உங்கள் போதகரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்

சபை விசுவாசிகள் நீங்கள் போகிற சபையின் மேய்ப்பனை பற்றி உங்கள் வீட்டிலே அவமதிக்கும் வகையில் உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக அவரைப் பற்றி பேசாதீர்கள். அது உங்கள் பிள்ளைகளை இடறலடைய பண்ணிவிடும் எச்சரிக்கையாகயிருங்கள்.
ஒரு சபை விசுவாசிகள் தங்களை நடத்துகிற ஊழியக்காரர் மேல் அன்பு செலுத்துகிறவர்களாகவும், ஊழியக்காரை இரட்டிப்பாக கனப்படுத்துகிறவர்களாகயும் இருக்கவேண்டும்.
சபை விசுவாசிகளுக்கு ஒரு எச்சரிப்பை நான் உங்களுக்கு அன்பாக சொல்லுகிறேன்; நான் இங்கேயிருக்கிற ACA விசுவாசிகளுக்கு மாத்திரமல்ல நீங்கள் உலகத்திலே எந்த சபைக்கு போகிறீர்களோ நான் தாழ்ழையாக சொல்லுகிறேன்.
நீங்கள் ஒரு சபைக்கு போய்ட்டு அங்கே ஒரு ஊழியனிடத்திலே நீங்கள் போதகத்தையும், மேய்ச்சலையும் கண்டடைகிறீங்க அப்படின்னு சொன்னா நீங்கள் அவர்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்களாக, முழுமனதோடு கனம்பண்ணுகிறவர்களாக இருந்தால் மட்டும் அந்த சபைக்கு போங்க அல்லது அந்த சபைக்கு போகாதீங்க.
நீங்கள் மதிக்கிற வேற ஒரு ஊழியக்காரனிடத்திலே போய்விடுங்கள் சும்மா போய் உட்காராதீங்க அது அந்த ஊழியத்திற்கு ஆசீர்வாதமாகவே இருக்காது.
நான் இன்னும் ஒரு காரியத்தை சொல்லுகிறேன். விசுவாசிகள் உங்கள் வீட்டிலே நீங்கள் போகிற சபை ஊழியனை பற்றி அவமதிக்கிற வார்த்தைகளையோ, அவர் சரியில்ல, அவர் பிரசங்கம் சரியில்ல, அவர் போதனை சரியில்ல, அவர் நல்லாயில்ல, அவர் ஏமாத்தாரு, அவர் பொய் சொல்றாரு, அவர் திருடுகிறாரு, அவர் அப்படி பண்ணறாரு, அவரு என்னனென்னமோ எல்லாம் பேசுறாரு என்று சொல்லி இப்படியெல்லாம் உங்கள் வீட்டிலே உட்கார்ந்து உங்கள் பிள்ளைகள் முன்பாக பேசாதீர்கள்.
அது உங்களுக்கு ஒன்னும் பிரச்சனையில்லை அதை உங்கள் பிள்ளைகள் கேட்கும்போது உங்க சபை ஊழியரின் பிரசங்கத்தை உங்கள் பிள்ளைகள் கேட்கமாட்டார்கள். கர்த்தரே பேசினால் கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அவர்களுக்கு அவங்க அப்பா, அம்மா சொன்னதுதான் ஞாபகத்தில் இருக்கும். அதுபோல ஒரு தகப்பனும், தாயும் எந்த சபைக்கு போகிறார்களோ அந்த ஊழியனை மதித்து அவர் சொல்லுகிற வார்த்தையை தேவனுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டு அவருக்கு மரியாதை செலுத்துவதை அவர்கள் பிள்ளைகள் கண்டார்களானால் அவர்களும் அந்த ஊழியனுக்கு மரியாதை செலுத்துவார்கள்.
🆕 LIVE | 40 Days Fasting Prayer |December 4, 2020 | Day 25 |
Pastor. Gabriel Thomasraj