church live streaming guide

பரிபூரணத்தை நோக்கி பயணிப்போம் வாருங்கள் !

Share this page with friends

church live streaming guide

பிரசங்க குறிப்பு

ஏனென்றால், தேவத்துவத்தின்பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாகஅவருக்குள் வாசமாய்இருக்கிறது. மேலும் சில துரைத் தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற
அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
(கொலோ : 2 : 9 , 10)

நாம் தேவத்துவத்தின் பரிபூரணத்தை நோக்கி பயணம் செய்யலாம்
என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம். தேவத்துவத்தின்
பரிபூரணம் என்னென் பதை இதில் அறிந்து பயனிப்போம்.

  1. ஜீவனில் பரிபூரணம். திருடர்கள் ஜாக்கிரதை.

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன்
அது பரிபூரணம் படவும்வந்தேன். திருடன் திருடவும் கொல்லவும் வருகிறான் ஆனால் நம்முடைய ஆண்டவர் நமது ஜீவன் பரிபூரணமடைய வந்தார். ஆகவே நாம் இந்த தேவத்துவத்தில்
பரிபூரணமடைந்து பயணிக்கலாம்.

  1. ஆனந்தத்தில் பரிபூரணம் தேவ சமுகம் அவசியம்.

ஜீவ மார்க்கத்தை எனக்குத் தெரியப் படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும் உம்முடைய வலதுபரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு. (சங் : 16 : 11.) தேவசமுக்கத்தில் பரிபூரண ஆனந்தம் இருக்கிறபடியால் தேவசமுகம் என்ற தேவத்துவத்தில் பயனிக்கலாம். நாம் பரிபூரண ஆனந்தத்தை
பெற்றுக் கொள்வோம்.

  1. ஆசீர்வாதத்தில் பரிபூரணம். உண்மையுள்ளவனாக இருங்கள்.

உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்…..
(நீதி : 28 : 20)

உண்மையுள்ளவர்களாக இருந்து
ஆசீர்வாதத்தில் பரிபூரணமடைவோம்.
உண்மை என்ற தேவத்துவத்தில் பயனித்து ஆசீர்வாதத்தில் பரிபூரணம் அடைவோம்.

  1. அனைத்திலும் பரிபூரணம். மனதை திருப்பிக்கொள்.

நீயோ மனந்திரும்பி கர்த்தரின் சத்தத்திற்கு செவிக்கொடுத்து, நான் இன்று உனக்கு கற்பிக் கிற அவருடைய எல்லா கற்பனைகளின்படியும் செய்வாய். அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கை செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண
முண்டாகச் செய்வார்
(உபாக : 30 : 8 , 9) மனதை திருப்பி அனைத்திலும் பரிபரணமடைவோம். மனதை திருப்பி இதன் தேவத்துவத்தில் பரிபூரணமடைந்து பயனிக்கலாம்.

இந்தக் குறிப்பில்
தேவத்துவத்தில்
பரிபூரணமடைந்து
நாம் பயனிக்கலாம்.
நாம் ஜீவனில்
பரிபூரணமடைவோம்.
நாம் ஆனந்தத்தில்
பரிபூரணமடைவோம்.
நாம் ஆசீர்வாதத்தில்
பரிபூரணமடைவோம்.
நாம் அனைத்திலும்
பரிபரணமடைவோம்.

இப்படிப்பட்ட தேவத்துவத்தில் நாம் எல்லோரும் பயனித்து தேவ நாமத்தை மகிமைப்படுத்துவோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends