குறை குடம் கூத்தாடும்

இன்றைக்கு அநேக சபைகளில் ஊழியர்கள், விசுவாசிகள் (ஆண்கள் & பெண்கள்) ஆராதனை என்ற பெயரில் நடனம் ஆடுவதை காணலாம்.
கிழே உள்ள வசனங்களை படித்து பாருங்கள்:-
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
எபேசியர் 4:12
அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.
எபேசியர் 4:13
சபை என்பது செருப்பு (shoe) போட்டு டான்ஸ் (dance) ஆடும் இடம் அல்ல. சபை என்பது பரிசுத்தம் அடையும் இடம், பக்திவிருத்தி அடையும் இடம். அதற்காகதான் ஊழியர்களை ஏற்படுத்தினார்.
கடந்த வாரம் ஒரு ஊழியர் இடம் இந்த காரியத்தை (dance) குறித்து பேசினேன். அந்த ஊழியர் கூறினார் Dance ஆடினால்தான் brother சபைக்கு கூட்டம் வரும், கூட்டம் கூடினால் பாஸ்டருக்கு வருமானம் வரும். உங்களுக்கு இது தெரியாதா என்றார்.
கடைசி நாட்களில் மனுஷர் தற்பிரியராக, பணப்பிரியராக காணப்படுவார்கள் (1 தீமோ 3:1-4) என்பது எவ்வளவு உண்மை.
ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்கிறவனானால் என்னை பின்பற்றக்கடவன் (யோ 12:26) என்றார் இயேசு. ஊழியம் செய்கிற தேவ பிள்ளைகள் இயேசுவை பின்பற்ற வேண்டும். இயேசு ஊழியம் செய்யும் போது எந்த இடத்திலும் dance ஆடவில்லை. ஆ எவ்வளவு பரிசுத்த ஜீவியம்.
தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்தை வீட்டு விலகுவார்கள் 2 தீமோ 4:3-4
தேவ ஐனமே இப்படிபட்ட dance உங்கள் சபையில் காணபட்டால் நீங்கள் அந்த சபைக்கு செல்ல வேண்டாம். வேறு சபைக்கு (dance இல்லாத சபைக்கு) செல்லுங்கள். Dance ஆடும் கூட்டங்களுக்கு செல்ல வேண்டாம்
நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்ய வேண்டும் எபிரேயர் 12 :28
CSI, ECI, RC போன்ற சபைகளில் இந்த dance இல்லை. அதற்காக என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். ஆனால் அதில் இருந்து பிரிந்து ஆவிக்குரிய சபை என்று சொல்லிக் கொள்ளும் அநேக சபைகளில் இந்த dance காணப்படுவது எவ்வளவு வேதனயான காரியம்.
புற ஜாதியார் தங்கள் தெய்வத்தின் முன் நடனம் ஆடுவார்கள். கோவையில் April, May மாதம் வந்தால் போதும், எல்லா விக்கிரக கோயில்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விக்கிரகங்கள் முன்னால் ஆடுவதை பார்க்கலாம். இதே ஆட்டம் பாகால் தீர்க்கதரிசிகள் ஆடினதை நாம் வேதாகமத்தில் 1 இராஜா 18-16 ல் காணலாம். இந்த ஆட்டம் தற்சமயம் ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகளில் காணப்படுவது வேதனைக்குரியது. நமது தமிழ் ஞானிகள் “குறை குடம் கூத்தாடும்” என்று சொல்லியது எவ்வளவு உண்மை.
புறஜாதிகளுடைய மார்க்கத்தை கற்றுக் கொள்ளாதிருங்கள் (ஏரே 10:2)
ஊழியர்களே உங்கள் சபையில் யாரையும் dance ஆட அனுமதிக்காதிர்கள். Dance ஆடும் ஊழியர்களை உங்கள் சபைக்கு அழைக்காதிருங்கள். கர்த்தர் வருகையில் காணப்பட மிகுந்த பரிசுத்தம் தேவை. சபையை கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுத்துங்கள்