நியாயமான பயம்! வித்யா’வின் விண் பதிவு !

Share this page with friends

பயத்தில்
நியாயமான பயம்
என்று ஒன்று உள்ளது  

தண்ணீரைக்
கண்டால்
பயம்  

உயரமான இடத்திற்குச்
செல்ல
பயம்    

பூட்டப்பட்ட அறைக்குள்
இருக்க
பயம்

இன்னும் சிலருக்கு நாயைக்
கண்டாலே
பயம்

மற்ற மனிதர்களை
பார்க்க சிலருக்கு பயம்

ஆனால்
ஒருவித “பயம்” இருக்கிறது;
அந்த பயம் எல்லா பயத்தையும்
புறம்பே தள்ளிவிடும்.


அந்த பயத்தைப் பற்றி
சங்கீதம் 112:1– ல்
எழுதப்பட்டுள்ளது

அல்லேலூயா,
கர்த்தருக்குப் பயந்து,
அவருடைய கட்டளைகளில்
மிகவும் பிரியமாயிருக்கிற
மனுஷன் பாக்கியவான்”
 
கர்த்தருக்குப் பயப்படுகிற
பயம் எல்லா பயதையும்
நம்மைவிட்டு அகற்றிவிடும்”

“நியாயமான பயங்களில்
முதலாவது வருவது 
குடும்பத்தைக் குறித்த பயம்”

(FAMILY FEARS)

அவன் சந்ததி பூமியில்
பலத்திருக்கும்,
செம்மையானவர்களின் |
வம்சம் ஆசீர்வதிக்கப்படும்”.

(சங்கீதம் 112:2)   

ஒருவேளை
உங்கள் குடும்பத்தைக்
குறித்து நீங்கள்
பயந்துகொண்டு
இருப்பீர்களானால்
இந்த வசனத்தை
வாய்விட்டு வாசியுங்கள்.

கர்த்தருக்குப் பயப்படுகிற
உங்கள் சந்ததியைக்
குறித்து
தேவன் சொல்லுகிறார்
உங்கள் சந்ததி
பூமியில் பலத்திருக்கும்
” என்று.

அதுமாத்திரமல்ல,
கர்த்தருக்கு நீங்கள்
உண்மையாய்
பயந்து பொல்லாப்புக்கு
விலகுவீர்களானால்
செம்மையானவர்களான
உங்கள் சந்ததி அல்லது
வம்சம் ஆசீர்வதிக்கப்படும்
என்கிறார்.

எனவே
சந்ததியை பலத்திருக்க
செய்யும் கர்த்தருடைய
கரங்களில் உங்கள் குடும்பத்தை
பிள்ளைகளை ஒப்புக்கொடுங்கள்.

அப்படி ஒப்புகொடுத்திருக்கும்போது
நீங்கள் அவர்களது எதிர்காலத்தைக்
குறித்து பயப்படவேண்டிய
அவசியம் இல்லை.

இரண்டாவது
பொருளாதாரத்தைக்
குறித்த பயம்

(Financial Fears)

சிலருக்கு
Financiar-களைக்
குறித்து பயம்

ஆனால்
கர்த்தருக்குப்
பயப்படும் பயமானது
குடும்பத்தைக் குறித்த
பயத்தை மட்டுமல்ல,
குடும்ப பொருளாதாரத்தைக்
குறித்த பயத்தையும்
அடியோடு அகற்றிவிடும்.


ஆஸ்தியும் ஐசுவரியமும்
அவன் வீட்டிலிருக்கும்;
அவனுடைய நீதி
என்றைக்கும் நிற்கும்
” என்று
சங்கீதம் 112:3 ல்
எழுதப்பட்டுள்ளது.

Wealth and riches
will be in his house.


அதுக்காக,  
பச்சைமரப்
பணக்காரனைப் போல   

இருக்கவேண்டும் என்ற
அவசியமில்லை.

ஆஸ்தியும் ஐஸ்வரியமும் அவன்
வீட்டில் இருக்கும் என்றால்
அன்றன்று தேவைகள்
சந்திக்கப்பட்டால் போதும்
கடனில்லாமல்
கஞ்சி குடிக்கிறவன்தான்
பெரிய ஐசுவரியவான்


போதும் என்கிற மனதுடன்
கூடிய தேவ பக்தியே
மிகுந்த ஆதாயம்


உலகத்திலே நாம் ஒன்றும்
கொண்டுவந்ததுமில்லை
இதிலிருந்து நாம் ஒன்றும்
கொண்டுபோவதுமில்லை
என்பது நிச்சயம்.

