கோவில்பட்டியில் தவக்கால திருயாத்திரை நடைப்பயணம்
கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலயத்தில் இருந்து தவக்கால திருயாத்திரை நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

15th March 2021
கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு புனித சூசையப்பா் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து பாடுகளை தியானித்து சிலுவைப் பாதை நடைபெற்று, திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தவக்கால திருயாத்திரை நடைப்பயணம் புனித சூசையப்பா் ஆலய வளாகத்தில் இருந்து ஆலயப் பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் தலைமையில், புதுகிராமம் செல்வ மாதா ஆலயம் நோக்கி புறப்பட்டது.
நடைப்பயணம் செல்வ மாதா ஆலயம் சென்றடைந்ததும், அங்கு பங்குத்தந்தைகள் திருப்பலி நிறைவேற்றினா். இதில், அருள்சகோதரிகள், கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலயத்தின் கிளை பங்கு இறைமக்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
Thanks: dinamani.com