ஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம் – போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

Share this page with friends

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

ரோம்,

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். ரோம் நகரில் உள்ள தேவாலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

வேட்டிகன் நகரில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தன்று சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக குறைவான அளவில் மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இன்றைய கிறிஸ்துமஸ் செய்தியை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாசித்தார். அப்போது அவர், “இறைமகன் இயேசு கிறிஸ்து நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் தான் இன்றைய தினத்தில் அவதரித்தார். இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார். 

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை நாம் வெளிப்படுத்துவோம். இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நமது உடைமைகள் மீதான முடிவற்ற ஆசை மற்றும் இடைக்கால இன்பங்களைத் தொடராமல், நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டும்” என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறினார். 

இத்தாலியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பொது மக்கள் வேட்டிகன் தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இன்றைய பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு நடத்தினர்

நன்றி: தினதந்தி (25.12.2020)

மக்கள் அதிகம் வாசித்தவை:

தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்
ஸ்டிரா' பயன்படுத்த பாதிரியார் கோர்ட்டை அணுகினார்: சிறை நிர்வாகிகள் இரக்கத்தை இழந்துவிட்டார்களா?
பைபிளும் மொபைலும்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள்...
பாதத்தைக் காணிக்கைப் பெட்டியாக்கிய சபையார் வித்யா'வின் பார்வை
யாருக்கு மேன்மை?
Merry Christmas: வாழ்த்துகளை உறவினர்களுடன் பகிர வேண்டுமா? அப்போ இதை செக் பண்ணுங்க!
கழுதையினால் வந்த வாழ்வு! வித்யா'வின் பதிவு
கனவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது என்னென்ன?
இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு

Share this page with friends