உண்ணவும்
உடுக்கவும் நமக்கு
உண்டாயிருந்தால் அது
போதுமென்றிருக்கக்கடவோம்

(1 தீமோ. 6:6-8)

சிலருக்கு இருளைக் குறித்து
பயம்
(Some fear the dark)
செம்மையானவர்களுக்கு
இருளிலே வெளிச்சம் உதிக்கும்;

அவன் இரக்கமும் மனஉருக்கமும்
நீதியுமுள்ளவன்
” (Psalms 112:4)

நீங்கள் கர்த்தருக்கு
பயப்படும்போது,
எப்போதும் உங்களுக்கு ஒரு
வெளிச்சம் உண்டு.
அந்த வெளிச்சத்தில்
பயம் குடிகொள்ள முடியாது.


கர்த்தருடைய வெளிச்சத்தில்
உங்களுக்கு
வழிகாட்டுதல் உண்டு
ஆலோசனை உண்டு.

சிலருக்கு
எதிர்காலத்தைக் குறித்தும்
மாறிக்கொண்டிருக்கிற
உலகத்தைக் குறித்தும் பயம்

(Some fear the future and change)
 
அவன் என்றென்றைக்கும்
அசைக்கப்படாதிருப்பான்;

நீதிமான் நித்திய
கீர்த்தியுள்ளவன்
(Psalms 112:6)

உங்களுக்குள்ளும்
உலகத்திலும்
உண்டாகிற மாற்றங்களைக்
குறித்து ஒருபோதும்
பயப்படாதீர்கள்

நாம் வாழும்
இந்த பூமிக்கு பெயர்
மறதியின் பூமி
(சங்கீதம் 88:12)

இது நிமிடத்திற்கு நிமிடம்
மாறுகிற உலகம்

கர்த்தர் சொல்லுகிறார்
நான் சர்வலோகத்தின்
ஆண்டவர்,
எனவே, எனக்கு
பயப்படுவாயானால்
நான் எல்லாவித மாற்றங்களையும்
உனக்கு சாதகமாக்கிவிடுவேன்

நீ எதைக் குறித்தும் பயப்படாதே
என்கிறார்.

கடைசியாக சிலருக்கு
துர்செய்திகளைக் குறித்து
பயம் இருக்கிறது. (Bad News)

24 மணிநேரமும்
அண்மைச் செய்திகள்
அதிரவைக்கும் செய்திகள்
Breaking News / Fraud News

Bad News, என்று
பல்வேறு செய்திகள்
மனுக்குலத்தை
அசைத்துக் கொண்டிருக்கிறது

துர்ச்செய்தியைக் கேட்கிறதினால்
பயப்படான்; அவன் இருதயம்
கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்”

(வசனம் 7)  

நீங்கள் தேவனுக்குள்
நடக்கும்போது
எந்த துர்செய்தியும் உங்களை
பயப்படுத்த முடியாது
.

கர்த்தருக்கு பயப்படுகிற பயம்
மற்ற எல்லா பயத்தையும்
மேற்கொள்ளும். |

இன்றுமுதல் கர்த்தருக்குப்
பயந்து நடவுங்கள்.


உங்கள் எதிர்காலத்தை அவர்
ஒளிமயமாக்குவார்  

அவர் உங்களுக்கு
பயமில்லாத சமாதானத்தைத்
தருவார்.

குடும்பத்தைக்குறித்த பயம்,
பொருளாதாரத்தைக் குறித்த பயம் ,
இருளைக் குறித்த பயம்,
இருண்ட உலகத்தைக்
குறித்த பயம்,
எதிர்காலத்தைக் குறித்த பயம்  
துர்செய்திகளைக் குறித்த  பயம்!

எல்லா பயத்தையும்
அடியோடு அகற்றக்கூடியது
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்


அந்த பரிசுத்த
பயத்தை
வளர்த்துக்கொள்வோம்

கர்த்தர் நம்மை
வாழ்ந்திருக்கச் செய்வார்.

பாஸ்டர்
இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
B.Com., M.Div.,
இயக்குனர் -இலக்கிய துறை
தமிழ் கிறிஸ்டின் நெட் ஒர்க்
வானொலி செய்தியாளர்:
ஆறுதல் FM

Share this page with friends