத்த பாடல்கள் எல்லா சபைகளிலும் ஒலித்ததுக்கொண்டே இருக்கும்.
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.சங்கீதம் 116:15தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான்…ஏசாயா 57:1
போதகருடைய குடும்பத்திற்காக, அவர் விட்டு சென்ற ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
இவர் பாடிய சில பாடல்களின் வீடியோ காட்சிகள்..
நம் தேசத்தில் சமீப நாட்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த வியாதியினால் பாதிக்கப்படுவதையும், ஒவ்வொரு நாளும் ஏராளமான ஊழியர்கள் மரித்துக்கொண்டிருப்பதையும் கேள்விப்படுகிறோம். இநநிலை மாற பாராத்தோடு ஜெபித்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.